/* */

வாழ்ந்து பார் உறவுகளின் வலிமை தெரியும்..! உலகம் எதுவென்று புரியும்..!

Relatives Quotes in Tamil-உறவுகள் ரத்தத்தின் சொந்தங்களில் மட்டுமல்ல..நட்புகள் வடிவத்திலும் வந்துசேரும். இது இரண்டிலுமே நல்லதும் தீயதும் உள்ளன..

HIGHLIGHTS

Relatives Quotes in Tamil
X

Relatives Quotes in Tamil

Relatives Quotes in Tamil

சொந்தங்கள் குறைவாக இருப்பினும் நிறைவான வாழ்க்கைக்கு உதவும் சொந்தங்களே போற்றத்தக்கவையாக இருக்கமுடியும். அது உறவோ அல்லது நட்போ. துயரங்கள் ஏற்படும்போது நமது கண்ணீரைத் துடைக்கவேண்டும். கை தூக்கிவிடவேண்டும். மாறாக துன்பத்தில் தூக்கி எறியும் சொந்தங்கள் என்றால், அவர்கள் இருந்தென்ன..? இல்லாவிட்டால் என்ன..? அதற்காக மனம் கலங்கத் தேவை இல்லை. அவர்கள் முன்னால் நீங்கள் வாழ்ந்து காட்டவேண்டும். அவர்கள் நாணி தலை குனியவேண்டும்.

  • நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் தன் மகளுக்கு அடிமையாகவே வாழ்கிறான் தந்தை..
  • நம் பசி அறிந்தே பசியாற்றுபவள், அம்மா தன் பசி மறந்தே பசி போக்குபவர் அப்பா..
  • காற்றும் எங்களுடன் சேர்ந்து இரவினில் தூங்க இடம் கேட்கும்..மழைதுளி கூட என் அம்மாவின் மடியினில் தவழ தினம் ஏங்கும்..

Relatives Quotes in Tamil

  • மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அவள் மகள் மட்டும் இல்லை தன் தாயின் மறுபிறவி என்று..
  • மனைவியின் மகிழ்ச்சிற்காகவும் பிள்ளைகளின் சிரிப்பிற்காகவும் சந்தோசங்களை தொலைக்கின்றனர் பல அப்பாக்கள்..
  • ஆண்டவன் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை.. அந்த ஆண்டவனே கிடைத்தார், வரமாக அப்பா..
  • சின்னச் சின்ன கூட்டுக்குள்ளே சொர்கம் இருக்கிறது..பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு? நேசம் மட்டும் போதும் கண்ணே..காசு பணம் எதற்கு...?

Relatives Quotes in Tamil

  • பல மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் நடமாடும் ஓர் உயிர் தந்தை...
  • தன் தங்கையை முதல் பிள்ளையாய் நினைக்கும் அண்ணன்களும் தாயின் மறுஉருவமே..
  • நாணலைப் போலவே எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்..தூண்களை போல் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்..நாமே அடை மழையாக பெய்யும் சந்தோசம்...
  • தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் அப்பாவுக்கு கிடைப்பதில்லை. அதனால் தன் நெஞ்சில் சுமந்து கொள்கிறார்..

Relatives Quotes in Tamil

  • அன்னை ஊட்டிய ஒரு பிடி சோற்றில் ஆயுள் முழுவதும் பசி மறந்தோம். ஒரு கண்ணில் அடி பட்டால்

பத்து கண்களிலும் வலி கண்டோம்...

  • ஒரு பெண்ணின் முதல் அன்பை பெற்று விட்டேன். என்று கர்வம் கொள்ளாதே..அவளின் முதல் காதல் என்றுமே அவள் அப்பா தான். அவர் அருகில் இருந்தாலும் இல்லை என்றாலும்..
  • நத்தை கூட்டின் உள்ள நீர் போதும். எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம். காற்றும் கடலும் கை கட்ட கவிதைகள் போன்று வாழ்ந்து வந்தோம்..

Relatives Quotes in Tamil

  • ஐந்தெழுத்து புது மொழியை அறிய வைத்தாள். என் அம்மா, அண்ணன், தங்கை இருவருமே பாசம் கொண்டு தமிழ் மண்ணை நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்த வந்தோம்.. அது ஒரு பொற்காலம்.
  • அம்மாவிற்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம்..நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்தில் சொந்தங்கள் சேர்ந்திருப்போம் அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே..
  • அடை காக்கிற கோழியைப் போல இந்த வீட்டை காப்பது யாரு..அழகான அம்மன் போல,எங்க அம்மாவைப் பாருங்க..
  • எத்தனை சண்டைகள் வந்தாலும் அக்கா என்ற உறவை விட்டு விடாதே..அவள் உன் தாய்க்கு சமமானவள்..
  • தம்பியின் கோபத்திற்கு அடங்கவும், அதே தம்பியை அன்பால் அடக்கவும், தெரிந்த ஒருத்தி அக்கா..

