/* */

Pongal greetings in Tamil, Pongal Vazhthukkal in Tamil பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடுங்க

பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் மக்களின் வாழ்வியல் என்ற நிலையிலிருந்து மாறி வெறும் சடங்குகளாக மாறிப் போயுள்ளன.

HIGHLIGHTS

Pongal greetings in Tamil, Pongal Vazhthukkal in Tamil பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடுங்க
X

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். கண்ணதாசன் வரிகளில் கூறுவதென்றால், மார்கழியின் மகள், மாசியின் தாய் இந்த தை மாதம்.

தமிழர் திருநாளான தை பொங்கல் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை எடுத்துக் காட்டுகின்றது.

தமிழர்கள் விழாக்களில் முக்கியான விழாவான பொங்கல் திருநாளில் உங்கள் அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து செய்தி மூலம் உங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்..அனைத்து மக்களும் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று மகிழ்வாக வாழ வாழ்த்துகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்!

இந்தத் தையுடன் எமது மக்களின் துயர வாழ்வு தொலைந்து போக,

இனி வரும் நாளெல்லாம், நல்ல நாளாக அமையட்டும்!

கள உறவுகள் அனைவருக்கும், எனதினிய பொங்கல் தின வாழ்த்துகள்!

தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது

புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு

திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

தைபிறந்தால் வழி பிறக்கும்;

தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்;

நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்;

கதிரவன் விழிகள் நல்விடியலை கொடுக்கும்;

அவலங்கள் அகலும்!

இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

இல்லம் எனும் பானையில்

பாசம் என்னும் பாலூற்றி

அன்பெனும் அரிசி இட்டு

நேசம் என்னும் நெய் ஊற்றி

இன்பம் என்னும் வெல்லமிட்டு

இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

நோயற்ற வாழ்வினை பெற்று மாசற்ற செல்வதை பெற்று அன்புடைய சுற்றத்தை பெற்று இதயத்தில் இன்பத்தை பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.. இனிய தை திருநாள் நல்வாழ்த்துகள்

இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

சூரியன் தன் ஒளியை பூமியின் மீது பாய்ச்சுவது போன்று, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்! பொங்கல் வாழ்த்துகள்

பயிர்த் தொழில் என்பது உயிர்த் தொழில்

உழுது உழைப்போருக்கும்

உறுதுணை நிற்போருக்கும்

வந்தனை செய்வோம்.

தரணி செழிக்க சூரியனுக்கு நன்றி சொல்வோம்!!

பொங்கலோ பொங்கல்!!!

இன்று நகரங்களுக்கும் நிலம் சார்ந்த உற்பத்தி முறைக்கும் தொடர்பே இல்லை எனலாம். மருத நிலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான நகர்ப்பகுதிக்குள் இன்று மருத நிலப்பகுதி என்று எதுவும் கிடையாது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு நகரம் மெதுவாக அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். இதனால் நில உற்பத்தி முறை சார்ந்த பாரம்பரியப் பண்பாடுகளுக்கும் நகரங்களுக்கும் தொடர்பில்லாத நிலை உருவாகியுள்ளது. பொங்கல் உள்ளிட்ட விழாக்கள் மக்களின் வாழ்வியல் என்ற நிலையிலிருந்து மாறி வெறும் சடங்குகளாக மாறிப் போயுள்ளன. இவ்விழாக்களின் இடத்தை தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் எளிதாகப் பிடித்துக் கொண்டு விட்டன.

இன்று நகரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் விழா அதன் அடிப்படையை இழந்து போயுள்ளது. ஆனால் சமூக மாற்றத்தில் இது தவிர்க்க முடியாததும் கூட.

வீட்டு வாசலில் சூரியன் உதிக்கும் நேரத்தில் யாரும் இன்று பொங்கல் வைப்பதில்லை. நாட்காட்டியில் நல்ல நேரம் பார்த்து நண்பகல் பொழுதில் சமையலறையில் வெறும் சடங்காகப் பொங்கல் வைக்கின்றனர்.

சூரியனைப் பார்த்துக் கொண்டே குலவைச் சத்தத்துடன் பொங்க வேண்டிய பொங்கல், சமையலறையில் குக்கர் விசில் சத்தத்துடன் ஆவியாகக் காற்றில் கரைந்து விட்டது.

Updated On: 16 Oct 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!