/* */

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? உங்க குணம் இப்பிடித்தான் இருக்கும்..!

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்களாம். முக மலர்ச்சிக்கு சிரிப்பு முக்கியம் இல்லீங்களா..!

HIGHLIGHTS

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..? உங்க குணம் இப்பிடித்தான் இருக்கும்..!
X

characters of Gemini in tamil-மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் (கோப்பு படம்)

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்னம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.

characters of Gemini in tamil


ஒவ்வொரு லக்னக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும்?

மகிழ்ச்சியே வாழ்க்கை

மிதுன லக்னத்தின் அதிபதி புதன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் மாநிற உடல் வாகு பெற்றிருப்பார்கள். எப்போதும் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கற்பனை வளம் பெற்றிருப்பார்கள். கணிதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். சிற்றின்பங்களில் நாட்டம் அதிகம் கொண்டவர்கள். நல்ல கம்பீரமாகவும், மிடுக்கான தோற்றமும் உடையவராக இருப்பார்கள். யார் இதைச் சொன்னாலும் நம்பிவிட மாட்டார்கள். சொல்லப்பட்டதை அலசி ஆராய்ந்து அது உண்மையா பொய்யா என்பதை தெளிவாக்கிக்கொள்வார்கள்.

characters of Gemini in tamil

சிரித்த முகம்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் புன்னகை பூத்து இருப்பப்ர்கள். அதனால் பலரும் அவர்கள் மீது மரியாதை வைத்திருப்பார்கள். பேச்சில் கெட்டிக்காரர்கள். எதையும் பேசியே சாதித்து விடுவார்கள். செல்வம் ஈட்டுவதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள்.

எல்லா சுகங்களும் அனுபவிக்கனும்

வாழ்க்கையின் முற்பகுதியில் சிறப்பான வாழ்க்கை இருக்காது. வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வச் செழிப்புடன் சிறப்பாக வாழ்வார்கள். எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்து வாழ வேண்டும் என்னும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உழைக்கவும் செய்வார்கள். இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றிபெறாமல் விடமாட்டார்கள்.

ஆனால், ஒரே ஒரு குறை இருக்கும். அதாவது எந்த காரியத்தை எடுத்தாலும் ஒரே மூச்சில் செய்து முடிக்க மாட்டார்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வோமே அதுபோல இதைக்கொஞ்சம் பின்னர் அதை கொஞ்சம் என்று மொட்டை போடுபவர்கள் பாதிப்பதியாக விட்டதுபோல ன்பது போலதான் இவர்களின் மனநிலை இருக்கும். ஆனால் இந்த குறையை மட்டும் அவர்கள் மாற்றிக்கொண்டால் இவர்கள் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள்.

characters of Gemini in tamil

சுயமரியாதைக் காரர்கள்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் புகழ்ச்சியோடு வாழவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். தன் குடும்பத்தை சிறப்பாக வாழவைப்பதற்கு கடுமையாக உழைப்பார்கள். சுய மரியாதை, சுயகௌரவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுயமரியாதையை சீண்டும் விதமாக யாராவது இவர்களை மரியாதைக் குறைவாக நடத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பதுடன் சமூகத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்கும்.


பல்கலை வித்தகர்

கல்வி மற்றும் கலையில் வித்தகராக இருப்பார்கள். விஞ்ஞான அறிவையும், கலை அறிவையும் பெற்று சிறப்பானவராக விளங்குவார்கள். இவர்களது குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் அல்லது பிரச்னைகள் ஏற்படலாம். இவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கைத் துணை இவர்களின் எல்லா செயல்பாடுகளையும் அல்லது இவர்களது விருப்பங்களையும் ஏற்று இணக்கமாக வாழ்வார்கள் என்பது உறுதியாக இருக்காது. இவர்களிடம் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் ஒருசேர இருக்கும். அதனால் எதையும் சாதிப்பவர்களாக இருப்பார்கள். புதிய விஷயங்களைத் தேடித்தேடி கற்றுக்கொள்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர்கள்.

characters of Gemini in tamil

இவர்கள் உடல் ஆரோக்யத்தை பராமரிப்பதில் சிறப்பானவர். முதலில் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் நல்ல, உடல்வாகும், உறுதியான மற்றும் நம்பிக்கையான மனநிலையையும் பெற்றிருப்பார்கள்.

Updated On: 30 May 2023 5:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?