/* */

கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்?

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற இந்த வெற்றி அந்த மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளில் ஒரு கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

கர்நாடகாவின் புதிய  முதல்வர் யார்?
X

கர்நாடக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் சீத்தாராமையா, சிவக்குமார்.

1994 - 115, 33.54% (ஜேடிஎஸ், எச்டி தேவகவுடா)

1999 - 132, 40.84% (INC, SM கிருஷ்ணா) 2004 - 79,

28.33% (BJP, BSY) 2008 - 110, 33.86% (BJP, BSY)

2013 - 122, 36.6% (INC, சித்தராமையா) 2018 - 104,

36.3% (BJP, BSY) முந்தைய சாதனை 1989 - 178,

43.76% (INC, வீரேந்திர பாட்டீல்) கர்நாடகா சட்டசபை

தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்து விட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது. 1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது.

திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கே யார் முதல்வர் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. அதாவது டிகே சிவக்குமார், சித்தராமையா இருவரில் யார் முதல்வர் என்று கேள்வி நிலவி வருகிறது. டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார் தான். அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர்.

இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அடையாளம், முகம், நிர்வாகிகள் பெரும்பாலும் இவர் பக்கம் தான், அரசியல் ராஜதந்திரி. எம்ஜிஆர் - கருணாநிதி முன்பு ஒருங்கிணைந்த திமுகவில் இருந்தது போல சூழ்நிலை இது. இரண்டு பேருக்குமே மக்கள் ஆதரவு அங்கு உள்ளது. கட்சி நிர்வாகிகள் ஆதரவும் உள்ளது. கர்நாடகாவின் முதல்வர் யார்? பாஜகவுக்கு அசராத டி.கே.சிவக்குமாரா? செல்வாக்கு பெற்ற சித்தராமையாவா? இவர்களில் யார் முதல்வராக போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் சப்போர்ட் சித்தராமையாவிற்கும், தொண்டர்கள் சப்போர்ட் டிகே சிவக்குமாருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வர் ஆவதற்கு இரண்டு பேருமே தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

முக்கியமாக டிகே சிவக்குமார் மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். இப்போதும் கூட ட்விட்டரில் டிகே சிவக்குமார் பார் சிஎம் dksivakumar4cm என்ற டேக் வைரலாகி வருகிறது. இதெல்லாம் அவரின் முதல்வர் ஆசையில் இருக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியது.

இன்னொரு பக்கம் சித்தராமையாவும் டெல்லியில் முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் சித்தராமையா தான் முதல்வராக பதவி ஏற்பார் என்று கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. டிகே சிவகுமாருக்கு நிர்வாகிகள் ஆதரவு, மக்கள் பிரபலம் இருந்தாலும் எம்எல்ஏக்கள் ஆதரவு தொடங்கி தொண்டர்கள் ஆதரவு எல்லாம் சித்தராமையாவிற்கே இருக்கிறது. அதனால் சித்தராமையா தான் அடுத்த முதல்வர். இதுபோக கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சித்தராமையா முதல்வர். துணை முதல்வர்கள் 3ல் ஒருவர் வொக்கலிகா, ஒருவர் முஸ்லீம், ஒருவர் லிங்காயத்து துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அங்கே வொக்கலிகா இருக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று பாஜக சொல்லியதும் டிகே சிவக்குமார் காரணமாக வொக்கலிகா வாக்குகள் காங்கிரசுக்கு வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு துணை முதல்வர் பதவி.. இஸ்லாமியர்கள் 13 சதவிகிதம் பேர் கிட்டத்தட்ட அப்படியே காங்கிரசுக்கு வாக்களித்து உள்ளதாக கருதப்படுகிறது.. அதை மனதில் வைத்து அவர்களுக்கும் ஒரு துணை முதல்வர். இது போக இந்த தேர்தலில் காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த லிங்காயத்து பிரிவினர். அவர்கள் பராம்பரிய பாஜக என்றாலும் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர். ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டவர்கள் கூட பாஜகவில் இருந்து காங்கிரசுக்கு வந்தனர்.

இந்நிலையில்தான் அவர்களை கருத்தில் கொண்டு லிங்காயத்து பிரிவினருக்கும் ஒரு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும். இது தொடர்பாக நாளைய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவாகும். டி கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி தரப்படாது. மாறாக அவருக்கு மிக முக்கியமான இரண்டு முக்கிய பெரிய துறைகளுடன் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On: 14 May 2023 1:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  2. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  3. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  4. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  5. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...
  6. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  7. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  8. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  9. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  10. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...