/* */

2024ம் ஆண்டில் ராகுல் பிரதமர் ஆக முடியுமா ? ( ஒரு அரசியல் அலசல்)

2024ம் ஆண்டில் ராகுல் பிரதமர் ஆக முடியுமா ? ( ஒரு அரசியல் அலசல்)
X

ராகுல் காந்தி.

ஆக முடியும். ஆனால், எப்படியெல்லாம் மாறினால் அவர் பிரதமர் ஆகலாம் என்று நாம் சொல்ல முடியும். முதலாவதாக அவரது கட்சி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த வெற்றியை பெறவேண்டுமானால் காங்கிரஸ் தலைமை வலுவானதாக இருக்க வேண்டும். ஆக, ராகுல் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தன்னை மேம்படுத்திக்கொள்ள,தனது ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவராக தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

மாற்றிக்கொள்ள வேண்டும் :

ராகுல், முதலில் தனது குழந்தைத்தனமான நடத்தை, பேச்சுக்கள், அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக விட்டு விட்டு முதிர்ச்சியானவராக மாற வேண்டும். ஆனால், இவை அவ்வளவு சுலபமாக நடந்துவிடுமா என்றால் சாத்தியங்கள் குறைவே. ஏற்கனவே, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" அப்படி என்றால் 5 வயதில் தன்னை மாற்றிக்கொள்ளாத ராகுல் 50வயதை எட்டியிருக்கும்போது மாற்றிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எல்லோருக்குமே எழும்.

காங்கிரஸ் வாக்குகள் :

அடுத்ததாக, நம் நாட்டு மக்கள், காங்கிரசுக்கு ஒத்த கருத்துடன் வாக்களிக்க வேண்டும். மேலும் நாடுமுழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் பரிந்துரைக்கும் வேட்பாளர்கள் சிறந்தவர்களாக, நல்லவர்களாக, எந்த குற்றச்சாட்டுகளிலும் சிக்காதவர்களாக இருக்கவேண்டும். மோசடி, முறைகேடான சொத்துக் குவிப்பு, அவர்கள் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லாத, நல்ல ஒழுக்கம் போன்ற சிறந்த நற்குணங்களும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

அவ்வாறான வேட்பாளர்கள் காங்கிரசில் இருப்பார்கள். ஆனால், விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இருப்பார்கள். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 37 இடங்களில், 7 எம்.பி தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியில் இருந்ததால் மட்டுமே இந்த வெற்றியும் கிடைத்தது என்பதை காங்கிரஸ் கட்சியினரும் நன்றாகவே அறிவார்கள்.

2014 தேர்தலில் பெரிய வீழ்ச்சி :

2014ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தார். அப்போதைய தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 39 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது. பா.ஜ.க 2 இடங்களைப்பெற்றது. அசைக்கமுடியாத சக்தியாக ஜெயலலிதா விளங்கினார். மோடிக்கே கடும் சவாலாக இருந்தார்.

அப்போதைய காலகட்டத்தில் காங்., முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் பண மோசடி வழக்கில், திகார் சிறையில் இருந்தார். இவையெல்லாம் காங்கிரஸ் தோல்விக்கு பெரும் பங்காக இருந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்தது. பெரும்பாலான வட இந்திய மாநிலங்களிலும், காங்கிரஸ் மக்களின் ஆதரவை இழந்தது. இன்றுவரை அந்த வீழ்ச்சியில் இருந்து முற்றிலும் காங்கிரசால் எழுந்து வரமுடியவில்லை. அதற்கு முக்கிய காரணியாக இருப்பது காங்கிரஸ் கட்சியை வழிநடத்த சரியான தலைமை இல்லாததே.

கட்சி சீரமைப்பு :

சரியான தலைமை இல்லாத குறைபாட்டால்தான் மாநிலங்கள்தோறும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிகாரப்போட்டிகளும், உட்பூசல்களும் மலிந்து கிடக்கின்றன. முதலில் கட்சியை சீர்படுத்தவேண்டும். முரண்பாடற்ற தலைவர்களை பொறுப்புக்கு கொண்டுவரவேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை நல்வழி நடத்தவேண்டும். இவைகளை முறையாக செய்ய சரியான தலைமை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். தேசிய அளவிலான ஒரு பாரம்பரியமிக்க கட்சி இப்படி சின்னாபின்னமாகி கிடப்பதற்கு கட்சியின் தலைமையும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித்தொண்டர்களுமே காரணம்.

ராகுல் கையில் கயிறு :

2019 தேர்தலிலும் ராகுல், பிரதமர் மோடியை தோற்கடிக்க பெரும் முயற்சிகள் செய்தார். ஆனால்,அவரது ஜம்பம் பலிக்கவில்லை. அதற்கு காரணம் அவரிடம் இருக்கும் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறை. முன்னதாக கூறியுள்ளது போல அவர் தன்னை ஒரு முழுமையான முதிர்ச்சிமிகு தலைமையாக கட்டமைத்துக்கொண்டால் மட்டுமே, பிரதமர் ஆவதற்கான சாத்தியங்கள் கிடைக்கலாம். எனவே, இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் 2024ம் ஆண்டு தேர்தல், காங்கிரஸ் அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்க வழிவகுக்குமா அல்லது வீழ்ந்து போகுமா என்பதற்கான கட்டுப்பாட்டு கயிறும் ராகுலின் கையில்தான் உள்ளது.

Updated On: 20 Jan 2022 9:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?