/* */

சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று

பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் பயமே இருந்த சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று

HIGHLIGHTS

சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று
X

பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் பயமே இருந்த சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று

த ஸ்டேட்ஸ்மேன் எனும் ஆங்கிலப் பத்திரிகையில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களை ஏறத்தாழ 60 ஆண்டுகள் எழுதியவர். தமிழ்ப் பத்திரிகைகளிலும் இசை விமர்சனங்கள் எழுதினார்.

சுப்புடு சென்னையில் வருடந்தோரும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும், ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப் பக்கங்களை ஒதுக்கிவிடுவார்கள்!

தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில் அதைக் காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் பயமே இருந்து வந்ததாம்,

அதற்கு காரணம் சுப்புடு!பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..! பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு! மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்! அதற்கு முன்பொரு முறை ஜேசுதாஸை கச்சேரி செய்ய வரும் முன்பு நன்றாக பயிற்சி எடுத்து வரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்!

ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சுப்புடுவை தாக்கினார்களாம்! (பாருங்க எவ்ளோ கொலவெறியை உண்டு பண்ற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்காரு!)

இளையராஜாவின் இசையில் வெளிவந்த சிந்து பைரவி படம் பார்த்து சுப்புடு கூறிய வார்த்தைகள் " 25 வருஷத்த தமிழ் சினிமாவில வேஸ்ட் பண்ணிட்டீங்களேன்னுத்தான்"

தேவாவுக்கு,இளையராஜா பரவாயில்லன்னு சொன்னவரொட அடுத்த அட்டாக் ரகுமான் காதலன் படத்து உன்னிகிருஷணன் பாடல்! (படத்துலயே அந்த பாட்டுத்தான் சூப்பர்ன்னு எல்லாரும் சொல்வாங்க!)

கடைசியாக அவர் சொன்ன கமெண்ட் "இவங்க ரெண்டு பேருக்கு,தேவாவே பெஸ்ட்ன்னு..!

ஒரு பரதநாட்டியக்கலைஞரை பற்றி சுப்புடு குறிப்பிட்டது"சுற்றளவை குறைத்தால் உலகம் சுற்றலாம்ன்னா" பாருங்களேன் ஆளுக்கு எவ்ளோ குசும்புன்னு!

தவறுகளை, கடுமையாகச் சுட்டிக் காட்டும் இவரது விமர்சனம், நல்லவற்றை பாராட்டுவதிலும், பாரபட்சமின்றி இருக்கும். பாம்பே ஜெயஸ்ரீ, சவுமியா, உன்னி கிருஷ்ணன், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் போன்ற பலரின் திறமையை, தன் விமர்சனம் வழியாக, வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவர், உடல் நலம் குன்றியிருந்த போது, அப்போதைய, ஜனாதிபதி அப்துல்கலாம், 'உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டார். 'நான், இறந்த பின், உங்கள் மொகல் தோட்டத்தில் இருந்து, ஒரு மஞ்சள் ரோஜாவை பறித்து, என் உடல் மீது வையுங்கள்; போதும்' என்றார்.

கடந்த, 2007, மார்ச், 29ல், காலமானார். அவரின் உடல் மீது, மொகல் தோட்டத்து, மஞ்சள் ரோஜாக் கொத்து வைத்து, அப்துல் கலாம் அஞ்சலி செலுத்தினார்.

அப்பேர்ப்பட்ட சுப்புடு இறந்த தினம் இன்று.

Updated On: 29 March 2022 5:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...