/* */

கரு கரு கூந்தல் வளர வீட்டிலேயே இயற்கை முறையில் கண்டிஷ்னர் தயாரிக்கலாம் வாங்க

சீயக்காய், எண்ணெய் பிசுக்கை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது.

HIGHLIGHTS

கரு கரு கூந்தல் வளர வீட்டிலேயே இயற்கை முறையில் கண்டிஷ்னர் தயாரிக்கலாம் வாங்க
X
பைல் படம்.

தலை முடியைப் பராமரிப்பதற்கு காலங்காலமாக பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்று சீயக்காய். இன்று நம்மைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் சுற்றுச் சூழல் மாசு, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவை முடி உதிர்தல் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றன. இதைத் தடுப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும், இயற்கையான மற்றும் எளிமையான முறையே சீயக்காய்த்தூள் பயன்பாடு ஆகும். அசாசியா கோன்சின்னா மரத்தில் இருந்து பெறப்படும் சீயக்காய், வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது. தீமை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லாதது.

சீயக்காய் பயன்படுத்துவதால் தலைப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இன்றைய சூழல் சீர்கேடுகளால் முடியில் ஏற்படும் அமில, கார சமநிலை மாற்றம் சீராகும். பொடுகு நீங்கும். சொறி, சிரங்கு, படை, கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும். முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை சீயக்காய்த்தூள் பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கலாம். தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வது, இளநரை, அரிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்.

செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, காய்ந்த நெல்லி, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்தப் பொடியை உபயோகப்படுத்தி குளித்தால் கூந்தல் பொலிவுடன் இருக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். சீயக்காய், எண்ணெய்ப் பிசுக்கை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. அதே நேரம் தேவையான எண்ணெய்ப் பசையை இருத்தி இயற்கையான ஒரு கண்டிஷனராகவும் இது செயல்படும். சீயக்காய் பயன்படுத்திய பின்பு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது. சீயக்காயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் லைட்டமின் சி மற்றும் டி, சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

Updated On: 29 July 2022 3:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்