/* */

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு உலர் திராட்சை..! கைகண்ட மருந்துங்க..!

raisins in tamil-உலர் திராட்சை பல ஊட்டச்சத்துகள், கனிமங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். ஆரோக்கியம் பேண உலர் திராட்சையை எல்லா வயதினரும் பயன்படுத்தலாம்.

HIGHLIGHTS

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு உலர் திராட்சை..! கைகண்ட மருந்துங்க..!
X

raisins in tamil-உலர் திராட்சை நன்மைகள்.(கோப்பு படம்)

raisins in tamil-பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் மட்டுமே சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. திராட்சையை நன்றாக உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதிலும் இது ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்னைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான உணவு.

உலர் திராட்சை, கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்ய பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்னைகளைத் தடுக்கலாம். இப்போது உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போமா..?

raisins in tamil

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து காணாமலே போகும்.


சிறுநீரக பாதை தொற்று

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் மருத்துவம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அதாவது இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

raisins in tamil

உடல் வெப்பம் தணியும்

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு அதை நன்றாக மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே, கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

raisins in tamil

மாதவிடாய் பிரச்னைகள்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அப்படி அவஸ்தைப்படும் பெண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

எலும்பு பிரச்னைகள்

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்யத்திற்குத் தேவையான கால்சியம் செறிந்து காணப்படுவதால் இதனை தினமும் சாப்பிட்டு வர ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

raisins in tamil


நோயெதிர்ப்பு சக்தியை பலமாக்கும்

அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரவுன் நிற உலர் திராட்சையை விட கருப்பு உலர் திராட்சையில் அதிக இரும்புச் சத்து இருக்கிறது. அதே நேரத்தில், வைட்டமின் 'சி'யும் நிறைந்துள்ளது. இதனால், உடலில் உள்ள சத்துக்களை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. மேலும் , உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி, உடலை பலப்படுத்துகிறது. இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்யத்தை பாதுகாக்கவும் உலர் கருப்பு திராட்சைகள் பயனுள்ளதாக இருக்கிறது.

எலும்புருக்கி நோய் பாதுகாப்பு

ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் அதிகமாக இருக்கும். அதேபோல கருப்பு திராட்சையில் ஏராளமான கனிமங்கள் உள்ளன. இது வயது முதிர்வால் ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் ஏற்படும் துளைகள் போன்றவற்றைத் தடுக்கப் பயனாகிறது. தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வர எலும்பு பிரச்னைகள் தீரும்.

Updated On: 5 April 2024 10:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு