/* */

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல் ஷர்மா( மனோகர் லால் ஷர்மா) உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

HIGHLIGHTS

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
X

 டெல்லி உச்சநீதிமன்றம் 

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சதித் திட்டத்திற்கு பின்னாலிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ், மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல் ஷர்மா( மனோகர் லால் ஷர்மா) உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நிபுணர் குழுவை அமைத்து என்னென்ன தகவல்கள் திருடப்பட்டன? இதில் உடந்தையாக இருந்தது யார்? நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.

Updated On: 22 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்