/* */

சரஸ்வதி கீரை தெரியுமா..? புதுசா இருக்கில்ல..? தெரிஞ்சுக்கங்க..!

Vallarai Keerai In Tamil-இந்த கீரையை சாப்பிட்டால் சரஸ்வதி நாவில் தங்குவாள். கல்வி ஞானம் பெருகும். அட அப்படி என்ன கீரைங்க இது..? படிங்கோ..!

HIGHLIGHTS

Vallarai Keerai In Tamil
X

Vallarai Keerai In Tamil

Vallarai Keerai In Tamil-'பக்கத்து வீட்டு சரஸ்வதி அக்கா கீரை விக்கிறாங்க. சரஸ்வதி அக்கா விக்கிறதால அது சரஸ்வதி கீரை' அப்படின்னு நினைச்சிடாதீங்க. இது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம்ங்க. யாருகிட்டயும் சொல்லிடாதீங்க..உங்களுக்கு மட்டும் சொல்றேன். அந்த கீரை 'வல்லாரைக் கீரைங்க. (ஹி..ஹி..ஹி- உங்களை ஏமாத்திட்டதால சிரிக்கிறேன் ) இப்போ வல்லாரைக் கீரையைப் பற்றி தெரிஞ்சுக்குவோமா..?


'வல்லமை' என்பது உடல் பலம் மட்டுமல்ல. அறிவும் சேர்ந்ததுதான் வல்லமை. அப்படி அறிவையும் ஞானத்தையும் தருவதுதான் இந்த வல்லாரைக் கீரை.

வல்லமையை உருவாக்கும் சக்திமிக்க கீரை என்பதை அடையாளப்படுத்தவே முன்னோர்கள் ‘வல்லாரைக் கீரை’ என்று இதற்கு பெயர் வைத்துள்ளனர். அது ஞாபகச் சக்தியை அதிகப்படுத்தி மூளையை நன்கு செயல்பட வைக்கிறது. அதனால் கல்வி ஞானம் பெருகும். அவர்கள் நாவில் சரஸ்வதி குடியிருப்பாள் என்பதால் சரஸ்வதிக் கீரை என்றார்கள், இந்த வல்லாரையை. இப்ப புரிஞ்சிடிச்சிங்களா..?

வல்லாரை கீரையானது மனித மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. அந்த அளவுக்கு வல்லாரை உண்டோர் வல்லமைமிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை உருத்திப்படுத்துகிறது, அந்த பழமொழி. வல்லாரைக் கீரையானது நீர்நிலைப்பகுதிகளான குளம், குட்டை, ஏரி, ஆறு, கால்வாய் பகுதிகளில் வளரக்கூடியது. இது பூண்டு வகைத் தாவரமாகும்.


அரை வட்ட வடிவில் வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளுடன் இதய வடிவில் இலைகள் அமைப்பைப் பெற்றிருக்கும். வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துகளை, சரியான அளவில் வல்லாரைக்கொண்டுள்ளது.

வல்லாரையின் மருத்துவப் பயன்கள்

1. வல்லாரை இரத்தத்தை சுத்திகரிக்கிறது. ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

2. வல்லாரை உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும் தன்மைகொண்டது.


3. வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது. உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களுக்கும் இது பயனுள்ளதாகும்.

4. வல்லாரையைக் கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறம் நீங்கும்.

5. வல்லாரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கும் அற்புத தன்மைக்கொண்டது. மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கிறது.

6. அஜீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. மங்களான பார்வை உடையவர்களுக்கு வல்லாரை சிறந்ததாகும்.

7. பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.


8. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.

9. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.

10. வல்லாரை பொதுவாக இதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகிறது.

11. வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.

12. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு உதவுகிறது.


இதை பச்சையாகவும் சாப்பிடலாம். பச்சையாக சாப்பிடுவதற்கு பச்சை சாலட் எப்படி செய்யறதுன்னு சொல்றேன். செய்து சாப்பிட்டுப்பாருங்க.

தேவையான பொருட்கள் :

வல்லாரைக்கீரை ஒரு கட்டு

பச்சை மிளகாய் -2

தக்காளி -2

கறிவேப்பிலை சிறிது

கொத்தமல்லி தழை சிறிது

எலுமிச்சம்பழம் -பாதி

தேவையான அளவு உப்பு

செய்முறை :

வல்லாரையை பொடியாக நறுக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய் மற்றும் தக்காளியையும் பொடியாக நறுக்கி கீரையில் போடுங்கள். பாத்திரத்தில் உள்ள கீரை, பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை கையால் நன்றாக பிசையுங்கள். பிசைவதற்கு முன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது.

நன்றாக மென்மையாக கீரையோடு உப்பு, பச்சைமிளகாய், தக்காளி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு வாசம் வரும். அப்படி பிசைந்து அதே பாத்திரத்தில் வைத்து மூடிவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து அதன்மீது பாதி எலுமிச்சையில் சிறிதளவு சாறை பிழிந்து கரண்டியால் கிளறுங்கள். இதோ வல்லாரை சாலட் தயார்.

சூடாக சோறு போட்டு வல்லாரை சாலட் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சுவையோ..சுவை..! குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் காரம் தெரியாது. காரத்துக்கு ஏற்றவாறு பச்சை மிளகாயை கூட்டி குறைத்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க. உடல் ஆரோக்யம் பெறும்.


பல பயன்பாடுகள் :

வல்லாரையை சட்னி செய்து சாப்பிடலாம். தோசை மாவோடு வல்லாரையை சேர்த்து அரைத்து வல்லாரை தோசை செய்யலாம். வல்லாரை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. வல்லாரைத்தொக்கு செய்யலாம். வல்லாரை சூப்பு வைக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்