/* */

சுவையான சர்க்கரை பொங்கல் செய்து, அசத்தலாம் வாங்க!

Sweet Pongal in Tamil-பொங்கல் பண்டிகையின் சிறப்பே பொங்கலிட்டு, பரிமாறி அனைவரும் சாப்பிட்டு மகிழ்வதுதான். சுவையான சர்க்கரை பொங்கல் செய்து, அனைவரையும் அசத்துங்கள்.

HIGHLIGHTS

Sweet Pongal in Tamil
X

Sweet Pongal in Tamil

Sweet Pongal in Tamil-தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை சுவையாக செய்தால், சாப்பிட சாப்பிட, சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.

சர்க்கரை பொங்கலை, சுவையாகவும், ஈஸியாகவும் செய்யலாம். இந்த செய்முறையில் பொங்கல் செய்தால் பொங்கல் பண்டிகையன்று, சுவையான பொங்கல் செய்து, சாப்பிட்டு மகிழலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1/2 கப்

பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - 3/4 கப் (நன்கு பொடியாக தட்டியது)

தண்ணீர் - 4 கப்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை - 12-15

முந்திரி - 8-10

ஏலக்காய் - 2 (தட்டியது)

கிராம்பு - 2 (தட்டியது)

சூடம் - 1 சிட்டிகை (விருப்பம் இருந்தால்)

செய்முறை

முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, முதலில் அதிகப்படியான நெருப்பில் வைத்து ஒரு விசில் விட்டு, பின் தீயை குறைவாக வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும்.

வெல்லமானது நன்கு கரைந்ததும், அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.

பின் குக்கரை திறந்து அதில் வெல்லப் பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து, ஏலக்காய், கிராம்பு மற்றும் சூடத்தை சேர்த்து, பொங்கலை 3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஒரு சிறு வாணலியில் மீதமுள்ள அனைத்து நெய்யையும் ஊற்றி உருகியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான சர்க்கரை பொங்கல் ரெடியாகி விடும்.

சுவையான சர்க்கரை பொங்கலுக்கு இன்னும் சில டிப்ஸ்...

சர்க்கரை பொங்கல் முற்காலத்தில் மண்பானையில் செய்யப்பட்டது, இப்பொழுது பித்தளை, அலுமினியம், சில்வர், போன்ற பானைகளில் செய்து வருகின்றனர். மேலும் பிரஷர் குக்கரில் செய்து வருகின்றனர். இதில் செய்தாலும் சர்க்கரை பொங்கல் சுவை மாறாமல் இருக்க வேண்டும்.

சர்க்கரை பொங்கல் செய்ய, புது பச்சரிசி அல்லது பொங்கல் பச்சரிசி என கடைகளில் கிடைக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இல்லையென்றால் பொன்னி பச்சரிசி பயன்படுத்தலாம்.

பொங்கல் செய்ய தரமான பழுப்பு நிற வெல்லத்தை பயன்படுத்தவும். மேலும் பொங்கல் செய்யும் பொழுது பச்சை கற்பூரம் சேர்ப்பது பொங்கலின் சுவையைக் கூட்டும்.

சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து பொங்கல் செய்தால் சுவையும் மணமும் கூடும். இறுதியாக முந்திரி திராட்சையை வறுத்து சேர்த்த பிறகு கால் கப் அளவு கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சரிசி இல்லாதவர்கள் சாதம் வடிக்கும் அரிசியிலும் இதேபோல சர்க்கரை பொங்கல் செய்யலாம். சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது வெல்லம், தேவைக்கு ஏற்ப கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை பொங்கல் பரிமாறும் பொழுது அதன் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பரிமாறினால் அலாதியான சுவையாக இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 April 2024 10:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!