/* */

womens day quotes in tamil-பெண்ணாக பிறத்தல் அரிது..! பெருமைகொள் பெண்ணே..!

womens day quotes in tamil-பெண் என்பவள் தாய்மையின் அடையாளம். அன்பின் சுரங்கம். ஆளுமையின் அடையாளம். எதையும் தாங்கும் இதயம் படைத்தவள்.

HIGHLIGHTS

womens day quotes in tamil-பெண்ணாக பிறத்தல் அரிது..! பெருமைகொள் பெண்ணே..!
X

womens day quotes in tamil-மகளிர் தின மேற்கோள்கள்.(கோப்பு படம்)

womens day quotes in tamil-இந்த உலகில் பெண்ணானவள் தாய், தோழி, மகள், மனைவி என அனைத்து உன்னதமான பல்வேறு பரிமாணங்களில் உறவுகளாய் மிளிர்கிறாள். மனைவியாக நம் வாழ்நாள் முழுதும் நம் கை பிடித்து வருகிறாள். அந்த உயர்வான பெண்களைப் போற்றும் விதமாக மார்ச் 8ம் தேதி இந்த சர்வதேச உலக மகளிர் தினத்தை கொண்டாடுகிறோம்.


பெண் இல்லையெனில் எந்த உயிரினங்களும் இல்லை. பெண் படைப்பின் விசித்திரம். இந்த உலக இயக்கம் பெண்களால்தான் தொடர்கிறது. அந்த பெண்களைப் போற்றும் மேற்கோள்களை பார்ப்போம் வாருங்கள்.

சூரியன் இன்றி பூமி சுழலாது என்பது எப்படி உண்மையோ..பெண்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது என்பதும் உண்மை.

வாழ்க்கை ஒரு வானவில் என்றால் அதில் நீ ஒரு வர்ணம்..! வாழ்க்கை ஒரு இருளென்றால் இருந்தால் அதில் நீ வெளிச்சம்..! இனிய பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

இதில் குறைந்து போனார்கள் பெண்கள்..? ஆண்களுக்கு நிகராக வரலாறு படைக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

womens day quotes in tamil

இன்றைய மகளிர் தின நாளில் பெண்ணடிமை ஒழியட்டும். பெண்களின் முன்னுரிமை எவ்வளவு அவசியம் என்பதை இந்த உலகம் உணரட்டும்.

நீங்கள் இல்லையெனில் இங்கு எவரும் இல்லை..உலக பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்..! பெண்ணாகப் பிறந்தோம் என்று பெருமை கொள்ளுங்கள்..!

உலகத்தை உருவாக்கிய பெண்களே..! உதிரத்தை உயிராக்கிய பெண்களே..! அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

உங்கள் சாதனைகளுக்கு உயரங்கள் இல்லை..வானும், மழையும் உங்களின் எல்லைகள் அல்ல..! ஒப்பற்ற துயரங்களுக்கு உரியவர்கள் நீங்கள்..! உங்களைப் போற்றவே உலக மகளிர் தினம். வாழ்த்துகள்..!womens day quotes in tamil

அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை..! ஆண்களுக்கான வாழ்க்கையின் நிழல்..! உங்கள் உயர்வைப்பாட வார்த்தைகள் இல்லை..! இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

இந்த உலகினை அன்பால் கட்டிப்போடும் உங்களுக்கு மட்டுமேயான தனிக்குணம்..! இந்த உலகை அறிவால் கட்டி ஆளும் வல்லமையும் உண்டென்று நிரூபணம் செய்துவிட்டீர்கள்..! இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

ஒரு பெண் அன்பில் தாயாவாள்..! அழகில் தேவதையானவள்..! அறிவில் அவள் ஒரு மந்திரி.

உடலால் நீங்கள் மென்மையான ரோஜா..! மலராக இருப்பதால் நீங்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல..எதையும் தாங்கும் இரும்பு இதயமும் கொண்டவர்கள்..!


womens day quotes in tamil

அழகில் நீங்கள் அல்லி மலர்கள் தான்..! ஆனால் அறிவால் நீங்களோ ஆர்ப்பரிக்கும் அலைகள்..!

பெண்ணே..! சுமைகளை தருவதும் நீயே..! சுமைகளை சுமப்பதும் நீயே..! உயிர்களை பெற்றுத் தருவதும் புதிய உறவுகளை தருவதும் நீயே..!

