/* */

சுயநலம் சரியா..? தவறா..? பட்டிமன்றமே வைக்கலாம்..!

Suyanalam Quotes in Tamil-சுயநலம் என்பது தான், தனது குடும்பம் என்று தன்னைச் சார்ந்த சுகங்களை மட்டுமே எண்ணுவது. நான் நலமாக இருக்கவேண்டும் என்பது தவறாகுமா..?

HIGHLIGHTS

Suyanalam Quotes in Tamil
X

Suyanalam Quotes in Tamil

Suyanalam Quotes in Tamil

சுயநலம் இல்லாத வாழ்க்கை இல்லை. முதலில் நாம் நமது ஆரோக்கியத்திற்காக உணவு உண்கிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். காரணம் நமது நலனைக் காப்பற்றிக் கொள்வதற்காக. எனில் அது சுயநலம். அதாவது நம் நலனைப் பேணிக்கொள்வதற்கானது. அதேபோல நமது குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியது நமது கடமை. நமது குடும்பத்தை காப்பாற்றுவது சுயநலம்தான். ஏனெனில் அவர்களைக்காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதுவும் சுயநலம்தான்.

அப்போ சுயநலம் என்பதை சரி என்று சொல்கிறேன் இல்லையா..? உங்களுக்கே இது தவறாகத் தெரிகிறதா..? இருக்காது. பின் சுயநலம் என்பது தவறாக சித்தரிக்கப்படுவது ஏன்..? அதாவது..தனது நலனுக்கு அதிகமாகவே பொருள் இருப்போர் பிறருக்கு உதவாமல் தனக்கு மட்டுமே வைத்துக்கொள்வது, தவறான சுயநலப்போக்கு. சிறந்த செல்வம் என்பது பிறருக்கும் பகிர்ந்து அளிப்பதே.

மக்கள் நலம் பேணுவதற்காக அரசியலுக்கு வரும் சிலரது சுயநலப்போக்கால், உறுதியாக கட்டப்படவேண்டிய பள்ளிக்கூடங்கள்..சரிந்துகொட்டும் மணல் கோட்டைகளாக கட்டப்படுகின்றன. சாலைகள் சாதாரண மழைக்கே ஓட்டைகள் ஆகிவிடுகின்றன. இப்படி அரசின் திட்டங்கள் அத்தனையிலும் காசுபார்க்கும் கூட்டம் உண்டு. அரசு சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உள்ளனர். மக்களது வரிப்பணத்தை ஏமாற்றி கோடி கோடியாக கொள்ளையடித்து சம்பாதிப்பதுதான் சுயநலம். சுயமரியாதையை தொலைத்தவன் மட்டுமே மக்கள் பணத்தை கொள்ளையடிப்பான். இன்னும் நிறைய பேசலாம்..இப்போ சுயநலம் சரியா..தவறா..என்பது கொஞ்சம் புரிஞ்சிருக்கும்..

Suyanalam Quotes in Tamil

  • அன்பு காட்டி பேசினார்கள் பாசத்தோடும் பேசினார்கள். அக்கறையோடும்விசாரித்தார்கள்.நம்பி விட்டது இந்த இதயம், அத்தனையும் உண்மை என்று. நாளடைவில் கண்டுகொண்டது,சுயநலம் தான் அத்தனையும் என்று...
  • சுயநலம் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய சாபமாகும்.
  • உங்கள் முதுகில் குத்துகிற உறவினரைவிட முகத்தில் அறைந்த எதிரி இருப்பது நல்லது.
  • சுயநலம் மனிதனை வாழ்க்கையின் குருடாக வைத்திருக்கிறது.

Suyanalam Quotes in Tamil

  • உனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை இருக்கிறது. நீங்கள் சுயநலமாகவும் இருந்தால் அது உங்களுக்கே திரும்பி வரும்.
  • சுயநலவாதிகள் தங்களுக்கு மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களை பற்றி நினைப்பதில்லை.
  • பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம்தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகி விடுகின்றோம்..

Suyanalam Quotes in Tamil

  • நம் வாழ்க்கை எப்போதும் சுயநலமாகவும் இருந்தால் நீடித்த மகிழ்ச்சி இல்லை.
  • அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியாத போது மட்டுமே. உங்களை அவர்கள் சுயநலவாதிகள் என்று அழைக்கிறார்கள்.
  • ஒரு உறவில் சமாதானம் என்றால் என்ன என்பதை சுயநலவாதிகளால் ஒரு நாளும் புரிந்து கொள்ள முடியாது.

