/* */

2024 election alliance parties name in tamil இந்தியா, தேசிய ஜனநாயககூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது :உங்களுக்கு தெரியுமா?-....

2024 election alliance parties name in tamil இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் இருபெரும் கூட்டணிகள் களத்தில் நேரிடையாக சந்திக்க உள்ளன.

HIGHLIGHTS

2024 election alliance parties name in tamil  இந்தியா, தேசிய ஜனநாயககூட்டணியில்  எந்தெந்த கட்சிகள் உள்ளது :உங்களுக்கு தெரியுமா?-....
X

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் -இந்தியா  (கோப்பு படம்)

2024 election alliance parties name in tamil

இந்தியாவில் கடந்த 2014 மற்றும் 2019 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜ அமோகவெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரசுக்கு குறைந்த அளவிலான இடங்களே கிடைத்தன. முன்பெல்லாம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகள் மாறின. ஆனால் தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. தமிழகத்தில் 2011 மற்றும் 2016 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த அ திமுக கடந்த இரண்டு தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆட்சியையும் 10 ஆண்டுகளையும் பூர்த்தி செய்தது.

2024 election alliance parties name in tamil


2024 election alliance parties name in tamil

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பிரதமர் பதவியில் நீடித்து வரும் நரேந்திரமோடியின் ஆட்சியைத்தொடர விடக்கூடாது என எதிர்க்கட்சிகள் அதுவும் 26 கட்சிகள் ஒன்றிணைந்து ’’இந்தியா’’என்ற பெயரில் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.

அதேபோல் பாஜ தலைமையில் தேசிய ஜனநாயககூட்டணியில் 38 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த இருகூட்டணியும் களத்தில் இறங்க இருப்பதால் வரும் லோக்சபா தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்? என்பது வாக்காளர்களாகிய மக்கள் கையில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

2024 election alliance parties name in tamil


இந்தியாவில் 2024ம் ஆண்டு லோக்சபாவிற்கு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் இப்போதே வேலைகளைத் துவக்கியுள்ளன. அதுமட்டும் அல்லாமல் 2024 பொதுத்தேர்தலில் இ ரு மாபெரும் கூட்டணி கட்சிகள் களத்தில் இறங்க தயாராக உள்ளன. இதற்கான கூட்டமானது சமீபத்தில் நடந்ததில் தங்களுடைய கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைந்துள்ளன என்பதை இருகூட்டணி சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 38கட்சிகள் பெயர்கள் வருமாறு:,

1.பாரதிய ஜனதா, 2.சிவசேனா-ஷிண்டே, 3.தேசியவாத காங்கிரஸ்-அஜீத் பவார்,4.ராஷ்ட்ரீய லோக் ஜன சக்தி,5.அதிமுக,6.அப்னா தள்- சோனிலால்,7.தேசிய மக்கள் கட்சி, 8.தேசிய ஜனநாயக முன்னணி கட்சி, 9.ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு, 10.சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா, 11.மிஜோ தேசிய முன்னணி, 12.திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணி, 13.நாகா மக்கள் முன்னணி, 14.இந்திய குடியரசு கட்சி-அத்வாலே,15.அசாம் கணபரிஷத், 16.பாட்டாளி மக்கள் கட்சி, 17.தமிழ் மாநில காங்கிரஸ் ,18.ஐக்கிய புரட்சிகர மக்கள் கட்சி, 19.சுகெல்தேவ் பாரதிய சமாஜ், 20.அகாலிதளம்-சன்யுக்ல் 21.மஹாராட்டிராவாதி கோமந்தக் கட்சி, 22.ஜனநாயக ஜனதா கட்சி, 23.பிரஹர் ஜனசக்தி கட்சி, 24.ராஷ்ட்ரீய சமாஜ் பக்‌ஷா, 25.ஜன் சுரஷ்யா சக்தி கட்சி, 26.கூகி மக்கள் கூட்டணி 27.ஐக்கிய ஜனநாயக கட்சி-மேகாலயா 28.ஹில்ஸ்டேட் மக்கள் ஜனநாயக கட்சி 29.நிஷாத் கட்சி 30.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 31.எச்.ஏ.எம் 32.ஜன சேனா கட்சி33.ஹரியானா லோஹித் கட்சி, 34.பாரத் தர்ம ஜன சேனா 35.கேரளா காமராஜ் காங்கிரஸ் 36.புதிய தமிழகம் 37.லோகஜன் சக்தி- சிராக் 38.கூர்க்கா தேசிய புரட்சிகர முன்னணி.

2024 election alliance parties name in tamil


இந்தியா - கூட்டணியில் உள்ள கட்சிகளின் பெயர்கள் வருமாறு:-

1.காங்கிரஸ் 2.திரிணாமுல் காங்கிரஸ் 3.திமுக 4.ஆம் ஆத்மி 5.ஐக்கிய ஜனதா தளம் 6.ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 8.தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார் 9.சமாஜ்வாதி 10.சிவசேனா உத்தரப் பாலசாகேப் தாக்கரே 11.ராஷ்ட்ரீய லோக்தளம் 12.அப்னா தளம் - காமாராவாடி 13. ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 14.மக்கள் ஜனநாயக கட்சி 15.மார்க்சிஸ்ட் கம்யூ 16.இ.கம்யூ 17.இ.கம்யூ- மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை 18.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 19.அகில இந்திய பார்வர்டு பிளாக் 20.மதிமுக 21. விசிக 22.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 23.மனிதநேய மக்கள் கட்சி 24.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 25.கேரள காங்கிரஸ்-எம்.26.கேரள காங்கிரஸ் -ஜோசப் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

இந்தியா கூட்டணி கட்சியின் மூன்றாவது கூட்டம் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது 11 ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என பெங்களூரில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இரு கூட்டணி கட்சிகளும் லோக்சபா களத்தில் இறங்க ஆயத்தமாகி வருகின்றன. இதில் எந்தெந்த கட்சி தேர்தலில் போட்டியிடும் என்பது குறித்து கூட்டணி பங்கீட்டின்போது அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Updated On: 19 July 2023 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்