/* */

கழிவறையில் எது சிறந்தது? இது 'கக்கா' சமாச்சாரம்..! மனிஷனுக்கு இதுவும் அவசியம்ங்க..!

எது சிறந்த கழிப்பறை? என்னங்க நீங்க இதுக்கெல்லாம் நாம பட்டிமன்றமா வைக்கமுடியும்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இருப்பினும் எது சிறப்பானது என்று அறிந்துகொள்ளலாமே.

HIGHLIGHTS

கழிவறையில் எது சிறந்தது? இது கக்கா சமாச்சாரம்..! மனிஷனுக்கு இதுவும் அவசியம்ங்க..!
X

கழிப்பறைகள் (கோப்பு படம்)

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் கிண்ணங்களுடன்(Bowl) கூடிய ஃப்ளஷ் டாய்லெட்டுகள் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

கிண்ணம்(Bowl) ஒரு கூம்பு வடிவத்தைக் கொண்டுள்ளது. இது சிறுநீர் மற்றும் மலம் சிஃபோன் குழாயை நோக்கி கீழே விழ அல்லது வழுக்கிச் செல்ல அனுமதிக்கிறது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பிற நாடுகளில் நாம் காணும் அடிப்படைக் கழிப்பறைக் கிண்ணம் (Bowl ) இப்படித்தான் இருக்கும்.

மேற்கத்திய கழிப்பறை

ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் நெதர்லாந்தில் சாதாரணமாக காணப்படும் கழிப்பறை கிண்ணத்தைத் தவிர(Bowl) வேறொரு வடிவமைப்பும் உள்ளது. இந்த வடிவமைப்பு "பிளாட் பாட்டம் டாய்லெட்" என்று அழைக்கப்படுகிறது. அதாவது அடிப்பக்கம் தட்டையாக இருக்கும் டாய்லெட்.

கூம்பு வடிவத்திற்குப் பதிலாக, சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றைப் பெறும் கிண்ணத்தின் பகுதி தட்டையானதாகவும் மற்றும் சைஃபோன் துளையை விட உயரமாகவும் வடிமைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை வடிவமைப்பு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் முழுமையாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது பரிணாம வளர்ச்சியின் போது, கழிப்பறை வடிவமைப்பாளர்கள் புதிய சிந்தனையுடன் ஒரு புதிய வடிவமைப்பை உருவாக்க முயற்சித்தனர்.

மலக்கழிவு எவ்வளவு விரைவாக தண்ணீரில் மூலக்கடிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விரைவாக விரும்பத்தகாத வாசனையும் கட்டுப்படுத்தப்படும். இது உன்னதமான மேற்கத்திய அணுகுமுறை.

ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த சில வடிவமைப்பாளர்கள், இந்த உன்னதமான வடிவமைப்பு குறைபாடுடையது என்று நினைத்தனர். சைஃபோன் துளை மிகவும் தாழ்வாகவும் செங்குத்தாகவும் இருப்பதால், ஒவ்வொரு முறையும் மலம் கழிக்கும்போது அடிப்பகுதியில் தண்ணீர் தெறிக்கும் அபாயம் அதிகம். அப்படி கழிவறையின் தண்ணீர் தெறிப்பது ஜெர்மனி மக்களுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்துவதுடன் அசுத்த சூழலை ஏற்படுத்துவதாவும் உணர்ந்தனர். எனவே, ஜெர்மனி வடிவமைத்துள்ள இந்த பிளாட் பாட்டம் டிசைன், தெறிக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.

பிளாட் பாட்டம் டிசைனும் குறைபாடுடையது என்று ஒருவர் நிச்சயமாக வாதிடலாம். ஏனென்றால் அது உங்கள் மலம் முழுவதையும் வெளியே தெரியவைக்கும். அதை பார்க்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யமாக, ஜெர்மனியர்களுக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை.

ஜெர்மானிய கழிப்பறை

அதை ஜெர்மானியர்கள் நேர்மறை சிந்தனையாக எடுத்துக்கொண்டு தங்கள் மலத்தில் புழுக்கள் அல்லது வேறு குடல் பிரச்னைகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஆரோக்யமான நிலையை உருவாக்குகிறது. அதாவது தினசரி தங்கள் மலத்தைப் பார்த்து எல்லா ஆரோக்ய நிலையும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள உதவுகிறது என்று எண்ணுகிறார்கள்.