Relatives Quotes in Tamil

  • குறும்பு செய்யும் போது ரசித்தாள். செய்யும் பொது தாயை போல் கண்டிப்பால் என் அக்கா..
  • அக்காவின் அரவணைப்பும்..கண்டிப்பும் இன்னொரு தாய்க்கு சமம் என்று தம்பிகளுக்கு மட்டுமே தெரியும்.
  • அண்ணன், தம்பியின் பாசத்திற்கு முன்னாள் அப்பா,அம்மாவின் பாசம் கூட தோற்றுப் போகும்..
  • எத்தனை குழந்தை பெற்றாலும் ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை எப்போதுமே தன் தம்பி தான்.
  • அம்மாவிடம் சொல்ல தயங்கும் விஷயங்களை கூட அக்காவிடம் சொல்ல தயங்கியதில்லை.

Relatives Quotes in Tamil

  • என்னையும் அக்காவையும் வைத்து ஒரு கவிதை எழுத முயன்று தோற்று போனேன். இந்த உறவே ஒரு கவிதை என்பதை உணர்ந்து..
  • அண்ணனின் நெஞ்சில் ரத்தம் வரும், தங்கையின் கண்ணீரை கண்டால்..
  • அண்ணன், தன் வாழ்க்கையை பற்றி நினைக்கவே மாட்டான். தன் தங்கை வாழ்க்கை அமையும் வரை..
  • எதற்கு தங்க மாளிகை என் தங்கையின் உள்ளமே தங்க மாளிகை தான்..

Relatives Quotes in Tamil

  • கையில் கட்டும் கயிற்றில் இல்லை, அண்ணன் தங்கை பாசம். அது இதயத்தோடு கொண்ட உணர்வு.
  • கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது..
  • முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்..
  • அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்..

Relatives Quotes in Tamil

  • பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்..
  • பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்..
  • உண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே..
  • கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு, கண்டிப்பாக நிலைக்காது..

Relatives Quotes in Tamil

  • ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...
  • நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களைக் காட்டி கொடுத்துவிடுகிறது..
  • அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்குத் தெரியவரும்..
  • தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்..

Relatives Quotes in Tamil

  • சிரிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள், அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக் கொடுத்துவிடுவார்கள்..
  • எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல...
  • நிச்சயம் இல்லாத ஒன்றின் மேல், அதீத நேசம் வைத்துவிடாதே.. நிரந்தரமான நினைவுகளைக் கொடுத்துவிட்டு, உன் இரவுகளை களவாடிச் சென்றுவிடும்..
  • இங்கு பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான். அவர்கள் செய்தால் சரி, நாம் செய்தால் தவறு..

Relatives Quotes in Tamil

  • சில பாடங்களைக் கற்றுக்கொள்ள புத்தகங்கள் தேவை இல்லை. புத்தி புகட்டும் வாழ்க்கை அனுபவங்களே போதும்...
  • மறந்து விடத் நினைக்கிறேன்..உதாசீனப்படுத்தும் பேச்சுக்களையும், வெறுப்பாய் பார்க்கும் உறவுகளையும்..
  • எதிரியை கூட நம்பு. ஆனால், உறவுகளை நம்பாதே..ஏனென்றால், எதிரி கொடுக்கும் வலியை விட, உறவுகள் தரும்வலியே வலிமை வாய்ந்தது..
  • உன்னை விட்டு விலகிச் செல்பவை எதுவாக இருந்தாலும், சந்தோசமாக வழி அனுப்பி வை. நீ இழந்ததை விட, சிறப்பாகத் தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது..

Relatives Quotes in Tamil

  • தேவை முடிந்ததும் நண்பன் துரோகி ஆகிறான்... தேவை தொடங்கும் போது துரோகி நண்பன் ஆகிறான்... இதுதான் உலகம்... எவர் தேவைக்கும் நீ பொருளாகி விடாதே..
  • நீ சிரிக்க வைக்க விரும்புவர்கள் புன்னைகைத்து கடந்த செல்வார்கள்.. நீ அழ வைப்பவர்கள் தான் கண்ணீரையும் துடைத்து உனக்காக காத்திருப்பார்கள்..
  • இழந்தவை பலவாயினும், இழக்க நினைப்பவை சில உண்டு. அதிலொன்று நாமறியாமலேயே போலியான முகத்திரையில் உறவாடும் ஒருசிலரை..
  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Updated On: 30 Jan 2024 4:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...