/* */

தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்தநாள் இன்று

இந்தியாவின் பெப்பீசு, நாட்குறிப்பு வேந்தர் தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை பர்த் டே டுடே

HIGHLIGHTS

தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்தநாள் இன்று
X

இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் அழைக்கப்பட்ட தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளை பர்த் டே டுடே

இரக்கமற்ற ஓர் உலகில், ஒரு நாட்குறிப்பு என்ப்படும் டைரி பிறர் வேதனையை தன் வேதனையாய் எடுத்துக்கொள்ளும், நம்பகமான நண்பன் ஆகலாம். "நம் சொந்த வாழ்க்கைப் பயணங்களை பதிவுசெய்யும் வாழ்க்கைப் படத் தொகுப்பை பாதுகாத்து வைத்திருக்க உதவுகிறது" என எழுத்தாளர் கிறிஸ்டீனா பால்ட்வின் கூறுகிறார். நம் கடந்தகால தோற்றத்தை படங்களின் வாயிலாக படிப்படியாய் காண்பிக்கும் போட்டோ ஆல்பத்தைப் போன்று நம் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய குறிப்புகளை எழுத்துவடிவ "சித்தரிப்புகளின்" வாயிலாக தெரிவித்து, பத்திரமாக பதிவுசெய்து வைப்பது டைரியாகும்.

பைபிள் காலங்களில் அரசாங்கங்கள் முக்கிய நிகழ்ச்சிகளை குறித்து வைப்பது வழக்கமாய் இருந்தது. அப்படிப்பட்ட பல அதிகாரப்பூர்வ பதிவுகளைப் பற்றி பைபிளும் தெரிவிக்கிறது. (எண்ணாகமம் 21:14, 15; யோசுவா 10:12, 13) கிரேக்கர்கள் எஃபெமெரீடஸ்* எனப்பட்ட பஞ்சாங்க முறையை உருவாக்கினர்; அதில் நட்சத்திரங்களும் கிரகங்களும் அன்றாடம் நகருவதை குறித்து வைத்தனர். கிரேக்கரை வென்ற ரோமர்கள், இக்குறிப்பேடுகளை தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டனர்; ஆனால் நடைமுறை பயனுள்ள, சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் ஆர்வமூட்டும் அன்றாட நிகழ்ச்சிகளையும் சேர்ப்பதன் மூலம் அவற்றின் மதிப்பைக் கூட்டினர். அவற்றை டையாரியும் என்று அழைத்தனர்; இது டையேஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது; இதற்கு "நாள்" என்று அர்த்தம்.

என்றாலும், 17-⁠ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ்-⁠ன் டைரி குறிப்பிலிருந்துதான் மேலை நாடுகளில் டைரி தனிப்பட்ட அன்றாட நிகழ்ச்சிகளை சேகரிக்கும் களஞ்சியமாக ஆனது. வழக்கத்திற்கு மாறாக, மதப்பற்றும் உலகப் பற்றும் நிறைந்திருந்த பிப்ஸின் அந்த டைரி குறிப்பிலிருந்து ஆங்கிலேய அரசர் இரண்டாம் சார்ல்ஸின் ஆட்சியின்போது வாழ்ந்த மக்களைப் பற்றிய மிகவும் நுட்பமான விவரங்களை சரித்திராசிரியர்கள் பெற்றுள்ளனர்.

அப்போதிலிருந்து, டைரி குறிப்பு எழுதுவது அதிக பிரபலமாகி வந்தது. அநேக டைரி குறிப்புகள் மதிப்பு வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் ஆயின. இவற்றுள் குறிப்பிடத்தக்கது, நாசிக்களிடமிருந்து தலைமறைவாய் இருந்த ஓர் இளம் யூதப் பெண்ணின் டைரி குறிப்பாகும். ஆனா ஃபிராங்க் எழுதிய ஓர் இளம் பெண்ணின் டைரி குறிப்பு (ஆங்கிலம்) மனிதன் சகமனிதனுக்கு இழைக்கும் கொடுமைக்கு வேதனை யானதோர் அத்தாட்சியாகும்.

இதனிடையே நம்ம தமிழ் நாட்டின் ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் டியூப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றுகின்றனர்.

இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

18-ம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரெங்கப்பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம்பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம்பிள்ளை (1777- 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மேற்கூறிய நால்வர் மட்டுமின்றி 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப்பிள்ளையின் மகனான குருவப்பபிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம்பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். (ஜெயசீலன் ஸ்டீபன் 1999; 32) ஆனால் இவையிரண்டும் இன்னும் வரலாற்றாய்வாளர்களின் பார்வைக்குக் கிட்டவில்லை.

Updated On: 30 March 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு