/* */

தொடருது....காங்கிரஸ்....கோஷ்டிபூசல் கர்நாடகாவில் தனி மெஜாரிட்டி கிடைத்தும் முதல்வர் தேர்வில் திணறும் காங்கிரஸ்....

Karnataka Congress local politics ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களைப் பெற்றும் கர்நாடக காங்கிரசில் நிலவும் கோஷ்டிபூசலால் யார் முதல்வர்? என திணறுகிறது.

HIGHLIGHTS

தொடருது....காங்கிரஸ்....கோஷ்டிபூசல்   கர்நாடகாவில் தனி மெஜாரிட்டி கிடைத்தும்   முதல்வர் தேர்வில்  திணறும் காங்கிரஸ்....
X

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிக்குழு(கோப்பு படம்)

Karnataka Congress local politics


காங்., கட்சி ஒருமுறை அல்ல... பலமுறை உடைந்த கட்சி. காங்கிரஸ் என்றாலே... கோஷ்டிகள் என்று தான் அர்த்தம். இந்தியாவில் காங்., கட்சியை போல் கோஷ்டி பூசல்கள் கொண்ட கட்சி வேறு எதுவும் கிடையாது. காரணம் எல்லா கட்சிகளிலும் ஆளுமையான தலைவர்கள் இருந்தனர். காங்.,கில் மட்டும் ஆளுமையான கோஷ்டிகள் உள்ளன. அதாவது தொண்டர்களை விட அதிக பலம் வாய்ந்த தலைவர்கள் தான் காங்., கட்சியில் அதிகம். நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா என காங்., கட்சியின் தலைவர்கள் வெறும் தலைவர்களாக மட்டுமே இருந்தனர். ஆளுமை என்பது இந்திராவிடம் சற்று அதிகம் இருந்தது. ஆனால் அவரால் கூட காங்., கோஷ்டிகளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

Karnataka Congress local politics


கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து விதான் சவுதா முன்பு சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் (கோப்பு படம்)

Karnataka Congress local politics

இந்நிலையில் கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் சோனியாவும், ராகுல்காந்தியும், பிரியங்காவும் சொகுசு வாழ்வில் தான் கவனம் செலுத்தினர். கட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை. இந்தியாவில் அதிகளவு ஊழல்கள், முறைகேடுகள், வங்கி குளறுபடிகள் நடந்த மிக மோசமான ஒரு அரசு நிர்வாகம் காங்கிரஸ் காலத்தில் தான் இருந்தது. அப்போது இருந்த காங்., கோஷ்டிகள் எல்லாமே அதிக முறைகேடுகளை கையாண்டனர்.. தவிர இந்த காலகட்டத்தில் கட்சியை வளர்க்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோஷ்டிகளை கட்டுக்குள் கொண்டு வரக்கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

Karnataka Congress local politics


கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆபீஸ் (கோப்பு படம்) வெற்றி பெற்றும் காத்து வாங்குதே...எல்லாம் கோஷ்டிபூசலா?

Karnataka Congress local politics

காங்கிரசுக்கு சரிவு

இதன் விளைவு காங்., கோஷ்டிகள் ஒருவரை ஒருவர் அழிக்க உள்கட்சியிலேயே வேலை செய்தனர். அதன் விளைவு அடுத்த வந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் ஆட்சியை காங்., இழந்தது. பல ஆண்டுகள் ஆன டெல்லியிலும் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறி கொடுத்தது. தொடர்ந்து பஞ்சாப், மகாராஷ்டிரம், காஷ்மீர், மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்தது. அதாவது காங்., கட்சி பிற மாநில கட்சிகளால் அழிக்கப்பட்டதை விட கோஷ்டிகளால் அழிக்கப்பட்டதே அதிகம். தமிழகத்தில் காங்., கட்சி இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போன நிலையிலும், இருக்கும் ஓரிரு தலைவர்களும் கோஷ்டி அரசியல் செய்வது காங்., கட்சியின் மரபணு கோளாறே காரணம் என்பது போல் ஆகிப்போனது

Karnataka Congress local politics


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் செய்யும்போது ஒற்றுமையுடன் பேட்டியளித்த முன்னாள்முதல்வர் சித்தராமைய்யா, மாநில தலைவர் சிவக்குமார். (கோப்பு படம்)

Karnataka Congress local politics

2ஆண்டுகளாக கடும் உழைப்பு

இந்நிலையில் கர்நாடகாவில் அந்த மாநில தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தாராமையா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என மூன்று பெரும் தலைகள் ஒன்றாக இணைந்து தேர்தல் வேலை பார்த்தனர். தவிர கர்நாடகாவில் சிறுபான்மை மக்களை ஒன்று சேர்ப்பதில் பெரும் வெற்றி கண்டனர். என்ன ஆனாலும் சரி... ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற தீவிர சிந்தனையுடன் இரண்டு ஆண்டுகளாக உழைத்தனர். கர்நாடகாவில் காங்., கட்சி வெற்றிக்கான உழைப்பில் ராகுல், பிரியங்கா, சோனியாவின் பங்கு எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம். இது வெற்றிக்கு உழைத்த மூவருக்கும் தெரியும். இதனால் தான் நான் உழைத்தேன். வெற்றி பெற்றேன். உன் பேச்சை ஏன் கேட்க வேண்டும் என சோனியா, ராகுல், பிரியங்காவின் பேச்சை கேட்க மறுக்கின்றனர்.

