/* */

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

Tiruchendur Murugan Temple -திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செல்போன் எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

HIGHLIGHTS

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை
X

திருச்செந்தூர் முருகன் கோவில் பைல் படம்.

Tiruchendur Murugan Temple -தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோவிலில் தற்போது தமிழக அரசு மற்றும் பிரபல சாப்ட்வேர் நிறுவன உரிமையாளரான எச். சி. எல். சிவ் நாடார் சார்பில் 300 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க திருச்செந்தூர் கோவிலில் ஆகம விதிமுறைகளை மீறி சுவாமி விக்ரகம் மற்றும் கருவறை ஆகியவற்றை செல்போன்களில் அர்ச்சகர்கள் படம் எடுத்து அதை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அனுப்புகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. மேலும் இக்கோவிலில் சிதம்பரம் நடராஜர் கோவிலை போன்று சாமி தரிசனத்தில் அர்ச்சர்களின் ஆதிக்கம் எல்லை மீறிப் போவதாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுப்பப்படுவது உண்டு .

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா தேரோட்டம் மற்றும் கந்த சஷ்டி திருவிழா அதனை யொட்டி நடைபெறும் சூர சம்ஹார நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த ஆண்டு கடந்த மாத இறுதியில் தான் சூர சம்ஹாரம் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் பக்தர் ஒருவர் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன்கள் எடுத்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் ஆகம விதிமுறைகளை மீறி சுவாமி அபிஷேகம் சிறப்பு பூஜை குறித்த வரை தங்களது செல்போனில் பதிவிட்டு பின்னர் அதனை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் மேலும் பக்தர்களும் செல் போன் எடுத்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும். உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அதை போல் திருச்செந்தூர் கோவிலிலும் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் கருதி இதனை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிவெட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலுக்குள் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செல்போன்கள் எடுத்து செல்வதற்கு தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்து உள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு விதித்துள்ள தடை உத்தரவிற்கு பக்தர்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. செல்போன்கள் மூலம் இக்கோவிலுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து வரும் ஆபத்தை இந்த உத்தரவின் தடுத்து நிறுத்த முடியும் என்பதோடு விதிமுறைகளை மீறி அர்ச்சகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கி கொண்டு அழைத்து சென்று கருவறைக்கு நேர் எதிரே அமர வைப்பதும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 Nov 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!