/* */

characters of aquarius in tamil-நீங்க கும்ப லக்கினக்காரரா..? அப்ப உங்க குணாதிசயம் இதுதான்..!

characters of aquarius in tamil-கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் அநியாயத்தைக் கண்டால் சீறி எழும் குணம் படைத்தவர்கள்.

HIGHLIGHTS

characters of aquarius in tamil-நீங்க கும்ப லக்கினக்காரரா..? அப்ப உங்க குணாதிசயம் இதுதான்..!
X

charecters of aquarius in tamil-கும்ப லக்கினக்காரர்களின் குணாதிசயங்கள் (கோப்பு படம்)

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்கினம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன கணிக்கப்படுகிறது.

இதில் ஒவ்வொரு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் இன்று கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் பலன்கள் மற்றும் குணாதிசயங்களைப் பார்ப்போம் வாங்க.

characters of aquarius in tamil


கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும்?

கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவான்.கும்ப லக்கினக்காரர்களில் பெரும்பாலோனோர் சற்று உயரமானவர்களாக இருப்பார்கள். நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் பிறரிடம் அவ்வளவு எளிதாக பழகிவிட மாட்டார்கள். பெரும்பாலும் யாரையும் பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகி இருக்கவே விரும்புவார்கள். பிடிக்காதவர்களிடம் இருந்து உயர்வான எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, அவர்களுக்கு எதிர்ப்பு இருக்கும்.

ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் எதையும் அலசி ஆராயாமல் ஒரு முடிவுக்கு வரமாட்டார்கள். இவர்கள் அமைதியானவர்கள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கக் கூடியவர்கள். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். எந்நேரமும் ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். வாழ்வில் வெற்றி பெறத் தேவையான வழி வகைகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் உதவி செய்யும் விருப்பம் கொண்டவர்கள். அதிக நினைவாற்றல் கொண்டவர்கள். தன் நினைத்த எண்ணங்களை செயலாக்க கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். எதையும் ஒளிவு மறைவின்றி பேசிவிடும் மனம் கொண்டவர்கள்.

characters of aquarius in tamil

இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்குச் செல்வச் செழிப்பும், சொத்துகள் என பல வசதியும் கிடைக்கும். மிக கடுமையான உழைப்பாளிகள். எதையும் பார்த்த மாத்திரத்தில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எதற்கும் பயப்படமாட்டார்கள். எப்பேற்பட்ட கஷ்டம் வந்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பார்கள்.

பணம் செலவழிப்பதில் கவனம் உள்ளவர்கள்

விளையாட்டு சம்பந்தபட்ட துறையில், இவர்களுக்கு அதிக விருப்பம் இருக்கும். இவர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் வலுவான உடற்கட்டை கொண்டவர்கள். பணத்தைச் சேர்ப்பதிலும், செலவழிப்பதிலும் மிகுந்த கவனமாக இருப்பார்கள். இவர்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், மிகுந்த உறுதியுடன் இருப்பார்கள். நம்பிக்கை அதிகம் உடையவர்கள். கும்ப லக்கினக் காரர்கள் அவர்களது மனநிலைக்கு ஒத்த ஒருவரையே வாழக்கைத் துணையாக்க விரும்புவார்கள்.

characters of aquarius in tamil


அநியாயத்தை எதிர்ப்பவர்கள்

இவர்கள் நம்பிக்கை மற்றும் நட்புக்கு பாத்திரமானவர்கள். இவர்களில் ஒரு சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். மூட நம்பிக்கைகளை சிறிதும் நம்பமாட்டார்கள். பழைய சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனாலும் எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து விளக்கம் காண்பவர்கள். கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் அநியாயத்தைக் கண்டால் சீறி எழுவார்கள். யாராக இருந்தாலும் தெளிவாக அச்சமின்றி எதிர்த்து நிற்பார்கள்.

Updated On: 15 May 2023 4:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  2. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  7. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  8. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!