/* */

வாசலில் வண்ணங்களால் அழகு கோலமிட்டு, தைப்பொங்கலை வரவேற்போம்..!

traditional pongal kolam 2023- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தினங்களில், வாசலில் வண்ணங்களால் கோலமிட்டு, தை மகளை வரவேற்பது, நமது பாரம்பரியமாக நீடித்து வருகிறது.

HIGHLIGHTS

வாசலில் வண்ணங்களால் அழகு கோலமிட்டு, தைப்பொங்கலை வரவேற்போம்..!
X

traditional pongal kolam 2023- தமிழர் திருநாளில், வாசலில் பாரம்பரிய வண்ண கோலமிட்டு, தைப்பொங்கலை வரவேற்போம்.

traditional pongal kolam 2023, - நம் நாட்டில் திருவிழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பண்டிகையும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இப்படி அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது 'தை பொங்கல் திருநாள்'. இதை பொதுவாக 'அறுவடை திருவிழா' என்று சொல்வார்கள். இந்த மங்களகரமான நாளில் மகர சங்கராந்தி வழிபாடு மற்றும் சூரிய கடவுளையும் வழிபாடு செய்வோம்.

நான்கு நாள் திருவிழாவான இந்த பொங்கல் பண்டிகை ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பு. அதுமட்டுமல்லாமல், வீடுதோறும் வண்ண வண்ண கோலங்களால் ஜொலிக்கும்.


மார்கழி மாதத்தில், சில்லென்ற பனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அதிகாலை நேரத்தில், பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் இடுவார்கள். கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களில் வசிக்கும் பெண்கள் இன்றும், இதை பின்பற்றி வருகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால், நகர்ப்புறங்களில் குறைந்துவிட்ட கோலமிடும் வழக்கம், மார்கழி மாதத்தில் மட்டும் தவறாமல் இருக்கிறது.

மார்கழி மாதத்தில் அனைத்து வீடுகளிலும் பெரிய பெரிய கோலங்கள் வரைகின்றனர். கோலங்களில் நிறைய விதங்கள் உள்ளன. முடிச்சுகள் போடுவதைப் போல வளைத்து வளைத்துப் போடுவதை 'சிக்கு கோலம்' என்கின்றனர். இதில் புள்ளிகள் நேர்க்கோட்டில் இருக்காது. ஆங்காங்கே சில புள்ளிகள் இருக்கும். இவ்வகையான கோலங்களை அனைத்து வீடுகளின் வாசல்களிலும் பார்க்கலாம்.


வீட்டில் ஏதாவது விசேஷம் மற்றும் சுபகாரியங்கள் நடந்தால் 'படிக்கோலம்' இடுவா். இந்தக் கோலத்தில் கோடுகள் மற்றும் வளைவுகள் இருக்கும். இதனை சுற்றி நாம் ரங்கோலி போன்று வடிவமைப்பை தந்து அழகுபடுத்தலாம். குறிப்பிட்ட புள்ளிகள் மட்டுமே வைத்து, அவற்றின் இடுக்குகள் வழியே வடிவமைப்பு கொடுத்துப் போடுவதை 'இடுக்குப் புள்ளி கோலம்' என்று கூறுவர்.

பச்சரிசி மாவை தண்ணீர் கலந்து அரைத்து, அதை துணியில் கட்டி பூஜை அறைக்கு முன்பாக கோலம் இடுவர். இது பிரகாசமாக, வெண்மையாக இருக்கும். இதனை 'இழைக்கோலம்' என்பா். இவற்றைத் தவிர ஓணம் மற்றும் இதர பண்டிகைகளுக்கு வீட்டில் 'பூக்கோலம்' இடுவார்கள். அதற்கு ரங்கோலி வண்ணங்களைத் தீட்டி அழகுபடுத்தலாம்.


கோலம் போடுவதால், பெண்களுக்கு 'சைமேடிக்ஸ்' என்ற சிறப்பு அறிவியல் கூற்றின்படி, ஒரு வடிவத்தை வண்ணங்கள் மூலமாக அலங்கரிக்கும்பொழுது, அதில் இருந்து நேர்மறை சக்தி மற்றும் அமைதி கிடைக்கும். இந்தக் கூற்றை உறுதி செய்வது நமது பாரம்பரிய கோலங்கள்.

கோலம் என்பது கலை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிர்வு முறையின் ஆன்மிக அழகியல் மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக, இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. கோலம் மங்களகரமான வடிவமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் கோலம் இடும்போது, அதைப் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

கோலங்களை எளிதாக வரைந்து விட முடியாது. அந்தந்த வடிவங்களுக்கு ஏற்றவாறு, கைகளை வளைத்து போடும் போது மட்டுமே நமக்குத் தேவையான வடிவம் கிடைக்கும். அளவுகோல் இல்லாமலேயே வளையம் போன்ற வடிவம் போடுவது, கணித கணிப்புகளை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டு வருவது போன்ற முறைகளைப் பயன்படுத்தி கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்வதால் படைப்பாற்றல் அதிகரிக்கும்; மன அமைதி ஏற்படும். மார்கழி மாதத்தில் கோலம் இடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படுகிறது.


'மார்கழி' ஆன்மிக ரீதியாக சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதன் மூலம், நேர்மறை அதிர்வுகள் மற்றும் மன நிம்மதி கிடைக்கும். இந்தக் கால பெண்களிடம் கோலங்களின் மீது ஈடுபாடு குறைந்து வருகிறது. கோலம் இடுவதன் நன்மைகள் பற்றி தெரியாத காரணத்தாலும், நேரமின்மையாலும் பல பெண்கள் இதைச் செய்வது இல்லை. இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது நேரம் விலகி, பத்து நிமிடம் ஒதுக்கி கோலம் வரைவதில் கவனம் செலுத்தினால் தானாகவே ஈடுபாடு அதிகரிக்கும். மன அமைதி உண்டாகும்.

கோலங்கள் வரைந்திருக்கும் ஸ்டிக்கர்களை வாசலில் ஒட்டுவதன் மூலம் எந்தப் பயனும் இல்லை. இதன் மூலம் எறும்பு போன்ற சிறு சிறு உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது. பெண்களின் படைப்பாற்றலும் அதிகரிக்காது. கோலம் இடுவதற்கான இடவசதி இல்லாதவர்களுக்கு, சிறிய இடம் கிடைத்தாலும் அதில் கோலம் இடலாம். இடவசதி இல்லாதவர்கள் தன்னார்வலராக கோவில் வாசலில் கோலம் போடுவார்கள். வீட்டில் சிறிய மரப்பலகை வாங்கி வைத்து, அதன் மேல் கோலம் போடலாம். கோலம் குறித்து மக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவது மிக முக்கியம். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள் மூலமாக பெரியவர்களும் அதில் ஈடுபடுவார்கள்.

பொங்கல் பண்டிகை நாட்களில், வாசல்களில் கோலமிடுவதும் முக்கிய அம்சமாக, தமிழர் பாரம்பரியத்தில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Jan 2023 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்