/* */

sardine fish in tamil நோய் வராமல் தடுக்கவும், உடல் நலம் பேணவும் மத்தி மீன் சாப்பிடுங்க

நீங்கள் கடல்உணவை விரும்புபவரா? இனி மத்தி மீன் சாப்பிடுங்கள். இது நோய்களை கட்டுக்குள் வைக்கவும் வராமல் தடுக்கவும் பெருமளவு உதவுகிறது

HIGHLIGHTS

sardine fish in tamil நோய் வராமல் தடுக்கவும், உடல் நலம் பேணவும் மத்தி மீன் சாப்பிடுங்க
X

மத்திய தரைகடல் பகுதியில் அதிகமாக இருக்கும் இந்த மத்தி மீனை கேரள மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கேரளாவில் சாளி என்றும், ஆந்திராவில் காவாலி என்றும், வங்கத்தில் கொய்ரா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மத்தி மீனின் சுவை அவ்வளவாக இருக்காது என்றாலும் இதிலிருக்கும் சத்துகளை வைத்து பார்க்கும்போது ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கிறது.

மத்தி மீனில் சதைப்பற்று அதிகம், விலையில் அதிகம் இல்லை ஜென்டில்மேன். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் இந்த மீன் கிடைக்கும். இந்த மீனில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் சத்து நிறைந்திருக்கிறது என்பதோடு பாதரசம் அதிக அளவு இல்லை.

100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து -20.9 கிராம், கொழுப்பு- 10. 5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம் நீர்ச்சத்து- 66.7 கிராம் உண்டு.வைட்டமின் பி12, வைட்டமின் டி, கால்சியம், செலினியம் போன்றவற்றை இருக்கிறது. குறிப்பாக வைட்டமின் பி 12 அதிகமாக இருக்கிறது.

மத்தி மீன் சிறியதாக இருந்தாலும் கூட இதய நோய் மற்றும் புற்றுநோயை கூட தடுக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இந்த கொழுப்பு அமிலமானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுவதால் இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு வெளியேறி இரத்த ஓட்டம் சீரடையும்.. இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.

எலும்பை உறுதி செய்யும்

எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் சத்து கண்டிப்பாக தேவை. 60 கிராம் மத்தி மீனில் 217 மி.கிராம் அளவு கால்சியம் இருக்கிறது இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும். குறிப்பாக கர்ப்பக்காலத்தில் இந்த மீனை அதிகம் எடுத்துகொள்ளும் போது குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும். பெண்களின் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் பிரச்சனை வராமல் தடுக்க உணவில் அவ்வபோது மத்தி மீனை சேர்த்துவருவது நல்லது.


சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

மத்தி மீனை உட்கொள்ளும் போது இதிலிருக்கும் புரதமும் கொழுப்பும் சேர்ந்து இரத்தமானது உணவில் சர்க்கரையை உறிஞ்சும் வேலையை மெதுவாக்குகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. நீரிழிவு வராமல் தடுக்க இந்த மத்தியை தொடர்ந்து சாப்பிடலாம். இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கவும் மத்திமீன் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

உடல் எடை குறைய

மத்தியில் இருக்கும் புரதம் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை உங்களுக்கு பசி உணர்வை தூண்டாது என்பதால் எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க இனி மத்தி மீனையும் சேர்த்துகொள்ளுங் கள்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்

உடலில் வளரும் புற்று செல்களை எதிர்க்க உடலுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து அதிகம் தேவை. சில வகையான புற்றுசெல்களை அழிக்க மத்தி மீனில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி உதவியாக இருக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நோய் நொடி அண்டாது. மத்தி மீன் உடலுக்கு அதிகப்படியான எதிர்ப்பாற்றலை அளிக்கிறது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய ஊட்டசத்துகளை நிறைவாக அளிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சீராக செல்ல ஆக்ஸிஜனை நிறைவாக அளிக்கிறது.


கண்களுக்கு நல்லது

கண் கோளாறை தடுக்கிறது. மத்தி மீன் சாப்பிடுவதால் மங்கலான பார்வை உண்டாவதை தடுக்கிறது. சமீப ஆய்வுகளின் படி மத்தி மீன் மாகுலர், கண் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பை தடுப்பதாக தெரிவிக்கிறது.

மேனி மிளிரும்

உணவில் அடிக்கடி மத்தி மீனை சேர்த்து வந்தால், சரும அழற்சியை குறைப்பதோடு அழகு சாதனங்கள் பயன்படுத்தாமலே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. மத்தி மீனில் இருக்கும் கொழுப்புகள் சருமத்துக்கு பொலிவை தருகிறது.

மத்தி மீன் குறித்த பல்வேறு ஆய்வுகள் அவற்றின் நன்மைகளை பட்டியலிட்டு கூறுகிறது. இனி மீன் உங்களுக்கு பிடிக்கும் என்றால் மத்தி மீனை அதிகம் சாப்பிடுங்கள்.

Updated On: 7 Dec 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு