/* */

பளபளக்கும் கூந்தலை பெற சில டிப்ஸ்

அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

HIGHLIGHTS

பளபளக்கும் கூந்தலை பெற சில டிப்ஸ்
X

பைல் படம்.

சமைப்பதற்கு அரிசியை ஊறவைத்த நீரை பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். முடி உதிர்தல், முடி உலர்வடைதல், முடி மெலிதல், பொடுகு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

அரிசி நீர்-வெங்காய சாறு:

இந்த கலவை முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் போலிக் அமிலம், சல்பர் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவை முடி உடைவது, முடி மெலிவதை குறைக்கவும் உதவும்.

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும். ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரிசி நீர் - கிரீன் டீ:

இந்த கலவையில் கண்டிஷனிங் பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைமுடியை மென்மையாக்கும்.

செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.

அரிசி நீர்-ஆரஞ்சு தோல்:

பொடுகு தொல்லையை போக்குவது, அதிகப்படியான எண்ணெய் தன்மையை குறைப்பது என ஆரஞ்சு தோல், தலைமுடிக்கு பல வகைகளில் நன்மை களை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மட்டுமின்றி, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த கலவை அரிசி நீருடன் சேர்ந்து முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். பளபளப்பான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும். ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.

Updated On: 10 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  3. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  4. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  5. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  6. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  7. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  8. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  9. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  10. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்: