/* */

நான்கு மாநில தேர்தல் வெற்றி: தமிழகத்தில் கவனம் செலுத்த பாஜக மேலிடம் முடிவு...!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 4 ல் வாகை சூடியிருக்கும் பாஜக மேலிடம் தமிழகம் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது

HIGHLIGHTS

நான்கு மாநில தேர்தல் வெற்றி: தமிழகத்தில் கவனம் செலுத்த பாஜக மேலிடம் முடிவு...!
X

பைல் படம்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கில் வெற்றி வாகை சூடியிருக்கும் பா.ஜ.க மேலிடம் அடுத்து தமிழகம் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.க தனித்து போட்டியிட்டு தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலின் போது, கோவையில் போட்டியிட்ட வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். இவருடைய அதிரடி பிரசாரத்தால் தான் வானதி வெற்றி பெற்றார் என பா.ஜ.க தலைமைக்கு சொல்லப்பட்டது.

இந்நிலையில், உ.பி., முதல்வராக இரண்டாம் முறையாக பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத் விரைவில் தமிழகம் வர உள்ளார். அவரோடு பிரதமர் மோடியும் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவாராம். இருவரும் கோவையில் நடக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பர் என தில்லி பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தில்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வெற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரு முக்கிய விஷயத்தை பேசினார். குடும்ப அரசியலால் தான் ஊழல் பெருகி வருகிறது.

எனவே, இந்த குடும்ப அரசியலை ஒழிப்பேன் என அவர் அதில் குறிப்பிட்டாராம். தமிழகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் வாரிசு குடும்பங்கள் இருப்பது போல, இந்தியா முழுதும் 10 வாரிசு குடும்பங்கள் தீவிர அரசியலில் உள்ளன. காங்கிரசின் குடும்ப அரசியலை ஒழித்த பா.ஜ.க அடுத்து, தமிழக குடும்ப அரசியலை ஒரு வழியாக்க முடிவெடுத்துஉள்ளதாம். இதன் விளைவு தான் மோடி, யோகி இருவரின் தமிழகம் விசிட் என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.

Updated On: 16 March 2022 9:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு