/* */

Positive good morning in tamil-சோர்ந்து கிடக்காதீர்கள்..! காலைச்சூரியன் வந்துவிட்டான்..! காலை வணக்கம்..!

காலை வணக்கத்தை வெற்று வார்த்தைகளாக உதிர்க்காமல் நம்பிக்கை ஊட்டும் நேர்மறை சிந்தனை வளர்த்தால் தன்னம்பிக்கை வளரும்.

HIGHLIGHTS

Positive good morning in tamil-சோர்ந்து கிடக்காதீர்கள்..! காலைச்சூரியன் வந்துவிட்டான்..! காலை வணக்கம்..!
X

positive good morning in tamil-நேர்மறை சிந்தனையுடன் இனிய காலை வணக்கம் (கோப்பு படம்)

Positive good morning in tamil

உலகில் ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை என்பது இயற்கையாகவே இருக்கும். அப்படி இருப்பதால்தான் தூங்கி எழுகிறான். குழந்தை எழுந்து நடக்கிறது. உணவைத் தேடுகிறான். உழைப்புக்குத் தயாராகிறான். தவிர ஒரு மனிதனுக்கு சூழ்நிலை எதிராக அமையும்போது அவனது மனதில் எல்லோரும் இப்படித்தானோ என்கிற ஐயம் ஏற்பட்டு அவநம்பிக்கையாக மனதில் பதிந்துவிடுகிறது. இதன் நீட்சியே தன்னம்பிக்கை இல்லாத நிலையாக மாற்றம் பெறுகிறது.


அப்படியானவர்களுக்கு ஊக்கமூட்டும் அல்லது உற்சாகப்படுத்தும், மனதில் இருக்கும் அவநம்பிக்கைகளை தீர்க்கும்விதமாகவும் சின்னச்சின்ன சம்பவங்கள் அல்லது பேச்சுகள் நம்பிக்கையை ஊட்ட உதவும். வீழ்ந்து கிடைக்கும் ஒருவனுக்கு கைகொடுத்து உதவுவதுபோல இந்த நேர்மறை சொற்றொடர்கள் நம்பிக்கையை ஊட்டலாம்.

இதோ உங்களுக்காக நேர்மறை சிந்தனைகளுடன் இனிய காலை வணக்கங்கள். 'வணக்கம்' சொல்வோம் வாங்க.

உலகம் ஒரு பாடசாலை படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். உள்ளம் ஒரு யாசகசாலை பட்டுத் தெளிவுக் கொள்ளுங்கள்.

இனிய காலை வணக்கம்

நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

இனிய காலை வணக்கம்

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

இனிய காலை வணக்கம்

'நீங்கள் அடைந்த அனுபவங்கள் உங்களை சிதைப்பதற்கு அல்ல, செதுக்குவதற்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.'

இனிய காலை வணக்கம்


Positive good morning in tamil

நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கி விடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கி விடும்

இனிய காலை வணக்கம்

கனவுகள் பல உண்டு ஆசைகள் பல உண்டு ஆனால் இலட்சியம் என்பது ஒன்றே. அதை முயற்சியோடும், மகிழ்ச்சியோடும் செய்தால் வானம் கூட தொட்டு விடும்தூரமே. நமது இலட்சியத்திற்கு முதல் எதிரி நமது அலட்சியம் தான்.'

இனிய காலை வணக்கம்

எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.

இனிய காலை வணக்கம்

கோடி முறை "பயிற்சி" செய்தாலும்,

ஒருமுறை "முயற்சி" செய்தால் தான் பலனை அடைய முடியும்.

இனிய காலை வணக்கம்

Positive good morning in tamil

பரவாயில்லை என்பதை காட்டிலும், பழகிவிட்டது என்ற வார்த்தைக்கு சற்றே வலி அதிகம்.

இனிய காலை வணக்கம்

பணம் மனிதனைஆளத் தொடங்கிய பிறகு அன்பு அடகு கடை பொருளாகிவிட்டது..!

இனிய காலை வணக்கம்

நல்லா இருக்கறது வேற.. நிம்மதியா இருக்கறது வேற... இங்க நிறைய பேர் நல்லா மட்டும் தான் இருக்காங்க.

இனிய காலை வணக்கம்

எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை எப்போது நீங்கள் தேடிச் செல்கிறீர்களோ அப்போது தான்

கவலைகள் இல்லாத வாழ்க்கை உங்களைத் தேடி வரும்.

இனிய காலை வணக்கம்


Positive good morning in tamil

இன்று எதையெல்லாம் வேண்டும் என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்களோ, ஒரு நாள் அவற்றை எல்லாம் வேண்டாம் என்று கூற வைத்துவிடும் இந்த வாழ்க்கை.