Suyanalam Quotes in Tamil

  • சுயநலம் கொண்ட ஒருவனுக்கு இந்த கொடுத்தாலும் திருப்தி அடைவதில்லை.
  • தேவைக்கு உறவு கொண்டால் அதற்கு பேர் பாசம் இல்லை சுயநலம்.
  • தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல… சுயநலம்.
  • உன்னிடத்தில் கேட்பதெல்லாம் என் ஆயுளின் இறுதி வரையிலும் எனக்கு மட்டுமே தந்துவிட்டுப் போ, உன் அணைப்பில் வாழும் சுகத்தையும் அரவணைப்பில் தூங்கும் வரத்தையும் இதுதவிர வேறெதுவும் வேண்டாம் மாமா உன்னிடமிருந்து…

Suyanalam Quotes in Tamil

  • அதிகமான அன்பும் நீதான் கொடுத்தாய்…..அதீதமான வலியும் நீதான் கொடுக்கிறாய்….
  • உயிரக் கொடுக்கத் தெரிந்த கடவுளுக்கு நிம்மதியையும் கொடுக்கத் தெரியாமல் போய் விட்டதே..!
  • காலங்கள் நிற்பதில்லை என்று தெரிந்தும் சில காரணங்களுக்காக உன் பணியை செய்ய தாமதிக்காதே! ஒவ்வொரு நொடியிலும் உன் வாழ்க்கை மாறலாம்…!
  • உண்மையான மகிழ்ச்சி என்பது…நம் மகிழ்ச்சி யாரையும் கவலையடைய செய்யாதிருப்பதே..!

Suyanalam Quotes in Tamil

  • தனிமையின் வேதனையை உணர்வதற்கு, யாருடைய பிரிவும் அவசியமில்லை. உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத உறவுகள் போதும்…!
  • தனிமைக்கு" என்னை மிகவும் பிடித்து விட்டது போல யாரையும் என்னிடம் நிலையாக இருக்க விடுவதில்லை..
  • நாம் ஏழையோ,பணக்காரரோ 'நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால் அதுவே மிகப்பெரிய செல்வமாகும்.

Suyanalam Quotes in Tamil

  • அருகிலேயே இருப்பதால் அன்பு அதிகரிப்பதில்லை..நான் தொலைவில் இருப்பதால் அந்த அன்பு ஒருபோதும் குறைவதில்லை…
  • நிறம் மாறும் பச்சோந்திகளைவிட அடிக்கடி மனம் மாறும் மனிதர்களிடமே அதிக கவனம் தேவை.
  • வாழ்க்கையில் தடுமாறும் போதும் தடம் மாறும் போதும் நினைவில் கொள்ள வேண்டிய வரிகள்..

"எல்லாம் சில காலம்தான். எதுவும் நிலை இல்லை. இதுவும் கடந்து போகும்".

Suyanalam Quotes in Tamil

  • காலங்கள் நிற்பதில்லை என்று தெரிந்தும் சில காரணங்களுக்காக உன் பணியை செய்ய தாமதிக்காதே..
  • ஒவ்வொரு நொடியிலும் உன் வாழ்க்கை மாறலாம்…!
  • சோகம் என்பது கண்ணீரில் மட்டும் மறைந்திருக்காது..வாய்விட்டு சிரிக்கும் பலரின் பொய்யான சிரிப்பிலும் மறைந்திருக்கும்..!
  • எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டுப்போங்கள்..ஆனால், உங்களால் ஒருவர் அழவோ,அழியவோ கூடாதென்ற கொள்கையை மட்டும் கடைபிடியுங்கள்.

Suyanalam Quotes in Tamil

  • அவளின் குழந்தைத் தனத்தில் குறைந்து போகின்றன,அவனின் கோபங்கள்..
  • அடுத்தவருக்கு பிடிக்க வேண்டும் என வாழாதே..உனக்கு பிடித்ததுபோல் வாழ்ந்து விடு ஏனென்றால் இது உன் வாழ்க்கையை..
  • கவலைகளுக்கு பயந்தால் தூங்க முடியாது. கஷ்ட நஷ்டங்களுக்கு பயந்தால் வாழ முடியாது. கவலைகளை காற்றோடு விடுங்க. எப்போதும் மனச காலியா வைங்க. வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.
  • உன்னைப் பார்க்க நினைக்கும் நேரம் உன்..கண்ணைப் பார்த்து நானும் பேச மறக்கும் நிலைக்கு என்ன பெயர் வைப்பாயடா என் அழகா….

Suyanalam Quotes in Tamil

  • சுயநலம் என்பது மனது போட்டுக்கொள்ளும் முகமூடி. அது தன்னை மட்டுமே உணரும் மூடி..
  • தன்னை வாழவைக்கும் தென்னை..இளநீராக நமக்குத்தருகிறது..நம்மை நம்பி வருவோருக்கு உதவாமல் இருப்பது தலைமுறையை பாதிக்கும்..
  • தன்னால் வாழ்வோரை வியந்து போற்றாதவன் உயர்ந்தவர் அல்லர்.
  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Updated On: 20 Feb 2024 6:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...