/* */

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்: ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி?

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்: ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி?
X

பெண்கள் 40 வயதிற்கு மேல் ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது தமிழ் பழமொழி. ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருப்பது பெண்கள் தான். அதாவது பெண்ணின் உடல் நலம் தான் சீராக இருந்தால்தான் அவள் ஒரு தாயாக, மனைவியாக இருந்து கணவனையும் குழந்தைகளையும் நன்றாக பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட பெண் தனது உடல் நலத்தை நன்றாக வைத்திருந்தால்தான் இந்த பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பெண்கள் எவ்வாறு தங்களது உடலை பராமரிக்க வேண்டும் என்பது பற்றி இந்த தொடரில் காணலாம்.


குடும்பத்தின் ஆணி வேராக இருக்கும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் நிலை என்னவென்று தெரியாமல் அன்றாடம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கின்றனர். எனவே 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடத்தில் ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த ஆண்டிலிருந்து தொடங்கி இனி ஒவ்வொரு வருடமும் இதை கடைப்பிடித்து வரலாம்.

40 வயதுக்கு பிறகு பெண்களுக்கு இரத்த சோகை, கால்சியம் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். அதனால் தினசரி உணவில் கீரை வகைகள், முழு தானியங்கள், சிறு தானியங்கள், பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் .பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையை பராமரிப்பது முக்கியமானது.


திருமணமான பெண்கள் பலரும் உடல் எடை பராமரிப்பு குறித்த தீர்மானத்தை ஏதாவது ஒரு நேரத்தில் எடுப்பதும் அதை தொடர்ந்து கடைபிடிக்காமல் கைவிடுவதும் அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. வீட்டிலிருந்து தனியாக பயிற்சிகள் செய்வதைவிட ஜிம், யோகா மையங்கள் போன்றவற்றிற்கு சென்று குழுவாக செயல்படலாம் இதனால் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி கொண்டு பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது அனைத்து வயது பெண்களும் ஸ்மார்ட் போன் வைத்து வருகின்றனர். கல்வி, வேலை, தொழில் போன்ற காரணங்களால் கணினி பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதனால் கண்கள் பாதிக்கப்படக்கூடும். எனவே அனைத்து பெண்களும் ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இல்லத்தரசிகள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மன அழுத்தம். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர்கள் மேற்கொண்டு ஆய்வுகளின் படி பெண்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அன்றாடம் எழுதும் பழக்கம் கொண்டவர்களால் தங்களது உணர்வின் வேகத்தை சீரான நிலையில் பராமரிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது .

அதாவது உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தும் பழக்கம் பிரச்சினைகளுக்குரிய தீர்வை புதிய தலங்களில் தேடும் முயற்சியாக கருதப்படுகிறது. அதனால் ஒருவரது செயல் திறன் அதிகரிக்கும். அவ்வாறு எழுதுவதன் மூலம் ஏற்படும் மாற்றத்தால் மூளையின் செயல்பாடு, செல்களின் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை அதிகரித்து மன அழுத்தம் குறையும். எனவே டைரியில் தினமும் மனதில் தோன்றிய கருத்துக்களை எழுதும் தீர்மானத்தை பெண்கள் இப்போது முதல் தொடங்கலாம்.

Updated On: 19 March 2023 3:32 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்