Karnataka Congress local politics


தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் பாதயாத்திரை பயணம் மேற்கொண்ட முன்னாள் அகிலஇந்திய தலைவர் ராகுலுடன் இன்றைய முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமைய்யா, சிவக்குமார்....இணைந்த கைகளாய்(கோப்பு படம்)

Karnataka Congress local politics

முதல்வர் பதவி யாருக்கு?

சித்தாராமையாவும், சிவக்குமாரும் கூட முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறு இல்லை. இதில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் முதல்வர் பதவிக்கு குறி வைப்பது அக்கட்சி தலைமையை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது. காங்., பெற்ற 136 சீட்டுகளில் 80 பேர் சித்தாராமையாவினை ஆதரித்தால் மீதம் உள்ள 56 பேர் சிவக்குமாரை ஆதரிக்கின்றனர். சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைக்கும் அளவுக்கு அவர் சென்று விடுவார். இதனால் தான் காங்., மேலிடம் பலமுறை அழைத்தும் அவர் தனது பிறந்தநாள் விழாவை காரணம் காட்டி அவர் டெல்லி செல்லவில்லை.

Karnataka Congress local politics


கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதற்கு அகிலஇந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் முதல்வர் சித்தராமைய்யாவுக்கு இனிப்பு வழங்குகிறார்.(அல்வாவா?)(கோப்பு படம்)

Karnataka Congress local politics

எப்படியும் காங்., முட்டி மோதி உடையும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என பா.ஜ.க.,வும் காத்திருப்பது காங்., மேலிடத்திற்கு காய்ச்சலை வரவழைத்து விட்டது. இதனால் சிரமப்பட்டு பெற்ற வெற்றி வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் ராகுல், பிரியங்கா நேரடியாக சிவக்குமாரிடம் பேசி அவரை டெல்லி வரவழைத்து பேசி வருகின்றனர். ஆமாம் இப்போதைய டெல்லி மேலிடம் கர்நாடக காங்., கட்சிக்கு உத்தரவிடும் அளவு வலிமையாக இல்லை. கெஞ்சும் நிலையில் தான் உள்ளது. காரணம் இன்னும் ஓராண்டுக்குள் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில், இந்த மூவரில் யாரை பகைத்துக் கொண்டாலும், லோக்சபா தொகுதிகள் போய் விடும் என்பதால் டெல்லி மேலிடம் (ராகுல், பிரியங்கா, சோனியா) கர்நாடக தலைமையிடம் கெஞ்சும் நிலையில் தான் உள்ளனர். இதனை உணர்ந்து இவர்கள் மிஞ்சுவதால் நிலைமை இழுபறியாக உள்ளது.

Karnataka Congress local politics


இணைந்த கைகள் ஆறானால் அசைக்கவே முடியாது என்கிறார்களா?....இருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார்களே? முதல்வர் பதவிக்கு திணறுது காங்கிரஸ் கர்நாடகாவில் முடிவெடுக்காமல்...(கோப்பு படம்)

Karnataka Congress local politics

ஆட்சி நிலைக்குமா?

அடுத்த பேரிடியாக காங்., 72 தொகுதிகள் வெற்றி பெற நாங்கள் தான் காரணம். எங்களுக்கு துணை முதல்வர், ஐந்து முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி துாக்கியிருப்பதும் காங்., மேலிடத்தை கலக்கி வருகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் அளவு தற்போதைய நிலையில் காங்., கட்சியில் வலுவான தலைவர்களோ, அனுபவம் வாய்ந்த தலைவர்களோ இல்லை. கர்நாடகாவின் வெற்றி சிறு பிள்ளை கையில் கிடைத்த பொம்மை போல் ஆகிப்போனது. இந்த சிக்கல் தற்போதைக்கு தற்காலிகமாக தீர்க்கப்பட்டாலும், எந்த நேரமும் மகாராஷ்டிராவில் நடந்தது போல் நிச்சயம் கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம் நடக்கும். விரைவில் லோக்சபா தேர்தல் வருவதால், கர்நாடகாவின் ஆட்சி மாற்றத்தை அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Updated On: 16 May 2023 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...