/* */

நான் நிரபராதி என்னை சிக்க வைக்க யாரோ பின்னால் செயல்படுகிறார்கள்-டிடிவி

நான் நிரபராதி என டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நான் நிரபராதி என்னை சிக்க வைக்க யாரோ பின்னால் செயல்படுகிறார்கள்-டிடிவி
X

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கத் துறையினர் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது டி.டி.வி.தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ''சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது'' என்று கூறினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

இதற்கிடையே, சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் நேற்று ஆஜரானார். சுகேஷின் வாக்குமூலம் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 11 மணி வரை நீடித்தது.

இதன் பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுகேஷ் சந்திரா ஒவ்வொரு முறையும் வரும்போது ஒரு வாக்குமூலம் கொடுப்பதின் காரணமாக விசாரணை நடத்துகிறார்கள். இந்த வழக்கில் சிக்க வைக்க சுகேஷ் சந்திரா திரும்ப திரும்ப வாக்குமூலத்தை மாற்றுகிறார் என்று நினைக்கிறேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை நான் நிரபராதி. எந்த தப்பும் செய்யவில்லை. யாரோ ஒருவர் கொடுக்கிற வாக்குமூலத்தால் என்னை அழைத்து கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் அழைத்து கேட்கிறார்கள்" என்றார்.

Updated On: 13 April 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  8. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  9. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  10. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!