/* */

அரசியல் மேடையில் அநாகரிகப் பேச்சு..! கடிவாளம்போடுவாரா, முதல்வர் ஸ்டாலின்..? மக்கள் எதிர்பார்ப்பு

political speech restriction,public demand action தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சானது அச்சுறுத்துவது போல் உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரசியல் மேடையில் அநாகரிகப் பேச்சு..!  கடிவாளம்போடுவாரா, முதல்வர் ஸ்டாலின்..?  மக்கள் எதிர்பார்ப்பு
X

வாக்காளர்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குமே போற்றத்தக்கது (கோப்பு படம்)

political speech restriction,public demand action

தமிழகத்தில் அண்மைக்காலமாகவே ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மேடையில் அநாகரிகமாக பேசுவது, சொந்த கட்சியினர் மீது கல்வீசுவது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுவதாகவும், இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து கடிவாளம் போடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகரிக அரசியல்

அரசியல் என்பது என்ன? மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி அவர்களிடம் அந்த திட்டங்களைக் கொண்டு போய் சேர்க்கவேண்டியதைச்செய்வது, மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கான நல்லதொரு அரசாக செயல்படுவது. அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை தருவது, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தினைத் தருவது, ஆளும் அரசானது அம்மாநில அல்லது நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பளிப்பது, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தேவையான அடிப்படைத் திட்டங்களை வகுப்பது போன்ற பல காரணிகளை மையமாகக் கொண்டு செயல்படவேண்டும்.

கொள்கை, கட்சி ஆகியவற்றில் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவர்களுடனும் மனிதாபிமானத்தோடு ஒன்றுபட்டு மாநிலத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே ஆளும்கட்சியினரின் முதல் கடமை. ஆனால் நடப்பதென்ன? எல்லாமே தலைகீழாகவே உள்ளது. ஒவ்வொரு முறையும் சட்டசபை நடக்கும்போது ஆளும்கட்சியினர் மேசையைத் தட்டி ஆர்ப்பரிப்பதும், எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வதும்தான், கடந்த 10 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இது தேவைதானா? மக்கள் பிரச்னைகளை பேசும்மன்றத்தில் அரசியல் எதற்கு? அங்கு மக்களின் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மட்டும்தான் விவாதிக்கப்படவேண்டும். ஆனால் அது மக்கள் மன்றத்தில் நடக்கிறதா என்றால் இல்லை. இதற்கு முடிவுதான் என்ன? வெளிநடப்பு செய்தால் மக்கள் பிரச்னைகளை அங்கு யார் பேசுவர்?

குடியாட்சி

அக்காலத்தில் மன்னராட்சி இருந்தபோது மன்னர் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொள்ளலாம். அவர் போடும் வரிதான். அதற்கு மறுப்பு சொல்ல முடியாது. வரி செலுத்தாவிட்டால் அவர் அளிக்கும் தண்டனை என ஒற்றை மனிதர் ஆளுகையின் கீழ் அரசாட்சி நடந்து வந்தது. காலப்போக்கில் குடியாட்சி தத்துவம் உருவாக்கப்பட்டு மக்களால் மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி , நாட்டின் தேர்தல் தேர்தல்நடத்தப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மாநில சட்டசபைக்கு எம்எல்ஏ வாக அனுப்பும் நடைமுறை இருந்து வருகிறது.

எம்எல்ஏகடமை என்ன?

ஒரு தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அத்தொகுதியில் வாழும் மக்களின் பிரச்னைகளை அறிந்து அதனை ஆளும் அரசிடம் சட்டசபை வாயிலாக சொல்லி அதற்கு தீர்வு காண வேண்டும். மேலும் அம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகளான குடிநீர், ரோடு வசதி, கழிப்பிட வசதி, பள்ளி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவைகளை உரிய முறையில் கண்காணிப்பதோடு, அரசின் நலத்திட்டங்களை அத்தொகுதி மக்களுக்கு சேரும் வகையில் களப்பணியாற்றுவதே எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் முழு முதற் கடமையாகும். இதுமட்டும் அல்லாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதிப்பக்கம் தலைகாட்டிவிட்டு பின்னர் வராமல் இருப்பது பெருங்குற்றம். அது மக்களுக்குச் செய்யும் துரோகம். ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன? தொகுதிப்பக்கம் பல எம்எல்ஏக்கள் அடிக்கடி தலைகாட்டாமல்தான் இருக்கிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

