/* */

pimples natural remedies-முகப்பரு வந்திடிச்சா..? கவலை வேண்டாம்..! இயற்கைமுறை வழிகள்..!

pimples natural remedies-இன்றைய இளம் தலைமுறைக்கு உணவு முறைகளால் கொழுப்பு அதிகமாகி முகப்பரு வருகிறது. எப்படி நீக்கலாம்? தெரிஞ்சுக்கங்க..!

HIGHLIGHTS

pimples natural remedies-முகப்பரு வந்திடிச்சா..? கவலை வேண்டாம்..! இயற்கைமுறை வழிகள்..!
X

pimples natural remedies-முகப்பரு இயற்கைமுறை தீர்வுகள் (கோப்பு படம்)

தொல்லை தரும் முகப்பரு

இன்றைய இளைஞர்களுக்கு குறி[ப்பாக இளம்பெண்களுக்கு முகபப்ரு பெரும் வேதனையை ஏற்படுத்த்தி வருகிறது. முகப்பரு அவர்களின் முகத்தின் அழகையே மாற்றிவிடுகிறது. பல இளம்பெண்கள் தற்காலத்தில் செல்போனிலேயே முகப்பருவுக்கு என்ன க்ரீம் பயன்படுத்தலாம் என்று தேடி வாங்குகின்றனர்.


pimples natural remedies

ஆனால் அவை தரமானதாக இருந்தால் பரவாயில்லை. இல்லையென்றால் பலருக்கு சருமம் பாதிக்கப்படும் னொளியும் ஏற்பட்டுவிடுகிறது. கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தி முக சருமத்தை கெடுத்துக்கொள்வதைவிட இயற்கையான முறையில் முகப்பரு வராமல் தடுப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.

ஒருவேளை அவை முகப்பருவை நீக்காவிட்டாலும்கூட எந்த எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாது. அதுகூட சிலருக்கு மட்டுமே செயல்பாடாமல் இருக்கலாம். ஆனால் இயற்கையான வழி தீர்வளிப்பதற்கு கொஞ்சம் நாட்கள் பிடிக்கும். ஆனால், அதுவே நிரந்தர தீர்வையும் தரும்.

முதலில் ஏன் பருக்கள் வருகின்றன? அதை இயற்கையான முறையில் தீர்ப்பது எப்படி என்பதைப் பார்ப்போம் வாங்க.

pimples natural remedies


எப்படி பரு வருகிறது?

அடிப்படையில் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால், அது வியர்வை மூலமாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் கொழுப்புப் பொருளானது வியர்வை மூலம் வெளியேறாமல் முகத்தில் தேங்கும். அவ்வாறு தேங்கும் கொழுப்பு படிமங்களே பருவாக உருமாறுகின்றன. அதேபோல முகத்தை நன்றாக கழுவிய பின்னரே முகத்துக்கு பௌடர் போடவேண்டும். அவ்வாறு முகத்தை கழுவாமல் பௌடர் போடுவதால், வியர்வையோடு பௌடர் படிமங்கலாகத் தேங்கி முகப்பருவை உருவாக்கும்.

முகப்பரு வந்து விட்டால் அதை நகம் படாமல் பாதுக்காப்பது அவசியம். கிள்ளினால் அது சீழ் பிடித்து பெரிதாகும். பின்னர் அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டும். கிள்ளாமல் விட்டாலே முகப்பரு மறையும்.

pimples natural remedies


முகப்பரு வராமல் எப்படித் தடுக்கலாம் ?

முகப்பரு வந்து விட்டால் அதை கிள்ளக் கூடாது. அத்துடன் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணையில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆகவே அவைகளை சாப்பிடக் கூடாது.

பரு உருவாக இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல். இந்த மலச் சிக்கலை போக்க தினமும் உணவில் கீரை மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர ஒருநாளைக்கு குறைந்தது எட்டு முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

அடிப்படையில் ஆரோக்யமான தூக்கத்தை கடை பிடிப்பது நல்லது. பச்சைத் தண்ணீரில் குளிப்பது நல்லது. மேலும் அதிகம் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

pimples natural remedies


முகப்பரு வராமல் தடுப்பதற்கான இயற்கைமுறை வழிகள்

1. ஒரு வேளை முகப்பரு பெருத்து பழுத்து விட்டால் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சளை அரைத்து அதைச் சூடாகக் கிளறி, முகப்பரு மீது தடவவேண்டும். பிறகு காலையில் சோப்பு போட்டு சற்று சூடான நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.

2. பயத்தம் பருப்பு உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் எந்த தோல் சம்பந்தமான வியாதியும் நம்மை நெருங்காது.

3. ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளித்தாலும் பரு உண்டாவதை தடுக்கலாம்.

4. செயற்கையான க்ரீம், பவுடர் இவற்றுக்குப் பதிலாக, துளி பாலேடு முகத்தில் தடவிக் கொண்டு, பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக மெருகேறி இருக்கும்.

5. தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்னை வராது.


pimples natural remedies

6. மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்த்து குளிர்ந்த நீரால் மட்டுமே முகத்தைக் கழுவ வேண்டும்.

7. தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயிறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.

8. தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும்.

9. காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.

Updated On: 13 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!