எனக்கு தவறென்று படுவது இன்னொருவருக்கு சரியாக இருக்கலாம். எனக்கு சரி என்று படுவது பிறருக்கு தவறாகாது தோன்றலாம். அதனால், இதை மல விஷயத்தில் யார் தீர்ப்புக்கூற முடியும்?

நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கும் போது, தவிர்க்க முடியாமல் கழிப்பறை இருக்கைப் பகுதியில் சிறுநீர் தெறிக்கும் நிலை ஏற்படலாம். அடேங்கப்பா ஆண்களுக்கு தட்டையான அடிப்பகுதி பயங்கரமானதுப்பா என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் ஜெர்மனி ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க முனைகிறார்கள் என்பது இதில் அவர்களுக்கான ஒரு நல்ல விஷயம்.

இரண்டு வெவ்வேறு பள்ளிகளின் வெவ்வேறு சிந்தனைகள், வெவ்வேறு கலாசார அணுகுமுறையில் அவ்வளவுதான்.

தெறிக்கும் அபாயம் விரும்பத்தகாத வாசனை போன்றவைகளை நாம் ஏதோ ஒரு வகையில் ஒப்புமைப்படுத்துவது சிறப்பாகத்தானே இருக்கமுடியும்? மலம் குழாயின் கீழே வீசப்படுவதற்கு முன்பு ஒரு தட்டையான மேற்பரப்பில் தங்கிச் செல்வது உண்மையில் பயனுள்ளதாக இருக்குமா என்றும் நாம் யோசிக்கவேண்டும்.

மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்கள் அமெரிக்க கழிவறைகளில் உள்ள ஒரு விசித்திரமான விஷயத்தை நிச்சயமாக கவனித்திருப்பார்கள்: கிண்ணத்தில் உள்ள நீரின் அளவு.உலகெங்கிலும் உள்ள மற்ற கழிப்பறைகளை விட சராசரி அமெரிக்கக் கழிப்பறையில் அதிக தண்ணீர் உள்ளது.

சராசரி அமெரிக்க டாய்லெட் கிண்ணம் பாதி அளவு தண்ணீரால் நிரப்பப்படும்

அமெரிக்க வழியிலான கழிப்பறையின் வெளிப்படையான அசௌகரியங்கள்:

தண்ணீர் நிரம்பி இருப்பதால் தெறித்தல், சத்தமாக சிறுநீர் கழித்தல், விரைகள் அல்லது ஆண்குறி கழிவறைத் தண்ணீரில் நனைதல், டிஸ்ஸு பேப்பர் மூலமாக துடைக்கும் போது கிண்ணத் தண்ணீரில் கை படும் வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்க முறை கழிப்பறையில் நன்மைகளும் உள்ளன :

ஒரு கிண்ணத்தில் பாதியில் நிரப்பப்பட்டால், மலம் எப்போதும் மூழ்கியிருக்கும், இதனால் மிகவும் குறைவான துர்நாற்றம் மட்டுமே வீசும். மேலும் பெரும்பாலும், நீருக்கடியில் கிண்ணத்தில் மலம் ஒட்டாமல், இருப்பதால் சுத்தம் செய்யும் அவசியம் குறைவு.

இப்படி உலகம் முழுவதும் வெவ்வேறு வகை டாய்லெட்டுகள் இருந்தாலும் இந்திய டாய்லெட் பல நன்மைகளைத் தரக்கூடியது.

இந்திய டாய்லெட்டில் உட்கார்ந்து மலம் கழிக்கும்போது வயிற்றில் உள்ள உணவை அழுத்தி, அழுத்தி, உறிஞ்சுவதன் மூலம் செரிமானம் மேம்படுத்தப்படுகிறது. குந்துதல் செரிமானத்திற்கு உதவுகிறது. மேற்கத்தியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கழிவறையில் உட்கார்ந்துகொள்வது நம் வயிற்றில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் திருப்திகரமான அல்லது முழுமையாக மலம் வெளியேறுவதைத் தடுக்கிறது.

