/* */

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம்: தேவஸ்தானம்

பொதுபக்தர்கள் விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம்: தேவஸ்தானம்
X

தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியுள்ளதாவது:

திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பொது பக்தர்களுக்கு விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது வி.ஐ.பி. பக்தர்கள் காலை 8 மணிக்கு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மாற்றத்தால் பொது பக்தர்களுக்கு 3 மணிநேரம் தரிசன நேரம் கிடைத்துள்ளதால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

புதிய முயற்சியாக, இப்போது திருப்பதியில் தங்கி, பிரேக் தரிசன டிக்கெட்டை பெற்று, காலை நேரடியாக திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் ஒரு நாள் திருமலையில் தங்குவது தவிர்க்கப்படுவது மட்டுமல்லாமல், திருமலையில் தங்குவதற்கான விடுதி அறைக்கான பயன்பாடும் குறையும். வி.ஐ.பி. பிரேக் தரிசன மாற்றம் சோதனை முயற்சியாக ஒரு மாதத்துக்கு செயல்படுத்தப்படும்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தினமும் 25 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. எந்தப் பகுதியில் இருந்தும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் 10 நாட்களுக்கு தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்படும். அந்த டிக்கெட் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வீதம் மொத்தம் 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் ஒதுக்கப்படும். பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி வைகுண்ட துவார தரிசனத்துக்கு வரலாம்.

நாளை (திங்கட்கிழமை) சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம் நடக்கிறது. 7-ந்தேதி திருமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. உலக மக்கள் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வ சாந்தி ஹோமம் வருகிற 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்ட 2023-ம் ஆண்டுக்கான டைரிகள் மற்றும் காலண்டர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, புதுடெல்லி, ஐதராபாத், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், திருமலை மற்றும் திருப்பதியில் கிடைக்கின்றன என கூறினார்

Updated On: 4 Dec 2022 8:45 AM GMT

Related News