/* */

பா.ஜ. கிடுக்கிப் பிடியில் அதிமுக சரண்டர்?: எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜன.17 ந்தேதி அதிமுக இரு அணிகள் இணையுமா?

jan 17 th admk 2 team to be merge? அதிமுக நிறுவனர் எம்.ஜி. ஆர். பிறந்த நாளான ஜனவரி 17 ந்தேதியன்ற அதிமுக இரு அணிகளும் ஒரே அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது?.

HIGHLIGHTS

jan 17 th admk 2 team to be merge?


சென்னையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமை அலுவலகம் (கோப்பு படம்)

jan 17 th admk 2 team to be merge?

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதால் எப்படியும் மத்திய அரசின் தயவு தேவை என்ற நிலையில் அதிமுக உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் வரும் ஜன.17ல் ஒன்றாக அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்களும் பாஜ நிர்வாகிகளும் எதிர்நோக்கியுள்ளனர் என்பதே தற்போதைய தமிழகத்தின் பரபரப்பு செய்தியாகும்.

தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக துவக்கப்பட்ட கட்சிதான் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம். இதன் நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வரும், சினிமாநடிகருமான மக்கள் திலகம் என மக்களால் போற்றப்பட்டவரான எம்.ஜி. ஆர். அவரது மறைவுக்கு பின் அதிமுக இருக்காது என தப்பு கணக்கு போட்டது திமுக. ஆனால் ஆரம்பத்தில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டு அதிமுக ஜா அணி, அதிமுக ஜெ அணி என இரு அணியாக பிரிந்தது. பின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 30 ஆண்டுகளாக நல்வழியில் கட்சிபீடு நடை போட்டது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு மிகுந்த கட்சியாக இருந்தது அதிமுக.

jan 17 th admk 2 team to be merge?


முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர், மனைவி ஜானகியுடன், அருகில் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர்.. அரிய புகைப்படம் (கோப்பு படம்)

jan 17 th admk 2 team to be merge?

பாஜவுக்கு சிக்கல் ?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நல்லதொரு தலைமை இல்லாமல் தடுமாறுகிறது. முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இருவேறு அணிகளாக உள்ளதால் அதிமுக நிர்வாகிகளே என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வரும் 2024 லோக்சபா, 2026 தமிழக சட்டசபை தேர்தல் ஆகியவைகளில் அதிமுக வெற்றி பெறுவதில் பல சிக்கல்கள் உண்டு என்பதால் இரு அணிகளும் இணைந்தால்தான் பாஜவுக்கும் தமிழகத்தில் கூட்டணி சேர நல்ல வாய்ப்பாக இருக்கும் என கணக்கு போட்டு இருஅணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜ.

தமிழகத்தில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரமணா, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. இதனால் பாஜ மேலிடத்தின் நிபந்தனைகள் குறித்து முன்னாள் முதல்வர் இபிஎஸ் தரப்பினர் பரிசீலித்து வருவதால் இரு அணிகளும் வரும் ஜனவரி மாதம் 17 ந்தேதி வரும் எம்ஜிஆர் பிறந்தநாளின் போது இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகதெரிகிறது.

jan 17 th admk 2 team to be merge?


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆருடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜானகிஅம்மாள். (கோப்பு படம்)

கவர்னர் சந்திப்பு

தமிழக முன்னாள் முதல்வரான இபிஎஸ் சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் ரவியை நேரடியாக சந்தித்து தற்போதைய திமுக அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதாவது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைக்கலாச்சாரம், மருந்து தட்டுப்பாடு, என புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து திமுக தொழில்துறை அமைச்சர் தங்கம் .தென்னரசு இரு வேறு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளதால் தன் அணியைப் பலப்படுத்திக்கொள்வதற்காக முன்னாள் முதல்வர் இபிஎஸ் முயற்சிசெய்து வருகிறார் என்றார்.

தற்போது குட்கா வழக்கால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள 2 அமைச்சர்கள் மட்டுமின்றி மத்திய அரசின் வழக்குகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர்களும் இதனால் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

jan 17 th admk 2 team to be merge?


தமிழக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் (கோப்பு படம்)

jan 17 th admk 2 team to be merge?

கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கும்போது,

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் இல்லாத அதிமுகவோடு பாஜ கூட்டணி வைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் இபிஎஸ் விரும்புகிறார். ஆனால் பாஜ தரப்பில் கடந்த 1998 ம் ஆண்டு இரு அணிகளும் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது போல் ஒரே அதிமுகஅணியோடு கூட்டணி வைக்க வேண்டும் என பாஜ தலைமை விரும்புவதாக தெரிகிறது.

இதற்காக பாஜ போட்டியிடும் தொகுதிகளான 10 தொகுதிகளில் ஒரு இடத்தினை மட்டும் தினகரன் அணிக்கு ஒதுக்கிவிட்டு மற்ற 9 தொகுதிகளில் கூட்டணியோடு போட்டியிட பாஜ தலைமை தயாராக உள்ளதோடு பேச்சு வார்த்தையும் நடத்தி உள்ளது. இதற்கு இபிஎஸ் முழுமையான பதிலைத் தெரிவிக்காமல் உள்ளார்.

பாஜ இப்படி கணக்கு போடுவதால் இபிஎஸ் தரப்பு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் வி.சி ஆகியவற்றோடு கூட்டணி அமைக்க விரும்பி பேச்சு வார்த்தை நடத்தி அதில் தோல்வியும் அடைந்துவிட்டது. இதன் எதிரொலியாகவே தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ள அதிமுக ஒன்றிணைந்தாலும் பழைய வலிமையைப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

jan 17 th admk 2 team to be merge?

அதிமுக சரண்டரா?

தனிமையாக இருந்து கட்சியை நடத்தலாம் என முன்னாள் முதல்வர் இபிஎஸ் விரும்பினாலும் கூட்டணிக்கட்சியான பாஜ அதனை விரும்பவில்லை். ஒன்று பட்ட அதிமுகவோடு கூட்டணி என கறாராக சொல்லிவிட்டதால் மாற்று யோசனையும் தோல்வியைத் தழுவியதால் வேறு வழியின்றி பாஜவின் நிபந்தனைகளுக்கு இபிஎஸ் சரண்டராவார் போல் தெரிகிறது.

மேலும் அதிமுக தரப்பிலான வழக்குகளான பொதுச்செயலாளர் வழக்கு, இரட்டை இலை சின்னம், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் இவையனைத்திற்கும் பாரதீய ஜனதா மேலிடத்தின் ஆதரவானது அவசியம் தேவை என்பதால் தனது பிடிவாத்தினை தளர்த்தி பாஜ நிபந்தனைகளை ஏற்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாளான ஜனவரி 17 ந்தேதி அன்று இரு அதிமுக அணிகளும் இணையும் விழா நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டார தரப்பில் தெரிவித்துள்ளன.

Updated On: 28 Nov 2022 4:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்