/* */

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, சென்னையில் பேரணி நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு
X

கோப்பு படம் 

தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில், சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டா்கள் என, பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் கோட்டையை நோக்கி சென்றனர். அவர்களை, தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினா். அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சூழலில், நேற்று பேரணி நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா். சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Updated On: 1 Jun 2022 5:00 AM GMT

Related News