/* */

தமிழகத்தில் நாளை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலம்

நாளை ஆயுத பூஜையும், நாளை மறுதினம் சரஸ்வதி பூஜையும் தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாட, மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த பண்டிகைக்கான வாழை மரக்கன்றுகள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை, சில தினங்களாக அமோகமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

தமிழகத்தில் நாளை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலம்
X

ஞானம் தரும் சரஸ்வதி அருளை பெறுவோம்!

மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை. ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படும் இந்த விழாவானது, நவராத்திரியின் 9வது நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம், மகா நவமி என்றும் அழைக்கப்படுவதுண்டு.


ஆயுத பூஜை ஆயுதங்களை குறிக்கிறது. பண்டைய காலங்களில், ஆயுதங்களை வணங்கும் நாளாகவே ஆயுத பூஜை திகழ்ந்தது. தற்போதைய காலக்கட்டத்தில், விஸ்வகர்மா பூஜையைப் போலவே, கருவி அல்லது கைவினைஞர்களின் கருவிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டுள்ளது. ஆயுத பூஜையானது கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஒவ்வொரு கருவிகளும் அந்தந்த தொழிலில் வெற்றியை அடைய உதவுகின்றன. மேலும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும், வெகுமதி பெறுவதற்கும், வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு வியாபார விருத்தி இயந்திரத்தை வழிபடுவது தொழில்முறை உறவுகளை மேம்படுத்தவும், வணிகத்திற்கு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரவும், தொழிலை விரிவுபடுத்தவும் உதவும்.

சமீபத்திய காலங்களில், மக்கள் தங்கள் வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். எனவே, இது வாகன பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுபட மக்கள் இந்த நாளில் தங்களது ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பைக்குகளை சுத்தப்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.


பூஜை தினத்தில், வீட்டில் உள்ள கருவிகள், தொழில் கருவிகள், வாகனங்களை கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவற்றிற்கு வண்ணம் கூட தீட்டலாம். மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு கருவிகள், வாகனங்களுக்கு திலகமிட வேண்டும். ஆயுதங்களை சுத்தம் செய்து கழுவ வேண்டும். முன்பு போல் அவற்றிற்கும் திலகம் வைக்க வேண்டும். பூக்களால் ஒரு சுவருக்கு எதிராக, ஒரே வரிசையில் அவற்றை வைக்கவும். ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் சாமந்தி பூ மிகவும் குறிப்பிடத்தக்க மலர் அந்த மலர் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கலாம்.

அடுத்த நாள் காலை, மகா நவமி நாளில், தேவி சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகள் அல்லது படங்களை வைத்து அனைத்து கருவிகளையும் அல்லது ஆயுதங்களையும் வைத்து வணங்க வேண்டும். இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்களையும் இதே வழிமுறையில் வணங்கலாம். ஆயுத பூஜை நாளில், இந்த கருவிகள், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையில் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது.

ஆயுத பூஜை என்பது ஆயுதங்கள், கருவிகள், வருவாய் ஊடகங்கள் ஆகியவற்றை வணங்குவதற்கும், நம் வாழ்வில் அவற்றிற்கான பங்குகளைப் பற்றி சிந்திப்பதற்குமான நாளாக கருத வேண்டும். பண்டைய காலங்களில், எதிரிகளை வென்றெடுக்கும் மற்றும் போர்வீரரைப் பாதுகாக்கும் ஆயுதங்களைப் போற்றி வணங்கும் தினமாகும். ஆனால் இன்றைய நவீன உலகம் ஆயுத பூஜைக்காக வரையறையை மாற்றியுள்ளது. அதன்படி, நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும் ஒவ்வொரு சிறுசிறு விஷயங்களுக்கும் நன்றியுடன் இருக்க வேண்டும்.


சரஸ்வதி வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை. ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். சரஸ்வதியை ஆற்றங்கரைச் சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம். ஞானம், அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி. அறிவும், ஞானமும் உறுதியானது. அன்னம் பாலினையும், நீரினையும் பிரித்து பாலினை மட்டும் எடுத்துக் கொள்வது போல், நாம் ஞானத்தினை எடுத்துக் கொண்டு அக ஞானத்தினை நீக்க வேண்டும் என்பது பொருள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை நாளாகும்.

அக். 4ம் தேதி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10.40 மணி முதல் 11.10 மணிவரை பிற்பகல் 12.10 மணி முதல் 1.10 மணிவரை பூஜை செய்யலாம். விஜயதசமி அக். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்நாள் சாமி கும்பிட்டவர்கள் மறு பூஜை செய்ய, நல்ல நேரம் காலை 5 மணி முதல் 6 மணிவரை, காலை 09.10 மணி முதல் 10.10 மணிவரை நல்ல நேரம் உள்ளது இந்த நேரத்தில் பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்

Updated On: 3 Oct 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?