வாழ்வில் வெற்றிபெற ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் Positive quotes in Tamil
உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ நம்மை மேம்படுத்திக் கொண்டாலும், உந்துதல் என்பது நமது இலக்குகளை அடைவதில் ஊக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
HIGHLIGHTS

உந்துதல் மேற்கோள்கள்
என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!
உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!!
நாம் எதை அதிகம் விரும்புகிறமோ அதற்கு நம்மை பிடிக்காமல் போகும்! இல்லையெனில், போக போக நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்....
காயங்களை குருதட்சணையாக வாங்கிக்கொள்ளாமல், காலம் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை.
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்
தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
நம்மிடம் தோற்றுவிடும்