characters of cancer in tamil-நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவரா..? அப்படின்னா உங்கள் குணங்கள் இதுதான்..!
characters of cancer in tamil-லக்ன பலன் அடிப்படையில் கூறப்படும் குணாதிசயங்கள் பலருக்கு சரியாகவே பொருந்திப்போகும். சாஸ்த்திர நூலின் கணிப்பு அப்படி.
HIGHLIGHTS

characters of cancer in tamil-கடக லக்னக்காரர்களின் குணாதிசயங்கள் (கோப்பு படம்)
சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்னம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.
characters of cancer in tamil
ஒவ்வொரு லக்னக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?
உள்ளத்தால் தூய்மை
கடக லக்னத்தின் அதிபதி சந்திரன். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடல் மற்றும் உள்ளத்தால் தூய்மையானவர்கள். இவர்கள் அழகான தோற்றம் கொண்டு கவர்ச்சியான உடல் அமைப்பை பெற்று இருப்பார்கள். வாக்குச் சாதுர்யம் என்று சொல்வோமே அது இவர்களிடம் மிகுந்திருக்கும். இவர்கள் லட்சியத்தை அடைவதற்கு கடுமையாக உழைப்பார்கள்.
சாதிக்கும் எண்ணம்
புதிது புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள். இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மையுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் எதை எடுத்தாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஓங்கிக்கிடைக்கும்.
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்கள் நலன் குறித்த சிந்தனை அதிகம் கொண்டவர்கள். பெரிய ஆசைகள் எல்லாம் மனதுக்கும் பூட்டி பத்திரமாக வைத்திருப்பார்கள். அடஙக ஆசைகளை அடைய உழைப்பவர்களாகவும் இருப்பார்கள்.
characters of cancer in tamil
தானம் தர்மம்
தானம் தர்மம் செய்வதில் தன்னைவிட யாரும் இருந்துவிடக்கூடாது என்று எண்ணும் அளவுக்கு வாரி வழங்கும் சிந்தனை உள்ளவர்கள். பொருட் செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆனால் இவர்களிடம் உள்ள ஒரே குறை திருமண வாழ்க்கை இவர்களுக்கு புதிராகவே இருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்துப் போகும் மனப்பான்மை இருக்காது. அதனால் குடும்ப வாழ்க்கையில் குழப்பமாகவே இருக்கும்.
characters of cancer in tamil
தண்ணீர் என்றால் சிறுபிள்ளை ஆவார்கள்
செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைப்படுவார்கள். கடக லக்னக்காரர்களுக்கு தண்ணீர் என்றால் கொள்ளைப்பிரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல தண்ணீரில் விளையாடத் தொடங்கிவிடுவார்கள். நண்பர்களிடையே அடிக்கடி விரோதத்தைச் சம்பாதிப்பார்கள்.
இசையில் நாட்டம்
கடக லக்னக்காரர்களில் அதிகமானோருக்கு பலவீனமான உடலை பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கிப் போகவே நினைப்பார்கள். செயல்களில் மந்தமாகவும், கவனக் குறைவாகவும் இருப்பார்கள். ஆனால், இவர்கள் விவேகம் மிக்கவர்கள். புத்திசாலிதனமும் உள்ளவர்கள். கலை, இசை என்றால் அதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். கற்பதில் எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.
characters of cancer in tamil
மனதை புரிந்துகொள்பவர்கள் (மனைவி?)
கடக லக்னக்காரர்கள் மற்றவர்களின் எண்ணங்களை சரியாக புரிந்துகொள்பவர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அதன்படி நடப்பவர்கள். சந்தர்ப்பம் வாய்க்கும்போது தைரியசாலியாக எழுச்சி பெறுவார்கள். துணிச்சலான காரியங்களை செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள். ஆனால் இவர்கள் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
characters of cancer in tamil
நல்ல கற்பனை வளம் மிக்கவர்கள். நாடோடி போல அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வார்கள். விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பதில் மகிழ்ச்சி பெறுவார்கள். மொத்தத்தில் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நல்லவர்களாகவும் கடும் உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.