/* */

'அல்லாஹ்' என்பதற்கும் 'இலாஹ்' என்பதற்கு என்ன வேறுபாடு..? தெரிந்துகொள்ளுங்கள்..!

Allah Meaning in Tamil-இஸ்லாமியர்களின் இறைவன் 'அல்லாஹ்' என்பதற்கு திருக்குர் ஆன் கூறும் பொருள் என்ன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

HIGHLIGHTS

அல்லாஹ் என்பதற்கும் இலாஹ் என்பதற்கு என்ன வேறுபாடு..? தெரிந்துகொள்ளுங்கள்..!
X

Allah Meaning in Tamil-Allah என்ற சொல்லுக்கான பொருள் இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

பெயர்ச்சொல் : noun

அல்லாஹ்

அல்லா

இஸ்லாமிய வழக்குப்படி முழுமுதற்கடவுள் அல்லது இறைவன் பொருள்.


வேர்ச் சொல்

அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்குதல் அல்லது போற்றுதல் என பொருள். எனவே "அல்லாஹ்" என்ற சொல்லுக்கு வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது பொருளாகிறது.

கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பது என்று மொழியியல் ஆய்வாளர்கள் விளக்கம் தருகின்றனர். அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது. அதை போன்றே பன்மையும் இல்லை.

இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இஸ்லாமியர்களின் புனிதநூல் அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.


நான்காயிரம் ஆண்டு புழக்கத்தில் உள்ள சொல்

'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தையாகும். அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர்.

அல்லாஹ், இலாஹ் - பொருள்

இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் என்ற கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வரும் ஒரு நம்பிக்கையாகும்.

பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைபெறச் செய்தது. "பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்". (அல் குர்ஆன் 38:5)

அல்லாஹ்வை பற்றி குர்ஆன்

குர்ஆன் அல்லாஹ்வை பற்றி பல்வேறு தகவல்கள் உள்ளடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் , கீழ் காணும் குர்ஆனின் 112-வது அத்தியாயம் இவ்வாறு கூறுகிறது.

(112:1) (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஏகன்.

(112:2) அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

(112:3) அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

(112:4) அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இந்த நான்கு பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவன் இறைவனாக ( அர்ஷின் அதிபதி) முடியாது.


கலிமா

தமிழில்: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

பொருள்: (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்.

"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் இறுதித்தூதர்" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்தில் கூறப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்

விளக்கம்: 'லா' என்பதற்கு இல்லை என்று பொருள் , 'இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், 'அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். 'முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள். ஆக "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்" என்று பொருள்.

அல்லாஹ் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். அந்த பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன :-

