/* */

திருப்பூரில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா

திருப்பூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா
X

திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

திருப்பூர் காலேஜ் ரோட்டில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மணடல பூஜை, மகர விளக்கு பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கோவிலில் இந்த விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாட வாய்ப்பில்லாமல் போனது. தற்போது, நோய் தொற்று பாதிப்பு விலகிய நிலையில், விழா ஏற்பாடுகள் வழக்கம்போல, சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்ப பக்த ஜன சங்கம் சார்பில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை நிகழ்ச்சி, கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு விழா, காலையில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி ஐயப்பன், திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பின், சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீமகேஷ் மோகனரு தலைமையில், பெருமாள் கோவில் குளத்தில் மேளதாளங்கள் முழங்க ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாலை அணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

அதற்கு பின், மாலையில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி, ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து ஐயப்பன் கோவிலை சென்றடைந்தது. பின்னர் இரவு 9.30 மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைந்தது. மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்ப பக்த ஜன சங்க நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆராட்டு நிகழ்ச்சிக்கு பிறகு, திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து, யானை மீது அமர்ந்த நிலையில், முக்கிய வீதிகள் வழியாக ஐயப்ப சுவாமி, கோவிலை சென்றடைவதே வழக்கமாக இருந்தது. ஆனால், ஒருமுறை யானை மக்கள் கூட்டத்தில், திடீரென மிரட்சியடைந்து ஓட்டம் பிடித்ததை அடுத்து, போலீசார் பாதுகாப்பு கருதி யானை ஊர்வலத்துக்கு தடை விதித்தனர். இதையடுத்து, ரத ஊர்வலமாக மட்டுமே கோவிலுக்கு ஐயப்ப சுவாமி சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

மண்டல பூஜை விழாவையொட்டி, வாரம்தோறும் ஞாயிறு தினங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை 11 மணி முதல், மாலை 4 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. சாதம், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், அப்பளம், வடை, பாயாசம், கூட்டு, பொரியல் என சுவை மிகுந்த விருந்தாக, அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி இரண்டாவது வாரம் வரை, வாரம் தோறும் ஞாயிறு அன்று இந்த மெகா அன்னதானம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Nov 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்