/* */

மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?

மேகதாது அணை விவகாரத்தில் உரிமை கோரும் சிவகுமாருக்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
X

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்.

மேகதாது அணை விவகாரத்தில் உரிமை கோரும் கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்டை வீடும், அண்டை நாடும் எவர் ஒருவருக்கு, எந்த நாட்டிற்கு இனிய உறவாக இருக்கிறார்களோ அந்த நபர் அல்லது அந்த நாடு சுபிட்சமாக இருக்கும் என்பது உலகளாவிய பழமொழி.

ஆனால் நமது தமிழ் மாநிலத்தை பொறுத்தவரை அண்டை வீடு அதாவது அண்டை மாநிலமும் (கர்நாடகம்) நமக்கு சரியாக இல்லை. இந்திய தேசத்தை பொறுத்தவரை அண்டை நாடான பாகிஸ்தானும் ஜென்ம விரோதி போல் இருப்பதால், இந்தியா அவ்வப்போது போர்க்கோலம் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. நமக்கு சட்டரீதியாக உள்ள உரிமையான காவிரி நீரை கூட தர மறுத்து அவ்வப்போது சண்டித்தனம் செய்து வருகிறது கர்நாடகம்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்று உள்ளது. அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி. கே. சிவகுமார் பொறுப்பு ஏற்று உள்ளார். கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறையும் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தம் மாநில மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்திருந்தது .ஒன்பதாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று அந்த வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.

ஆட்சி அமைந்த முதல் வாரத்திலேயே நீர்வளத்துறை பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் டி. கே. சிவகுமார் நீர்வளத்துறை அதிகாரிகளை கூட்டி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது நமது உரிமை. இதனை யாராலும் தடுக்க முடியாது. அணை கட்டியே தீர வேண்டும். அதற்கான வேலைகளை தீவிரப்படுத்துங்கள். நான் இதற்காக மத்திய அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லி செல்கிறேன். ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தவில்லை என்று சரமாரி கேள்விகள் எழுப்பி அதிகாரிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக கூடிய அபாயம் உள்ளது என்பதால் அங்கு அணை கட்டக்கூடாது என பல ஆண்டுகளாக தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த எதிர்ப்பையும் மீறி தான் தற்போது அணை கட்டுவோம் என கறார் ஆக கூறியுள்ளார் டி கே சிவகுமார். சிவகுமாரின் இந்த உரிமை கூறும் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சாட்டையடி போல் பதில் கொடுப்பார் என எதிர்பார்த்தால் அவர் சிவகுமாருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

9 நாள் வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து தாயகம் திரும்பி உள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். அவரிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பிய போது கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மட்டும் கூறியிருக்கிறார்.

ஆனால் அதன் பின்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எந்த அறிக்கையும் வரவில்லை. தண்ணீர் தரமாட்டோம் என்று கர்நாடகம் வரிந்து கட்டுகிறது. அதையே தங்களது உரிமை என்றும் கூறுகிறது. ஆனால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் அனைத்து உரிமைகளையும் பெற்ற நாம் இதுவரை வாய் திறக்காமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆதலால் தமிழக விவசாயிகள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் துரைமுருகன் போல் அவரும் தனது பங்கிற்கு சிவகுமாருக்கு வாழ்த்து சொல்லாமல் காவிரியில் கர்நாடகத்திற்கு உள்ள உரிமையுடன் நமக்குத்தான் உரிமை அதிகம், அதுவும் சட்ட ரீதியான உரிமை அதிகம் என்பதை நிலைநிறுத்த தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முதல் கட்டமாக நமக்கு உள்ள உரிமைகளை வெளிப்படுத்தி முதல்வர் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும்.

Updated On: 1 Jun 2023 3:49 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  2. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  3. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  4. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!
  5. தமிழ்நாடு
    தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை, திருச்சி வழியாக ரயில் சேவை அறிவிப்பு
  6. சூலூர்
    பண பலத்தை வைத்து திமுக வெற்றிபெற பார்க்கிறது : அண்ணாமலை புகார்
  7. அரசியல்
    சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனுக்கு கடுமையான...
  8. கல்வி
    நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
  9. தமிழ்நாடு
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஏப் 26ம் தேதி ...
  10. லைஃப்ஸ்டைல்
    பாஸ்தா - உலகின் பிரபல உணவு!