மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்
X

சுப்புலட்சுமி ஜெகதீசன்.

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல் பரவி வருகிறது.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் டாக்டர் சரஸ்வதியிடம் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்த தோல்விக்கு தனது சொந்த கட்சியான தி.மு.க.வில் நிலவி வந்த உட் கட்சி பூசல் பிரச்சனை தான் காரணம் என அவர் வெளிப்படையாக கூறி வந்தார். கட்சியின் மேலிடத்திலும் புகார் செய்தார். ஆனால் அவர் சுட்டிக் காட்டியபடி அவரது தோல்விக்கு காரணமானவர்கள் மீது கட்சியின் மேலிடம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாறாக அவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கப்பட்டன.

இதன் காரணமாக தி.மு.க. தலைமையின் மீது கடும் அதிருப்தி அடைந்த சுப்பு லட்சுமி ஜெகதீசன் கடந்த ஆண்டு தி.மு.க.வின் அடிமட்ட உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டார் .இந்த அறிவிப்பிற்கும் தி.மு.க. மேலிடம் எந்த விதமான ரியாக்சனும் செய்யவில்லை.

அவர் கட்சியில் இருந்து விலகியதும் பாரதிய ஜனதாவில் சேரப் போகிறார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அவர் சுமார் ஒரு ஆண்டு காலம் எந்த கட்சியிலும் சேராமல் மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் தனது தாய் கட்சியான அ.தி.மு.க.வில் இணைய போவதாக பரபரப்பு தகவல்கள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கு அவரது தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க.விற்கு அழைத்து வரப்பட்டவர் ஆவார். அடிப்படையில் பள்ளி ஆசிரியையான இவர் 1977 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். எம்.ஜி.ஆர். முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது அவரது அமைச்சரவையில் இவருக்கு சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டது.

அதன் பின்னர் அ.தி.மு.க. மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தி.மு.க.விற்கு தாவினார். கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த பெருமையும் இவருக்கு உண்டு. இந்த இத்தகைய வரலாற்றுக்கு சொந்தமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க.விலிருந்து விலகி அமைதியாக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அல்லது நாளை அ.தி.மு.க.வில் ஐக்கியம் ஆகிவிடுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updated On: 7 Jun 2023 5:52 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா