/* */

நகர பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசின் முடிவு.ஏழை மக்களுக்கு பாதிப்பு- நகரப்பகுதிகளில் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது நியாயமற்றது-அன்புமணி ராமதாஸ்

HIGHLIGHTS

நகர பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்-அன்புமணி ராமதாஸ்
X

அன்புமணி ராமதாஸ்.

நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்-தமிழக அரசின் திடீர் முடிவு...ஏழை மக்கள் பாதிப்பு - அன்புமணியின் வேண்டுகோள்!!

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் சொத்து வரி பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருப்பதால், வருவாய் குறைந்து, உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் , மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 - 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75சதவிகிதமும்,1,201 - 1,800 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 100சதவிகிதமும்,1,801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 150சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தகூடாது! சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்; பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்!" என்று பதிவிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சொத்துவரி உயர்வு போல் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.




Updated On: 2 April 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...