/* */

தயிரும் யோகர்ட்டும் ஒண்ணா..? தெரிஞ்சுக்கோங்க..!

Yogurt Means Tamil-இப்போதெல்லாம் நகரங்களில் 'தயிர்' என்ற வார்த்தையைவிட 'யோகர்ட்' என்ற வார்த்தைதான் பிரபலம்.

HIGHLIGHTS

Yogurt Means Tamil
X

Yogurt Means Tamil

Yogurt Means Tamil

வடிவேல் பாணியில் நகரத்தில் ஒரு குழந்தையிடம், என்னம்மா சாப்பிடற..? என்று கேட்டால், உடனே, அங்கிள் நான் யோகர்ட் சாப்பிடறேன்' என்பார்கள். அந்த அளவுக்கு யோகர்ட் பிரபலம்.

யோகர்ட் என்பது தற்காலத்தில் மக்களிடையே பரவலாக பேசப்படும் உணவாக இருக்கிறது. ஆனால், பலரும் தயிர்தான் யோகர்ட் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது தவறு. யோகர்ட்டுக்கும் தயிருக்கு வேறுபாடுகள் உள்ளன. அதை இங்கு நாம் காணலாம்.

யோகர்ட், தயிர் என இரண்டும் தயாரிக்கும் முறையிலேயே வேறுபடுகிறது. ஆனால், இது தெரியாமல் நம் மக்கள் மேலை நாடுகளில் தயிரைத் தான் யோகர்ட் என்று கூறுவதாக நினைக்கின்றனர். பாலின் கெட்டித் தன்மை, பாக்டீரியாக்களின் நொதித்தல் இவற்றை பொருத்து இரண்டும் வேறுபடுகின்றன. தயாரிக்கும் முறையில் மட்டுமல்ல இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள், பயன்பாடுகளிலும் இவை இரண்டும் வேறுபடுகின்றன. எவ்வாறான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன என்று பார்ப்போம்.

தயாரிப்பு முறை

தற்காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் யோகர்ட் தான் பயன்படுத்த வேண்டு என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதிலும் கிரேக்க யோகர்ட் தசைகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.

தயிரும் யோகர்ட்டும் வேறு வேறு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.

  • தயிர் தயாரிப்பில் பாலை நன்றாக காய்ச்சி அதை இயற்கையாகவே புளிக்க வைப்பார்கள். அதற்கு சிறிது புளியை போடுவார்கள். அது முதல்முறை மட்டுமே. அதற்கடுத்த முறை, ஏற்கனவே உள்ள தயிரையே பாலில் கலந்தால் தயிராகிவிடும்.
  • வணிக முறையில் தயிர் செய்வதற்கு காய்ச்சிய பாலில் வினிகர் அல்லது லெமன் ஜூஸ் கலந்து திரள வைத்து தயாரிக்கின்றனர். இது தயிர் தயாரிப்பு முறை.

ஆனால், இதுவே யோகர்ட் தயாரிப்பில் லாக்டோ பேசில்லஸ் பல்கரிகஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ் தெர்மோபில்ஸ் போன்ற பாக்டீரியாக்களை கொண்டு பாலை நொதிக்க வைத்து யோகார்ட்டை தயாரிக்கின்றனர்.

​ஊட்டச்சத்து வேறுபாடுகள்

யோகர்ட்டில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி12 உள்ளது.

தயிரில் கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், விட்டமின் பி6 போன்றவைகள் உள்ளன. ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள தயிரில் 3 முதல் 4 கிராம் புரோட்டீன் மட்டுமே உள்ளது. இதுவே கிரேக்க யோகார்ட் என்றால் இரண்டு மடங்காக 8 முதல் 10 கிராம் வரை புரதம் காணப்படுகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்

சுவை வேறுபாடுகள்

யோகர்ட் பல்வேறு ப்ளேவரிங்-ல் கிடைக்கிறது. மாங்கோ, ஸ்ட்ரா பெர்ரி, வெண்ணிலா, ப்ளூ பெர்ரி போன்ற சுவையில் கிடைக்கின்றன. தயிருக்கு என்று தனி டேஸ்ட் உண்டு. அந்த சுவையில் மட்டுமே தயிர் கிடைக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கிரேக்க யோகர்ட் சிறந்தது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். காரணம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகள் சோர்வு அடையும். சில வேளைகளில் தசைகளில் காயங்கள் கூட ஏற்படலாம். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு களைப்பை போக்கும் சக்தி யோகர்ட்டிற்கு உண்டு என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே, உடற்பயிற்சி செய்பவர்கள் யோகர்ட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

பயன்கள்

தயிர் நமது மூளை செயல்பாட்டுக்கும், சீரண சக்திக்கும் உதவுகிறது. நமது நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்துவது டி செல்கள் தான். யோகர்ட்டை சாப்பிடுவதால் டி செல்களின் செயல்பாடு மேம்பட்டு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மேலும், யோகர்ட்டை தினசரி உணவில் சேர்க்கும் போது உடற்பயிற்சி செய்பவரின் தசைகளில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் பால் அழற்சி இருப்பவர்கள் கூட இதை சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் யோகர்ட்டில் லாக்டிக் அமிலம் தான் உள்ளது. பாலில் உள்ளது போன்று லாக்டோஸ் இல்லை.

வீட்டிலேயே யோகார்ட் தயாரிப்பது எப்படி?

கடைகளில் டப்பாக்களில் கிடைக்கும் யோகர்ட்டை விட வீட்டிலேயே சுத்தமான யோகர்ட் தயாரிக்கலாம். எப்படியென்று பாருங்கள்.

பாலை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு அதை ஒரு கண்ணாடி ஜாரில் அதை ஊற்றிக் கொள்ளுங்கள்.

100-105 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சிய பாலை ஆற விடுங்கள்.

இப்பொழுது பாலின் மேல் ஆடை விழுந்து இருக்கும். அதை சிதைக்காமல் அதனுடன் ஏற்கனவே கடையில் வாங்கி வைத்திருக்கும் யோகர்ட்டில் சிறுதளவு எடுத்து சேருங்கள்.

இப்பொழுது இந்த கண்ணாடி ஜாரை வெதுவெதுப்பான நீருக்குள் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைத்திருக்கவேண்டும். நீண்ட நேரம் உறைய வைக்கும் போது, சூப்பரான கெட்டி யோகர்ட் புளிப்புச் சுவையுடன் கிடைக்கும். எடுக்கும்போது யோகர்ட் மேலே சேர்ந்திருக்கும் தண்ணீரை வடித்துவிட்டால் யோகர்ட் ரெடி. பின்னர் பிரிட்ஜ்ஜில் 4 மணி நேரம் வைத்து 4-5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். குறிப்பு : அடுத்த தடவை செய்வதற்கு சிறுதளவு இந்த யோகர்ட்டை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

தயிர் தரும் நன்மைகள்

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் நம் உடலுக்கு ஆரோக்யம் தரும் உணவு. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவதும் தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணமங்கிவிடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

வயிறு சரியில்லாத போது கூட வெறும் தயிர் சாப்பிடலாம். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயத்துடன் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

Yogurt Means Tamil

பிரியாணி போன்ற உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும் பொழுது வயிற்றுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் தயிர் சாப்பிடுகிறோம். மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமானதாக இருக்கும். உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிர் டிப்ஸ்

வெண்ணெயைக் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து குளித்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க சிறிய தேங்காய் துண்டுகளை சேர்த்தால் புளிக்காது. வெண்டைக்காய் சமைக்கும்போது பொழுது ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 18 March 2024 9:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...