/* */

'ஜிப்மரில் இந்தி அனுமதி' - கடுப்பாகி கவிதை பதிவிட்ட வைரமுத்து!

இந்தி, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது; அதற்காக வருந்துகிறோம் என்று கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஜிப்மரில் இந்தி அனுமதி - கடுப்பாகி கவிதை பதிவிட்ட வைரமுத்து!
X

வைரமுத்து

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக , புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்தார்.

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்ப வலியுறுத்தி, புதுச்சேரி தி.மு.க சார்பில் ஜிப்மர் மருத்துவமனை எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஜிப்மர் விவகாரம் தொடர்பாக, கவிஞர் வைரமுத்து, டிவிட்டரில் கவிதை வடிவில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடைசியில் இந்தி

ஜிப்மர் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருக்கிறது;

வருந்துகிறோம்


இந்தி படிப்போரை

வெறுக்கமாட்டோம்;

திணிப்போரை

ரசிக்கமாட்டோம்


ஒருமைப்பாடு

சிறுமைப்படாதிருக்க

நாட்டின் பன்மைக்கலாசாரம்

பாதுகாக்கப்படவேண்டும்


சிலர்

நுழைக்கப்பார்ப்பது

ஊசியில் நூலன்று;

ஒட்டகம்

இவ்வாறு, வைரமுத்து கூறியுள்ளார்.

Updated On: 9 May 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!