1. அளவற்ற அருளாளன்

The Beneficent

الرَّحْمَنُ

Ar-Rahman

2. நிகரற்ற அன்புடையோன்

The Merciful

الرَّحِیْمُ

Ar-Rahim

3. பேரரசன்

The King/ Lord

الْمَلِكُ

Al-Malik

4. மகா தூயவன், பரிசுத்தமானவன்

The Most Sacred

الْقُدُّوسُ

Al-Quddus

5. சாந்தி அளிப்பவன்

The Giver of Peace

السَّلاَمُ

As-Salaam

6. அபயமளிப்பவன்

The Granter of Security

الْمُؤْمِنُ

Al-Mu'min

7. பாதுகாப்பவன்

Guardian Over All

الْمُھَیْمِنُ

Al-Muhaymin

8. அனைத்தையும் மிகைத்தவன்

The Mighty One

الْعَزِیزُ

Al-'Aziz


9. அடக்கி ஆள்பவன்

The Omnipotent

الْجَبَّارُ

Al-Jabbar

10. பெருமைக்குரியவன்

The Possessor of Greatness

الْمُتَكَبِّرُ

Al-Mutakabbir

11. படைப்பாளன், படைப்பவன்

The Creator

الْخَالِقُ

Al-Khaaliq

12. உருவாக்குபவன்

The Initiator/ Evolver

الْبَارِئُ

Al-Baari

13. உருவம் அமைப்பவன்

The Flawless Shaper

الْمُصَوِّرُ

Al-Musawwir

14. மிகவும் மன்னிக்கக்கூடியவன்

The Great Forgiver

الْغَفَّارُ

Al-Ghaffaar

15. அடக்கி ஆளுபவன்

The Subduer/ Overcomer

الْقَھَّارُ

Al-Qahhaar

16. வாரி வழங்குபவன்

The Supreme Bestower

الْوَھَّابُ

Al-Wahhaab

17. உணவளிப்பவன்

The Total Provider

الرَّزَّاقُ

Ar-Razzaaq

18. வெற்றியளிப்பவன்

The Victory Giver

الْفَتَّاحُ

Al-Fattah

19. யாவும் அறிந்தவன்

The All-Knowing

الْعَلِيْمُ

Al-'Alim

20. கைவசப்படுத்துபவன்

The Restrainer/ Withholder

الْقَابِضُ

Al-Qaabid

21. தாராளமாக கொடுப்பவன்

The Extender

الْبَاسِطُ

Al-Baasit


22. தாழ்த்த செய்பவன்

The Abaser/ Humiliator/ Downgrader

الْخَافِضُ

Al-Khaafid

23. உயர்த்துபவன்

The Elevating / The Exalter

الرَّافِعُ

Ar-Raafi

24. மேன்மை அடைய செய்பவன்

The Honourer-Bestower

الْمُعِزُّ

Al-Mu'izz

25. இழிவடையசெய்பவன்

The Giver of Dishonor/ the Giver of Disgrace

الْمُذِلُّ

Al-Mudhill

26. யாவையும் செவியுறுபவன்

The Hearing/ All-Hearing

السَّمِیْعُ

As-Sami

27. யாவற்றவையும் பார்ப்பவன்

The All-Seeing

الْبَصِیْرُ

Al-Basir

28. தீர்ப்பளிப்பவன்

The Impartial Judge

الْحَكَمُ

Al-Hakam

29. நீதமுடையவன்

The Embodiment of Justice

الْعَدْلُ

Al-'Adl

30. நுட்பமானவன்

The Knower of Subtleties

اللَّطِیْفُ

Al-Lateef

31. ஆழ்ந்தறிந்தவன்

The All-Aware One

الْخَبِیْرُ

Al-Khabeer

32. அமைதியானவன்

The Forbearing/ Indulgent/ All-Enduring

الْحَلِیْمُ

Al-Halim

33. மகத்துவமுள்ளவன்

The Magnificent

الْعَظِیْمُ

Al-'Adzheem

34. மகா மன்னிப்பாளன்

The Great Forgiver

الْغَفُورُ

Al-Ghafuur

35. நன்றி பாராட்டுபவன்

The Grateful/ Appreciative

الشَّكُورُ

Ash-Shakuur


36. மிக உயர்ந்தவன்

The Sublime One

الْعَلِيُّ

Al-'Ali

37. மிகப் பெரியவன்

The Great One

الْكَبِیْرُ

Al-Kabeer

38. பாதுகாப்பவன்

Protector/ Guardian

الْحَفِیْظُ

Al-Hafidh

39. கண்காணிப்பவன்

Watchful

الْمُقِيْتُ

Al-Muqit

40. கணக்கெடுப்பவன்

Ever-Reckoner

الْحَسِیْبُ

Al-Haseeb

41. மாண்புமிக்கவன்

The Majestic

الْجَلِیْلُ

Al-Jaleel

42. பெரும் தயாளன்

The Bountiful

الْكَرِیْمُ

Al-Kareem

43. கண்காணிப்பவன்

The Watchful

الرَّقِیْبُ

Ar-Raqeeb

44. முறையீட்டை ஏற்பவன்

The Responsive

الْمُجِیْبُ

Al-Mujeeb

45. விசாலமானவன்

Boundless

الْوَاسِعُ

Al-Waasi'