எந்த ஒரு ஆணின் முதல் தேடல் பெண் தான் ஒரு ஆணின் இறுதி தேடலும் பெண்தான்.

உலகை நகர்த்தும் இயற்கைக் கடிகாரங்கள் பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

womens day quotes in tamil

நீ நிஜம் ஆனவள்..! நீ நிரந்தரமானவள்..! உன் உதிரத்தில் பூத்த உயிர்களே..இவ்வுலகத்தில் வாழும் மனிதர்கள்.

பெண்ணே..கண் மூடிய கனவுகளை தகர்த்தெறி..! இலட்சிய கனவுகளை எட்டிப்பிடி..! சாதனையால் மட்டுமே நீ உயர்த்தப்படுவாய்..!

உன் அறிவு சாளரத்தை மெல்ல திறந்துவிடு..அதன்வழியே உந்தன் சிறகை விரித்துப் பற..! திக்கெட்டும் பார்.. பரந்து விரிந்த உலகைப் பார்..உன் சாதனைத் தடங்கள் எங்கும் வியாபித்து இருப்பதை பார்..! இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

சுதந்திரத்தின் வேர்கள் உனக்காய் முளைக்கட்டும்..! சுயமாக நிற்க உன் கால்கள் கற்கட்டும்...! வீட்டுக்குள் உன்னை பூட்டிய காலங்கள் சாகட்டும்..! இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!


womens day quotes in tamil

பெண்ணாய் பிறந்து விட்டோம் என்று பெருமைகொள்..! உலகை உருவாக்குவது நீயே..! பிறத்தலில் பெண்ணாக பிறத்தல் அரிது..!

உலக நந்தவனத்தில் அழகான பட்டுப்பூச்சிகள் பெண்கள்..!

கட்டுப்பாடோடு வாழத் தெரிந்தவர்கள் பெண்கள். அக்கறை,பாதுகாப்பு என்று அவர்களின் முயற்சிக்கும்

சிந்தனைகளுக்கும் தடை போட்டு பெண்களை ஊனமாக்கிவிடாதீர்கள். அவர்கள் பூமியின் சூரியன்..! இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள்.

சமையலறைக்குள் பூட்டி வைத்து வீட்டுக்கு மட்டுமே பெண் சொந்தம் என்ற எண்ணத்தை உடைத்து எறியுங்கள்..! அவள் ஒரு நாட்டையே ஆட்சி செய்யும் சகாப்தம் படைத்தவள்..! இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள்..!

மலரின் மறுபிறப்பாய் அவதரித்தவள் பெண்..! மணப்பெண்ணாக அடிவைக்கும் போது புகுந்த வீட்டின் மனமறிந்து, கட்டியவன் மனம் கோணாது வீட்டை கட்டியெழுப்பும் பொறுப்புமிக்கவள்..! கணவர்களே அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடுங்கள்..!

womens day quotes in தமிழ்

'அன்பு' எனும் இந்த அழகான சொல்லுக்கு முதல் அர்த்தம் அம்மா..! எப்போதும் சீண்டி, தோல்விகளில் தூண்டி தன்னை நமது முதல் குழந்தையாகவே காட்டிக் கொள்வாள் தங்கை..! நம்மில் பாதியாய் நம் கரம் பற்றி நம்மை முழுமையாக்குபவள் மனைவி..! நம் வாழ்வின் அடையாளமாய், அங்கீகாரமாய், வசந்தம் தரும் தேவதையாய் மகள்..! உண்மையில் ஆண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..! இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

பெண்கள் இல்லாத உலகம் என்பது நிச்சயம் சாத்தியப்படாது. பெண்கள் இல்லாத வாழ்க்கை, நிச்சயம் வாழ்க்கையாயிருக்காது..! அறிவோம்..தெளிவோம்..பெண்ணை போற்றுதல் செய்வோம்..! இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

பிரச்னைகள் உனைக் கண்டு அஞ்ச வேண்டும்..! கவலைகளில் துவண்டு முடங்கிவிடாதே..! சந்தோச சாம்ராஜ்ஜியமே நீதான்..! வாழ்வது ஒரு முறை தானே..!பெண்ணே, அகிலம் உன்னால் வாழட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

Updated On: 7 Dec 2022 7:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு