/* */

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் நிறுவனர் தின விழா"

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் நிறுவனர் தின விழா
X

நிறுவனர் 



குமாரபாளையத்தின் "கொடை வள்ளல்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஜே.கே.கே.நடராஜா அவர்கள். அவர் உருவாக்கிய கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் இன்றளவும் குமாரபாளையம் பகுதி மக்களுக்கு பயனளித்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இவரது பிறந்தநாளை நிறுவனர் நாளாக ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு நிறுவனர் நாள் விழா குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்வி நிறுவனத்தின் தாளாளர் என்.செந்தாமரை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் எஸ்.ஓம்சரவணா அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ஓம்சரவணா அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்விழாவினையொட்டி இணையம் வாயிலாக நடைபெற்ற கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் செந்தாமரை அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். முன்னதாக, ஜே.கே.கே.நடராஜா பார்மசி கல்லூரி முதல்வர் டாக்டர் சம்பத்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவில், ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் டாக்டர்.தமிழரசு நன்றி கூறினார்.


தொடர்ந்து நவம்பர் 13 ஆம் தேதி, ஜே.கே.கே.நடராஜா அவர்களின் பொது வாழ்க்கை பயணம், தொழில் சிறப்புகள், தலைவர்களுடன் சந்திப்பு குறித்த காலச்சுவடு என்ற


தலைப்பில் அறிய புகைப்பட கண்காட்சி ஜே.கே.கே.நடராஜா இல்லத்தில் நடைபெற்றது. இதனை என். செந்தாமரை அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியினை பின்பற்றி பார்வையிட்டனர்.

மேலும், ஜே.கே.கே.நடராஜா பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா காலத்தின் அத்தியாவசிய சேவையாக குமாரபாளையம் நடராஜா நினைவு இயக்கம், திருச்செங்கோடு அரசு இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய இரத்த தான முகாம் குமாரபாளையத்தில் ஜே.கே.கே.ரங்கம்மாள் துவக்கப்பள்ளியிலும், பள்ளிபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா இலவச சேவை மையத்திலும் நடைபெற்றது. இந்த இரத்த தான முகாமில் 115 பேர் சமூக இடைவெளியுடன் இரத்ததானம் செய்தனர்.

Updated On: 28 Nov 2020 8:06 PM GMT

Related News