46. நுண்ணறிவுடயவன்

The Wise

الْحَكِیْمُ

Al-Hakim

47. உள்ளன்பு மிக்கவன்

The Loving

الْوَدُودُ

Al-Waduud

48. மகிமை உடையவன்

The Glorious/ Majestic

الْمَجِیْدُ

Al-Majeed

49. மறுமையில் எழுப்புபவன்

The Infuser of New Life / The Resurrector

الْبَاعِثُ

Al-Ba'ith

50. சாட்சியாளன்

The Witness

الشَّھِیْدُ

Ash-Shaheed

51. உண்மையானவன்

The Embodiment of Truth

الْحَقُّ

Al-Haqq

52. பொறுப்பு ஏற்றுக்கொள்பவன்

The Universal Trustee

الْوَكِیْلُ

Al-Wakeel

53. வலிமை மிக்கவன்

The Strong

الْقَوِيُّ

Al-Qawi

54. உறுதியானவன்

The Firm One

الْمَتِیْنُ

Al-Mateen

55. பாதுகாவலன்

The Protecting Associate

الْوَلِيُّ

Al-Wali

56. புகழுக்குரியவன்

The All Praiseworthy

الْحَمِیدُ

Al-Hameed

57. கணக்கிடுபவன்

The All-Enumerating One

الْمُحْصِي

Al-Muhsi

58. துவங்குபவன்

The Originator

الْمُبْدِئُ

Al-Mubdi

59. இறுதியில் மீளவைப்பவன்

The Restorer

الْمُعِیْدُ

Al-Mu'id

60. உயிரளிப்பவன்

The Giver of Life

الْمُحْیِي

Al-Muhyi

61. மரணிக்கச் செய்பவன்

The Bringer of Death

الْمُِمیْتُ

Al-Mumeet

62. என்றென்றும் உயிருள்ளவன்

The Eternally Living

الْحَيُّ

Al-Hayy

63. என்றென்றும் நிலைத்திருப்பவன்

The Self-Subsisting

الْقَیُّومُ

Al-Qayyuum

64. கண்டு பிடிப்பவன்

The Perceiver, The Finder

الْوَاجِدُ

Al-Waajid

65. பெரும் மதிப்பிற்குரியவன்

The Magnificent, The Glorious

الْمَاجِدُ

Al-Maajid


66. தனித்தவன்

The Unique, The Single

الْواحِدُ

Al-Waahid

67. அவன் ஒருவன்

The One, The Indivisible

اَلاَحَدُ

Al-Ahad

68. தேவையற்றவன்

The Self-Sufficient

الصَّمَدُ

As-Samad

69. ஆற்றலுள்ளவன்

The Omnipotent

الْقَادِرُ

Al-Qaadir

70. பேராற்றலுடையவன்

The All Authoritative One

الْمُقْتَدِرُ

Al-Muqtadir

71. முற்படுத்துபவன்

The Expediting One

الْمُقَدِّمُ

Al-Muqaddim

72. பிற்படுத்துபவன்

The Procrastinator

الْمُؤَخِّرُ

Al-Muakhkhir

73. ஆரம்பமானவன்

The Very First

الأوَّلُ

Al-Awwal

74. இறுதியானவன்

The Infinite Last

الآخِرُ

Al-Akhir

75. பகிரங்கமானவன்

The Manifest

الظَّاهِرُ

Adh-Dhahir

76. அந்தரங்கமானவன்

The Unmanifest

الْبَاطِنُ

Al-Batin

77. அதிகார பொறுப்புள்ளவன்

The Holder of Supreme Authority

الْوَالِي

Al-Wali

78. மிக உயர்வானவன்

The Extremely Exalted One

الْمُتَعَالِي

Al-Muta'ali

79. நன்மை புரிபவன்

The Benign, The Source of All-Goodness

الْبَرُّ

Al-Barr

80. மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்

The Ever- Acceptor of Repentance

التَوَّابُ

At-Tawwab

81. பழி வாங்குபவன்

The Avenger

الْمُنْتَقِمُ

Al-Muntaqim

82. மன்னிப்பளிப்பவன்

The Supreme Pardoner

العَفُوُّ

Al-'Afuw

83. இரக்கமுடையவன்

The Kind

الرَّؤُوفُ

Ar-Ra'uf

84. அரசாட்சிக்கு உரியவன்

The Owner of all Sovereignty

مَالِكُ الْمُلْكِ

Malik-ul-Mulk


85. கம்பீரமும் கண்ணியமும் உடையவன்

The Possessor of Majesty and Honour

ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ

Dhul Jalali wal Ikram

86. நீதமாக நடப்பவன்

The Equitable

الْمُقْسِطُ

Al-Muqsit

87. அனைத்தையும் ஒன்று சேர்ப்பவன்

The Assembler of Scattered Creations

الْجَامِعُ

Aj-Jami'

88. தேவையற்றவன்

The Self-Sufficient One

الْغَنِيُّ

Al-Ghani

89. சீமானாக்குபவன், நிறைவாக்குபவன்

The Bestower of Sufficiency

الْمُغْنِي

Al-Mughni

90. தடை செய்பவன்

The Preventer

الْمَانِعُ

Al-Mani'

91. துன்பமடைய செய்பவன்

The Distressor

الضَّارَّ

Ad-Darr

92. பலன் அளிப்பவன்

The Bestower of Benefits

النَّافِعُ

An-Nafi'

93. பேரொளி மிக்கவன், பிரகாசமானவன்

The Prime Light

النُّورُ

An-Nur

94. நேர்வழி காட்டுபவன்

The Provider of Guidance

الْھَادِي

Al-Hadi

95. புதுமையாக படைப்பவன்

The Unique One

الْبَدِیْعُ

Al-Badi'

96. நிரந்தரமானவன்

The Infinite, The Everlasting

الْبَاقِي

Al-Baqi

97. உரிமையுடையவன்

The Inheritor of All

الْوَارِثُ

Al-Warith

98. நேர்வழி காட்டுபவன்

The Guide to the Right Path

الرَّشِیْدُ

Ar-Rashid

99. மிகப் பொறுமையாளன்

The Extensively Enduring One

الصَّبُورُ

As-Sabuur

( சில கருத்துகள் விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டது.-நன்றி விக்கிப்பீடியா)



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 6:43 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!