/* */

characters of virgo in tamil-நீங்கள் கன்னி லக்னத்தில் பிறந்தவரா..? அப்ப உங்க குணம் இப்பிடித்தான்..!

characters of virgo in tamil-ஆன்மிகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் ஜாதகம் கணிக்கப்படும் விதத்தில் துல்லியமாக இருக்குமேயானால் ஜாதகருக்கு கூறப்படுவதும் சரியாகவே இருக்கும்.

HIGHLIGHTS

characters of virgo in tamil-நீங்கள் கன்னி லக்னத்தில் பிறந்தவரா..? அப்ப உங்க குணம் இப்பிடித்தான்..!
X

characters of virgo in tamil-கன்னி லக்கினக்காரர்களின் குணாதிசயங்கள்.(கோப்பு படம்)

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்னம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.

characters of virgo in tamil


ஒவ்வொரு லக்னக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்?

அடக்கம் மிக்கவர்கள்

கன்னி லக்னத்தின் அதிபதி புதன் ஆகும். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமென்றால் அப்படி ஒரு அடக்கமாக இருப்பார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருப்பார்கள். ஒரு காரியத்தை அவர்களிடம் ஒப்படைத்தால் அதில் கண்ணும் கருத்துமாக இருந்து அதை நிறைவாக முடித்துக் காட்டுவார்கள். எதையும் முன்னின்று முடிக்கும் ஆற்றலும் விவேகமும் அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். நல்ல பண்பு நலன், ஒழுக்கம், பிறர் மெச்சும் நல்ல நடத்தை போன்ற சிறப்பு தகுதிகளும் அவர்களிடம் உயர்ந்து காணப்படும். பொதுவாகவே இவர்கள் எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் என்று பெயர் எடுப்பார்கள்.

characters of virgo in tamil

பணக்காரராவார்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். ஆதலால் எளிதில் பொன், பொருள், வீடுபேறு என்று சொத்து சேர்த்து பெரும் பணக்காரர் ஆகிவிடுவார்கள். நட்பு வட்டம் அதிகம் கொண்டவர்கள். நிறைய சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் அதை செயல்படுத்துவதில் சாதூர்யத்தனமும் நிறைந்தவர்களாக விளங்குவார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் நன்றாக இருந்தால் இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். வாழ்க்கை முழுக்க யோகசாலிகளாக வாழ்வார்கள்.

படிப்பிலும் வியாபாரதத்திலும் கெட்டி

இவர்களில் பெரும்பாலோனோர் சிவந்த மேனியை கொண்டிருப்பர். இவர்கள் சுறுசுறுப்பான எண்ணம் உடையவர்கள். நிச்சயமாக வாழ்க்கையில் தனக்கென ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொள்வார்கள். அதன்படியே வாழ்வார்கள். படிப்பு விஷயத்தில் அதி புத்திசாலிகள். ஒரு விஷயத்தை பற்றித் தெரியவில்லை என்றாலும் அதை கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். வியாபாரத்திற்க்கு தேவையான நல்ல தகுதியும் திறமையும், இவர்களுக்கு இருக்கும். புது புது யுக்திகளை வியாபாரத்தில் புகுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

characters of virgo in tamil

செயல் வீரர்கள்

கன்னி லக்னக்காரர்கள் பேசுவது குறைவாகத்தான் இருக்கும். ஆனால் செயலில் புலி. இவர்கள் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் இவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆன்மிக பணிகளில் இவர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கும். அயல் நாடுகளுக்கு செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. உறுதியான மனம் படைத்தவர்களாக இருப்பார்கள்.


புகழ் மிக்கவர்கள்

இவர்களின் வாழ்க்கையில் மத்திய பருவத்தை விட குழந்தை பருவம் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்வின் மத்திய பகுதியில் இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களை காண்பார்கள். இதனால் நல்ல பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள். கன்னி லக்னக் காரர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவ்வளவு எளிதாக எடைபோட்டுவிட முடியாது. பிறர் அதை அறிந்து கொள்வது சாதாரணமானதல்ல. நெருக்கமானவர்களிடம் மட்டுமே சகஜமாக பேசிப் பழகுவார்கள்.

Updated On: 24 May 2023 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...