ஆனால், இந்திய கழிப்பறையில் உட்காரும் அமைப்பு ஒரு யோக ஆசனம் போன்றது. அது வயிற்றுப்பகுதியில் அழுத்தம் கொடுத்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இதன்மூலம் தேவையான ஆக்சிஜனேற்றம் கிடைத்து செரிமான மண்டலம் சீராகிறது.

இந்திய கழிப்பறை

இந்திய கழிவறையின் நன்மைகள் :

1. அதிக சுகாதாரம்:

மேற்கத்திய கழிவறையை விட இந்தியக் கழிவறை மிகவும் சுத்தமாகவும் கிருமிகளற்றதாகவும் இருக்கிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. உடல் கழிப்பறை இருக்கையைத் தொடாது. எனவே அது சுகாதாரமாக இருக்கும். மேலும் UTI அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.

2. நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது:

குந்துதல் நிலை உங்கள் இடுப்பு, முட்டிக்காலின் பின் பகுதி மற்றும் கணுக்கால் போன்றவற்றின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.

'3. செரிமானத்திற்கு நல்லது:

ஒரு குந்து நிலையில் உட்கார்வதன் மூலமாக செரிமான செயல்முறை மேம்படுகிறது. இந்திய கழிப்பறை குடல் இயக்கத்தின் மீது அழுத்தத்தை செலுத்துகிறது. இதனால் மலம் முழுவதுமாக வெளியேறும். மேற்கத்திய கழிப்பறையில் வயிற்றில் அழுத்தம் இல்லாததால், வயிறு முழுவதும் சுத்தம் ஆகாது.

4. காகிதத்தை சேமிக்கிறது:

ஒரு மேற்கத்திய கழிப்பறை, இந்திய கழிப்பறைகளில் இல்லாத காகிதத்தை வீணாக்குகிறது. எனவே, இந்திய கழிவறை சுற்றுச்சூழல் நட்புக்கு இணக்கமானது.

5. தண்ணீரை சேமிக்கிறது:

இந்திய கழிப்பறைகளை விட வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு அதிக தண்ணீர் தேவை. இந்திய கழிப்பறையை குறைவான தண்ணீரில் எளிதாக சுத்தம் செய்யலாம்.

6. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது:

இந்திய கழிப்பறையில் குந்து நிலை, உடலில் இருந்து மலத்தை முழுமையாக நீக்குகிறது. இது பெருங்குடலை சுத்தம் செய்கிறது. அதனால், இந்தியக் கழிவறையைப் பயன்படுத்தும்போது, வயிற்றுத் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

குந்தல் நிலை

7. பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கிறது:

இந்திய கழிப்பறைகள் உடலில் உள்ள கழிவுகளை முழுவதுமாக வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது குடல் அழற்சி, மலச்சிக்கல், அழற்சி குடல் நோய் மற்றும் பல்வேறு வயிற்றுப் பிரச்னைகளின் வாய்ப்புகளையும் குறைக்கிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் தடுக்கிறது.

8. கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்தது:

கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்திய கழிப்பறைகள் சிறந்தது. ஏனெனில் இது கருப்பையில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. இது கர்ப்பிணிப் பெண்களை இயற்கையான பிரசவத்திற்கு தயார்படுத்துகிறது.

9. உடற்பயிற்சிகான நல்ல வடிவம்:

குந்துதல் என்பது உடற்பயிற்சியின் சிறந்த வடிவங்களில் ஒன்றாகும். எனவே, இந்திய கழிப்பறையில் குந்தும் நிலையில் இருந்து விடும் மூச்சு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கால் தசைகளிலும் வேலை செய்கிறது.

10. குழந்தைகள் பயன்பாட்டுக்கு இலகுவானது :

இந்தியக் கழிப்பறையை எந்த ஆதரவும் அல்லது யாரின் துணையும் இல்லாமல் ஒரு குழந்தை எளிதாகப் பயன்படுத்த முடியும். ஏனெனில் அது தரையின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ளது.

Updated On: 4 July 2023 6:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!