/* */

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நேர்மறை வாசகங்கள்.... அழகு தமிழில்.....

Positive Abdul Kalam Quotes in Tamil - மறைந்த முன்னாள் ஜனாதிபதிஏ.பி. ஜெ. அப்துல்கலாம் அவர்கள் நாட்டிற்காக பல தியாகங்களை செய்துள்ளார். அவருடைய நேர்மறை வாசக பொன்மொழிகள் இதோ.

HIGHLIGHTS

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்   நேர்மறை வாசகங்கள்.... அழகு   தமிழில்.....
X



Positive Abdul Kalam Quotes in Tamil -ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் , (15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார் கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார்.

மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தார். மேலும்இவர் எழுதிய அக்னிசிறகுகள் என்ற நுால் பெரும் புகழ் பெற்றது. குழந்தைகள் மீது அதீத பாசம் கொண்டவர். சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடாமல் வைத்திருக்க வேண்டும் என அறிவுரை கூறுவதோடு நாடு முழுவதும் அதிக மரங்களை நடல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படிதான் நடிகர் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தினையே துவங்கி லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டார்.

இவர் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்று இவருடைய நேர்மறை வாசகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

*நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

வாய்ப்பிற்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை உருவாக்கிடு!

உறங்கும்போது வருவதல்ல கனவு; உறங்கவிடாமல் செய்வதே கனவு!

உங்களை நீங்களே இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

என்னால் முடியும்! நம்மால் முடியும்! இந்தியாவால் முடியும்!

மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான திறமையானவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், திறமையை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கின்றன.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதீர்கள். கண்ணை திறந்து பார் அக்கஷ்டத்தை வென்றுவிடலாம்.

இமயத்தின் முகட்டை அடையவும், வாழ்க்கையில் உச்சிக்கு செல்வதற்கும் ஒருவனுக்கு மனவுறுதி தான் தேவை.

நம்பிக்கை நிறைந்த ஒருவன் எவர் முன்னும் மண்டியிடுவதேயில்லை.

கையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதீர். கையே இல்லாதவனுக்கும் எதிர்காலமுண்டு.

இவ்வுலகத்தில் பிறக்கும் அனைவருக்கும் வரலாற்றில் ஒருபக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பக்கத்தை இவ்வுலகறிய செய்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் யாராக இருந்தாலும், விண்மீனைக் கூட அடைய வேண்டுமென நினைத்தாலும் உங்களுடைய உழைப்பால் நீங்கள் நினைத்ததை அடையலாம்.

தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். வெற்றிக்கான திறமையே அதுதான்.

இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என்னுடைய கடின உழைப்பாலும், மன உறுதியினாலும், தோல்வியை தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்றுவேன்.

ஒருமுறை வருவது கனவு. இருமுறை வருவது அவா. பலமுறை வருவதே இலட்சியம்.

கனவு காணுபவர்கள் அனைவருமே தோற்பதில்லை. வெறும் கனவு மட்டுமே காண்பவர்களே தோற்கிறார்கள்!

கற்றலில் தவறுகள் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். துணிவுடன் கற்றலே முக்கியமாகும்.

ஓர் நல்ல புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம். ஓர் நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கே சமமாவான்.

முட்டாள் தன்னை முட்டாளென உணரும் தருணத்தில் அறிவாளியாகிறான். அறிவாளி தன்னை அறிவாளியென்று தற்பெருமை கொள்ளும் போது முட்டாளாகிறான்.

அழகைப்பற்றி கவலையுறாதீர்கள். அது உங்கள் கடமைகளுக்கு தடையாயிருக்கும். கடமையை பற்றி எண்ணுங்கள் உங்களுடைய வாழ்வை அது அழகாக்கும்.

முழு ஈடுபாடில்லாமல் வெற்றி கிடைப்பதில்லை. ஈடுபாட்டுடன் செய்தால் தோல்வியுமில்லை.

கற்பனை சக்தி, மனத்தூய்மை, மன உறுதி இவையெல்லாம் இணைந்தால் அறிவை கண்டைவீர்கள்.

வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம்தான் எனில் நழுவ விட்டுவிடாதீர்கள்; ஒரு கடமையெனில் நிறைவேற்றுங்கள்; ஒரு இலட்சியமெனில் சாதித்துக் காட்டுங்கள்; ஒரு சோகமெனில் தாங்கிக்கொள்ளுங்கள். ஒர் போராட்டமெனில் வென்று காட்டுங்கள். ஒரு பயணமெனில் முடித்துவிடுங்கள்.

ஆகாயத்தை பாருங்கள். நாம் தனியேயில்லை. இப்பிரபஞ்சமே நம்மிடம் நட்பாக இருக்கிறது. உழைப்பாளர்களுக்கும், கனவு காணுபவர்களுக்குமே அவை சிறந்தவற்றை வழங்க தவறுவதில்லை.

உன் வாழ்வில் நீ சிரித்து உன் தாய் அழுத ஒரே நாள், உன்னுடைய பிறந்த நாள்.

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்தவனுக்கு தோல்வியேயில்லை.

நம்முடைய கனவு படிப்பறிவுள்ள இந்தியாவைதான். மாறாக, மகத்தான இந்தியாவுக்கானதல்ல.

ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது அத்தேசத்தின் மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமைகின்றது.

அக்னிச்சிறகுகள் அணைவதில்லை. அவற்றிலிருந்து விழுந்த இறகுகள் மேலெழுந்து பறந்து கொண்டிருக்கும்வரை அவைகளுக்கு இறப்பென்பதில்லை.

புதிய எண்ணங்கள் உருவாக்கும் மன உறுதி இன்று என்னிடம் மலர்ந்துள்ளன. எனக்கென புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாதென கூறும் பிறரிடம் முடியுமென கூறுவதற்கான மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Aug 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!