/* */

characters of leo in tamil- நீங்க சிம்ம லக்னத்தில் பிறந்தவரா..? உங்க குணத்தை தெரிஞ்சுக்கங்க..!

characters of leo in tamil-ஒருவர் பிறக்கும்போதே அவர்கள் எப்படி வாழ்வார்கள்? அவர்களின் குணம் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் ஜோதிட சாஸ்திரம் துல்லியமாக கணித்துவிடும்.

HIGHLIGHTS

characters of leo in tamil- நீங்க சிம்ம லக்னத்தில் பிறந்தவரா..? உங்க குணத்தை தெரிஞ்சுக்கங்க..!
X

characters of leo in tamil-சிம்ம லக்னக்காரர்களின் குணாதிசயங்கள்.(கோப்பு படம்)

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்னம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.

characters of leo in tamil


ஒவ்வொரு லக்னக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?

மரியாதைக்குரியவர்

சிம்ம லக்னத்தின் அதிபதி சூரியன். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமானவர்கள். இவர்களைக் கண்டு பிறர் பேசுவதற்கே தயங்குவார்கள். மரியாதைக்குரியவராக இருப்பார்கள். கூர்மையான புத்தியுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், முன் கோபம் அதிகமாகவே இருக்கும். சிம்மம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருப்பார்கள்.

கோபமும் பிடிவாதமும்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் வசதி வாய்ப்புகளுடன் நன்றாக வாழ்வார்கள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களிடம் கோபமும், பிடிவாத குணமும் அதிகம் இருக்கும். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அது போலவே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

characters of leo in tamil


கவர்ச்சியாக இருப்பார்கள்

இவர்கள் கவர்ச்சியான மற்றும் அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி இவர்களின் அடிப்படை குணம். பெரியவர்களிடம் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார்கள்.

கொள்கையில் உறுதி

இவர்களுக்கு அதிக நண்பர்களும், உறவினர்களும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடும் உயர்ந்த இடத்தில இருப்பார்கள். ஒரு மாபெரும் கூட்டத்துக்கு தலைவராக இருப்பார்கள். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியானவர்கள். எதிலும் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக நடக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் கலைகளிலும், இசையிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்நம்பிக்கை அதிகம் உள்ளவர். இவர்கள் தங்கள் பெற்றோரின் மீது மிகுந்த பாசம் உள்ளவர்கள்.


செயலில் உறுதி

இவர்கள் பிரபலமானவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு அரசியலிலும் சமுதாயத்திலும், நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட செயல்களில் உறுதியுடன் இருப்பார்கள். இவர்களை பின்னால் இருந்து கவிழ்க்க ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும். தற்புகழ்ச்சியில் அதிக நாட்டம் கொண்டவர்கள். சிற்றின்ப பிரியராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் எல்லா விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள்.

characters of leo in tamil

சம்பந்தமில்லாத வேலை

இவர்கள் படித்த படிப்பிற்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தம் இருக்காது. ஆனாலும் செய்யும் வேலையில் சாதனையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் செலவுகளை பற்றி கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள். கடன் வாங்குவது இவர்களுக்கு பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை சரியாக திருப்பி செலுத்தி விடுவார்கள். இவர்கள் பிறருடன் அனுசரித்து செல்வது என்பது மிகவும் கடினம்.

Updated On: 29 May 2023 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது