/* */

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள்..!

Ramadan Quotes in Tamil-ரமலான் பண்டிகைக்கு அரபி மொழியில் ஈதுல் ஃபிதர் என்று பெயர். அதாவது தர்மம் செய்யும் திருநாள். தர்மம் செய்வதற்கென்றே ஒரு பண்டிகையை தந்த மார்க்கம்.

HIGHLIGHTS

Ramadan Quotes in Tamil
X

Ramadan Quotes in Tamil

Ramadan Quotes in Tamil

ரம்ஜான் எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

  • பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்பிறையாக ஒளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்த்துக்கள்.
  • சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட... இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
  • உங்களுடைய எல்லா தேவைகளையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக... இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

Ramadan Quotes in Tamil

  • வலிகள் தேய்பிறையாய் தேயட்டும். வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்.. அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி வளர்பிறையாய் உங்கள் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

Ramadan Quotes in Tamil

  • ரம்ஜான் என்பது வெறும் மனிதப் பண்டிகையல்ல புனிதப் பண்டிகை.. முப்பது நாட்கள் நோன்பிருந்தே அந்த ஒற்றை நாள் தவத்தை யாவரும் அடைய முடியும். அது... குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் சமாதானத்தை கற்பிக்கும். அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • இந்த ரமலான் முபாரக் உங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தினமாக இருக்கட்டும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக. இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • அல்லாஹ் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சிகளையும் வெற்றிகளையும் அளித்து சரியான பாதையில் வழி நடத்துவாராக..இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

Ramadan Quotes in Tamil

  • இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும். ரமலான் வாழ்த்துக்கள்.
  • வாழ்க்கையில் ஒவ்வொரு சவாலையும் வெல்ல உதவும். தைரியத்தையும் வலிமையையும் அல்லாஹ் உங்களுக்கு இந்த நாளில் அளிக்கட்டும். அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்..
  • அமைதி, நல்லிணக்கம்,சகோதரத்துவம் மற்றும் செழிப்பை அளிக்கும் நன்னாளாக இந்த நாள் அமையட்டும் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்..

Ramadan Quotes in Tamil

  • இந்த ரமலான் மாதத்தில் அல்லாஹ் உங்களை புனிதப்படுத்தட்டும்..உங்கள் இதயத்தில் ஒளி பிரகாசிக்கட்டும். அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • இந்த ரம்ஜான் தினத்தில் உங்கள் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வாராக..உங்களுக்கு செழிப்பையும் வளத்தையும் அளிப்பாயாக. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
  • இந்நன்னாளில் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு அல்லாஹ் நம்மை ஆசீர்வதிப்பாராக. அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
  • இந்த ரமலான் மாதம் அனைவரின் மனத்திலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவருவாராக. மனிதர்கள் நல்ல பாதையில் நடக்கக்கூடிய வகையில் மனிதக்குலத்திற்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவாராக. அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

Ramadan Quotes in Tamil

  • பிறை காணும் பெரு நாளின் பெரு மகிழ்வோடு அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.
  • நோன்பு எனும் உண்மையின் மகிழ்வினை பெற்றிட அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.
  • சகோதரத்துவம் பிறக்க, மனிதாபிமானம் காக்க, ஈகை சிறக்க,மன மகிழ்ச்சி பெருக அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.
  • இந்த நன்னாளில் அல்லாஹ் உங்களது நோன்பை ஏற்று, அனைத்து துன்பங்களையும் நீக்குவாராக..வளம் தருவாராக..இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.

Ramadan Quotes in Tamil

  • ரமலான் மாத நன்னாளில் அல்லாஹ்வை தொழுது ஆசி பெறுங்கள்..அல்லாஹ்வின் ஆசீர்வாதத்தால் வளமும் செல்வமும் பெருகட்டும். அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள்.
  • மனம் நிறைந்து அல்லாஹ்வை தொழுது, இந்த நன்னாளில் உடல் ஆரோக்கியம், செல்வ வளம் பெருகி சிறப்பான வாழ்க்கை வாழ ஆசீர்வதிப்பாராக..அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.
  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Updated On: 8 April 2024 4:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!