/* */

இந்த சின்ன விஷயம் கூட நமக்கு தெரியலையே... - ‘இப்படி’ அமர்வதால், இவ்வளவு நன்மைகளா?

வழக்கமாக, நம்மில் பலரும் காலை தொங்க விட்டுதான் அமர்கிறோம். ஆனால், காலை சம்மணமிட்டு அமர்வதால், நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

HIGHLIGHTS

இந்த சின்ன விஷயம் கூட நமக்கு தெரியலையே...  - ‘இப்படி’ அமர்வதால், இவ்வளவு நன்மைகளா?
X

எப்போதும் சம்மணமிட்டு அமருங்கள் (கோப்பு படம்)

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். பைக்கில் பயணிக்கும் பொழுது, பஸ்சில், ரயிலில், வாகனங்களில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரம் காலைத் தொங்க வைத்துக்கொண்டே அமர்ந்து இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.


இதற்குக் காரணம், காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே ரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.


மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடக்கிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதால், ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.


இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கின்றனர்.

ஒருவரால், சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். எனவே, யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால், டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...


சாப்பிடும் முறை

(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்கள்.

(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.

(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.

(4) சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.

(5) அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

(6) பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்.

(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

(8) ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...


(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.

(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்..

(12) சாப்பிட வேண்டிய நேரம். காலை - 7 மணி முதல் 9 மணிக்குள் மதியம் - 1 மணி முதல் 3 மணிக்குள் இரவு - 7 மணி முதல் 9 மணிக்குள்

(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.

(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

Updated On: 19 March 2023 1:22 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு