/* */

அதிமுக அலுவலக சாவி வழக்கு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

அதிமுக அலுவலக சாவி வழக்கு : தடை விதிக்க உச்சநீதிமன்றம்  மறுப்பு
X

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் . அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்கவும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.


இதனைதொடர்ந்து , அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Aug 2022 4:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...