/* */

ஜெயலலிதா மரணத்தில் அடுத்த நடவடிக்கை என்ன?அரசு அதிரடி முடிவு

ஜெயலலிதா மரணத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு புதிய முடிவுகளை எடுத்துள்ளது.

HIGHLIGHTS

ஜெயலலிதா மரணத்தில் அடுத்த நடவடிக்கை என்ன?அரசு அதிரடி முடிவு
X

தலைமை செயலாளர் இறையன்பு.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசப்பட்டது.இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பலரிடம் விசாரணை நடத்தி 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இறுதி அறிக்கை தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பி உள்ளார். அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய டாக்டர் சுமின் சர்மா வலியுறுத்திய போதும் ஏன்? ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படவில்லை. டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை?

போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயங்கி விழுவதற்கு முன்பு என்ன நடந்தது? என்பது மறைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்த நேரத்தில் முரண்பட்ட தகவல்கள். அவர் மரணத்தை வெளியுலகத்திற்கு திட்டமிட்டு தாமதமாக அறிவித்தது. சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர அதற்கான வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று பல்வேறு சந்தேகங்களை விசாரணை ஆணையம் எழுப்பி உள்ளது.

முக்கியமாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரைப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் சிகிச்சையில் அஜாக்கிரதையாக இருந்து, அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் உள்பட அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னை ஐகோட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்டு 27-ந் தேதி அன்று தமிழக அரசிடம் நீதிபதி அளித்தார். உடல்நல குறைவு ஏற்பட்டபோது ஜெயலலிதாவை 22.9.2016 அன்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பிறகு நடந்த சம்பவங்களை காணும்போது, சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது தவறு காணப்படுவதால் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆணையம் தீர்மானித்துள்ளது.

மேலும் அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் ஒய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது. தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுப்படி அந்த அறிக்கை, சட்டசபை முன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட நிபுணர்களின் கருத்தை பெற்று பரிசீலிக்கப்படும். ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை, மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி முடிவால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பரிதவிப்பில் உள்ளனர். இது தொடர்பான அரசின் நடவடிக்கையை எப்படி? எதிர்கொள்வது என்பது பற்றி சட்டநிபுணர்களிடம் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Updated On: 19 Oct 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...