political speech restriction,public demand action


political speech restriction,public demand action

மேடையில் அநாகரிகப் பேச்சு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்னை அருகே முதல்வரின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்ற போது நாற்காலி எடுத்துவரவில்லை என்பதற்காக கீழே கிடக்கும் கல்லை எடுத்து வீசுவது சோஷியல் மீடியா, பத்திரிகைகள் என அனைத்திலும் செய்திகளாக வெளியானது. அதேபோல் தி.க.தலைவர் வீரமணியை யாராவது தொட்டால் கையை வெட்டுவேன் என திமுகவின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மேடையில் பேசியிருப்பது அரசியலுக்கு சரியானதா? ஆளும்கட்சியான திமுகவைச் சேர்ந்த எம்.பியே இப்படி வன்முறையைத் துாண்டும் விதமாக பேசியிருப்பதைக் கண்டு அரசியல் நோக்கர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

முதல்வர் நடவடிக்கை தேவை?

தமிழகத்தினைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு படாதபாடுபட்டு ஆட்சியைப்பிடித்துள்ள திமுகவினர் இதுபோல் நாகரிகமற்று பேசும் பேச்சால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் அல்லாது தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இதுபோல் ஆளும்கட்சியினர் செய்யும் மிரட்டல், உருட்டல்களுக்கு பொதுமக்கள் பயந்துபோயுள்ளனர்.

political speech restriction,public demand action


political speech restriction,public demand action

என்னதான் கட்சித்தலைமை உத்தரவுகளைப் போட்டாலும் உள்ளூரிலுள்ள பிரமுகர்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை. ஆளும் கட்சியினர் என்றால் அதிரடி காட்டவேண்டுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாதாரண கவுன்சிலர்கள் முதல் அடுத்த கட்ட நிர்வாகிகள் வரை மக்களோடு மக்களாக களத்தில் சேர்ந்து அவர்களுக்கான பணியினைச் செய்யாமல் இதுபோல் மிரட்டல் பணிகளைச் செய்வதினால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவருமே அதிருப்தியடைந்துள்ளனர்.

political speech restriction,public demand action


political speech restriction,public demand action

கட்சி என்றால் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் மேடையில் பேசும்போது நாகரிக செயல்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். அது ஆளும்கட்சி என்பதல்ல மற்ற எந்த கட்சியாக இருந்தாலும் மக்களை நம்பித்தானே அரசியல் செய்கிறார்கள்.அந்த மக்கள் முன்னால் இதுபோன்ற அவதுாறான அவர் மீது கை வைத்தால் வெட்டுவேன் என பேசுவது சரியானதா? ஏன் இதுபோன்று பேசி மாநில மக்களை அரசியல்வாதிகள் அச்சுறுத்துகின்றனர்? இப்படிப் பேசினால் மக்களுக்கு எப்படி அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை வரும்? எதனை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது?

மனிதர்களை மனிதர்களாக மதிக்கவேண்டும். இதுதான் நியதி. எந்த குற்றம் செய்தாலும் அதற்கு சட்டம்தான் தண்டனை தரவேண்டும். நாமாக எப்படி தண்டிக்கலாம்? அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி இப்படி மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசலாமா?.

political speech restriction,public demand action


political speech restriction,public demand action

இதுபோன்று ஆளும்கட்சியினர் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் எந்தவொரு கட்சியினரும் பொதுவெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் மேடைப்பேச்சு அல்லது பொதுவெளிப்பேச்சு பேசக்கூடாது என்ற கட்டாய உத்தரவினை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே இப்படி பேசினால் தமிழகத்தில் எப்படி அமைதி ஏற்படும்? மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தற்போது வரை தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்ததில்லை. ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகளின் அதிரடிப் பேச்சு , அதிகாரப்பேச்சு மக்களை நிலை குலையச்செய்துள்ளது. இதுபோல் பேசுவது அவர்கள் சார்ந்த கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு கட்சியின் எதிர்கால வளர்ச்சி , நம்பிக்கை உள்ளிட்டவைகளும் சீர்குலையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

political speech restriction,public demand action


political speech restriction,public demand action

எனவே, தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோல் அவதுாறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடிவாளம் போடவேண்டும் என்பதே தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்களாகிய வாக்காளர்கள் தேர்தல் நேரத்தில் எடுக்கும் மாற்றத்தின் முடிவுகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்டுப்படவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

Updated On: 30 Jan 2023 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்