இனிய காலை வணக்கம்

நல்லவராய் இருங்கள். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள். நல்லவர்களை உலகம் அவ்வளவு எளிதாக மதிப்பதில்லை.

இனிய காலை வணக்கம்

யார் மீதாவது கோபம் வந்தால் எளிதில் மீண்டு விடலாம். வருத்தம் வந்தால் மீளவே முடியாது.

இனிய காலை வணக்கம்

சிலர் காயப்படுத்தும் போது வராத வலி, அதை நியாயப்படுத்தும் போது வந்து விடுகிறது.

இனிய காலை வணக்கம்

Positive good morning in tamil

புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்த ஞானம் , நமக்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் இருந்து கிடைக்கிறது.

இனிய காலை வணக்கம்

தான் மட்டும் உயரத்திற்கு செல்வது வெற்றியல்ல. தன்னை நம்புகின்றவர்களையும், தன் மீது விசுவாசம் உள்ளவர்களையும் உயரத்திற்கு கூட்டிச்செல்வதுதான் உண்மையான வெற்றி.

இனிய காலை வணக்கம்

மிகவும் பிடித்தவர்களிடம் கடைபிடிக்கும் அதீத மௌனம் போல் ஆகச்சிறந்த வன்முறை ஏதுமில்லை

இனியகாலை வணக்கம்

வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பின் வாங்காமல் செல்கிறீர்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

இனிய காலை வணக்கம்


Positive good morning in tamil

எது உங்களை பலவீனப் படுத்துகிறதோ அதை தயக்கமின்றி தூக்கி எறிந்து விடுங்கள்.

இனிய காலை வணக்கம்

சண்டையிடாதே என்று சொல்வதை விட, சண்டையின் போது வார்த்தைகளை விடாதே எனச் சொல்லிக் கொடுங்கள்.

இனிய காலை வணக்கம்

வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக் கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறாகும்.

இனிய காலை வணக்கம்

முன்பெல்லாம் இயல்பாக இருப்போம். நடிப்பது சிரமமாயிருந்தது. இப்போது எல்லாருமே நடிக்கிறோம். இயல்பாக இருப்பது சிரமமாயிருக்கிறது.

இனிய காலை வணக்கம்

Positive good morning in tamil

உணர்ச்சிகளால் ஆள நினைப்பதைவிட, உணர்வுகளால் ஆழ்ந்து பார். உன் மனைவியை விட ஓர் உயர்ந்த உயிர் தோழியை உன் வாழ்வில் நீ காணவே மாட்டாய்.

இனிய காலை வணக்கம்

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உங்களைப்போல் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.

இனிய காலை வணக்கம்

மன்னித்துக் கொள்" என்ற ஒற்றைச் சொல் ஒருவரை அமைதிபடுத்திவிடும் என்றால், தவறே செய்யவில்லை என்றாலும் அந்த "கருமத்தை" சொல்லித் தொலைத்து விடுங்கள்.

இனிய காலை வணக்கம்

வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவர்களை விட, கூச்சப்படாமல் கை நீட்டி கேட்பவர்களுக்கே வாய்ப்புகள் இங்கு அதிகம்.

இனிய காலை வணக்கம்


Positive good morning in tamil

ஈர்க்கத் தெரிந்தவர்களுக்கு தக்க வைத்துக்கொள்ளத் தெரிவதில்லை.

இனிய காலை வணக்கம்

அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகுதான் மனசுக்குத் தெரிகிறது , பழகி இருக்கக்கூடாது என்று.

இனிய காலை வணக்கம்

பயந்தவன் கவலையோடு தினம் தினம் போராடுகிறான். துணிந்தவன் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையோடு போராடுவான்

இனிய காலை வணக்கம்

உதவிய உறவையும், உதறிய மனிதரையும் வாழ்க்கையில் எப்பொழுதும் மறவாதீர்கள்.

உதறியவர்களுக்கு பாடமாகவும், உதவியவர்களுக்கு பாலமாகவும் இருக்க வேண்டும்.

இனிய காலை வணக்கம்

Positive good morning in tamil

உங்கள் மகிழ்ச்சியை யார் ஒருவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ அவர்களிடம் ஓர் அடி தள்ளியே இருங்கள்..!

இனிய காலை வணக்கம்

அன்பையும் மரியாதையையும் தயங்காமல் ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில் எதையும் சாதித்துவிடுவான்.

இனிய காலை வணக்கம்

நாம் எப்போதும் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்று தான் சிந்தித்துக்கொண்டிருப்போம்.

என்ன வேண்டாம் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை

இனிய காலை வணக்கம்

Updated On: 25 Aug 2023 6:24 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்