/* */

Protein in Tamil: உடலுக்கு புரதம் எவ்வளவு முக்கியம்? எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?

புரதம் கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் உள்ளது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் கட்டமைப்பதற்கான அடிப்படை இதுதான்

HIGHLIGHTS

Protein in Tamil: உடலுக்கு புரதம் எவ்வளவு முக்கியம்? எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
X

புரதம் என்பது திசுக்களை கட்டியெழுப்புவதற்கும் சரிசெய்வதற்கும், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதிலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அத்தியாவசிய மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும். உங்கள் உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது முக்கியமானது,

ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த புரதம் கொண்ட உணவுப் பழக்கங்கள் இப்போது அனைவருக்கும் பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.


உடல் எடை பராமரிப்பிற்கு உணவில் 20 சதவிகிதம் புரதம் இருக்க வேண்டும், எடை இழப்புக்கு 25 சதவிகிதம் வரை புரதம் இருக்க வேண்டும் என்று பொதுவாக உயர் புரத உணவு முறைகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

புரோட்டீன் - எடை இழப்புக்கு உதவுகிறது. ஏனெனில் இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்து பசியில்லாமல் உணர வைக்கிறது. ஆனால் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு, மலச்சிக்கல் மற்றும் வைட்டமின் குறைபாடு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும். அதனால், மற்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும், குறிப்பாக நார்ச்சத்துகளையும் உட்கொண்டாக வேண்டும்.

அதே நேரத்தில் அதிகமாகப் புரதம் எடுத்துக் கொண்டால் அது உடல்நல ஆபத்துக்குக் காரணமாக அமையலாம் என சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எனவே அதிக புரத உணவு முறையைப் பின்பற்றும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? நமக்கு ஏன் புரதம் தேவை?

புரோட்டீன் எனப்படும் புரதம் கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் உள்ளது. குறைந்தபட்சம் 10,000 வெவ்வேறு புரதங்கள் உண்டு. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் கட்டமைப்பதற்கான அடிப்படை இதுதான். உடலின் வளர்ச்சி, பழுதுபார்க்கும் பணிகளுக்கு புரதம் அவசியம்.

புரதம் அமினோ அமிலங்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. புதிதாகவும், சில நேரங்களில் பிற அமினோ அமிலங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இதை உடல் உருவாக்குகிறது. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உணவில் இருந்து கிடைக்கின்றன. விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரதம் நமக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.

பெரியவர்கள் தங்கள் எடையில் உள்ள ஒவ்வொரு கிலோவிற்கும் 0.75 கிராம் புரதத்தை உண்ண வேண்டும். உதாரணத்துக்கு 70 கிலோ எடையுள்ளவராக இருந்தால், ஒரு நாளைக்கு 52.5 கிராம் புரதத்தை உண்ண வேண்டும்.

இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும் உள்ளங்கை அளவுக்கு புரதத்தை உள்கொள்ளலாம். சராசரியாக, ஆண்கள் 55 கிராம் மற்றும் பெண்கள் 45 கிராம் புரதத்தை தினமும் சாப்பிட வேண்டும்.


அதிக புரதம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

சில உயர் புரத உணவுகள் கூடுதல் கொழுப்பு மற்றும் உப்பு போன்றவற்றையும் விட ஆரோக்கியக் கேடானவை.

அதிகப்படியான புரதத்தை உட்கொண்டால் அதைச் செயலாக்கம் செய்ய வேண்டிய பெரும் பணி சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே சிறுநீரக நோய்கள் இருப்போர் அதிகப்படியான மாமிச புரதம் எடுத்துக் கொள்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். அதிகப்படியான புரதம் எலும்பு வலிமையைப் பாதிக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Updated On: 21 Sep 2023 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்